En  |  සිං



டிஜிட்டல் கையொப்பத்துடன் ஆவணங்களில் எளிதாக கையொப்பமிட்டு பகிருங்கள்.

LankaSign உடன் காகித கையாடல்கள் இல்லாதவொரு உலகின் சௌகரியத்தினை அனுபவியுங்கள். எமது டிஜிட்டல் கையொப்பத் தீர்வுகளானவை ஆவணங்களில் கையொப்பமிடுவதை எளிதாக்குவதனூடாக உங்களது ஊழியர்கள், கூட்டாளர்கள், வாடிக்கையாளர்களுடனான தினசரி செயல்பாடுகளை மேம்படுத்தி, நிறுவனத்தை புரட்சிகரமானதொரு பாதைக்கு இட்டுச் செல்கிறது.

டிஜிட்டல் கையொப்பம் என்றால் என்ன?

டிஜிட்டல் கையொப்பம் என்பது டிஜிட்டல் சான்றிதழால் பலப்படுத்தப்படும் ஒரு மின்னணு கையொப்பமாகும். ஒவ்வொரு கையொப்பமும் டிஜிட்டல் சான்றிதழால் இயக்கப்பட்டு, பொது விசை குறியாக்கத்தின் மூலம் சரிபார்க்கப்படும் தனித்துவமான குறியீட்டை குறித்து நிற்கின்றது. இது மின்னணு முறையில் அனுப்பப்படும் ஒவ்வொரு ஆவணத்தினதும் உண்மைத் தன்மையையும் நம்பகமான மூலத்திலிருந்து கிடைக்கப்பெறுகிறமையையும் உறுதி செய்கிறது. LankaSign டிஜிட்டல் கையொப்பங்களுடன் உங்கள் நிதி நிறுவனத்தால் நிகழ்த்தப்படுகின்ற தகவல் தொடர்புகளின் ரகசியத்தன்மை, நாணயம் மற்றும் துல்லியம் என்பன உறுதிப்படுத்தப்படும். இதனூடாக உங்கள் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக நிகழ்வதையும் வணிகத்தின் தரவுகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

டிஜிட்டல் கையொப்பங்களிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் அனுகூலங்கள்

நம்பகமானது மற்றும் தரநிலைகளுக்குட்பட்டது

LankaSign கையொப்பங்கள் அதி உயர் பாதுகாப்புத் தரங்களைப் பேணுகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனையும் பாதுகாப்பானதாகவும் தரநிலைகளுக்குட்பட்டதாகவும் இருப்பது உறுதி செய்யப்படுகின்றது.

பாதுகாப்பானது

டிஜிட்டல் கையொப்பங்கள், மேம்பட்ட குறியீட்டு நுட்பங்களைக் கொண்டு உங்கள் ஆவணங்களைப் பாதுகாப்பாக பேணுகின்றன. இதனால் அவை எவ்வகையிலும் பாதிப்புகளுக்கு உட்பட மாட்டா.

பயனருக்குத் தனித்துவமானது

உங்கள் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தைப் பயன்படுத்தி உங்கள் சான்றுகளைச் சரிபார்க்கவும், டிஜிட்டல் கையொப்பத்தின் போது உங்கள் கையொப்பத்தை அங்கீகரிக்கவும் முடியும்.

உங்கள் வணிகம் LankaSign டிஜிட்டல் கையொப்பங்களை ஏற்க வேண்டியதன் தேவைகள்

  • சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது
    இது இலங்கையில் தேசிய சான்றளிப்பு அதிகாரசபை பணிக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட முதலாவதும் ஒரே அங்கீகரிக்கப்பட்ட சான்றளிப்பு சேவை வழங்குநரும் (CPS) ஆகும்.
  • இது மின்னணு பரிவர்த்தனைகள் சட்டத்துடன் இணங்குகின்றமையால் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
  • பாதிப்புக்குற்படாத இணையற்றத் தொழில்நுட்பங்களுடன் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களைப் பின்பற்றுகிறது.
  • ISO 27001:2013 சான்றளிக்கப்பட்டது.
  • வெப் டிரஸ்ட் சான்றளிக்கப்பட்டது.
  • இராணுவ தர பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தி 24x7 கண்காணிக்கப்பட்ட தரவு மையங்கள்.
  • பயனருக்கு பரிச்சயமானது
  • கணினிகள், மடிக்கணினிகள், ஆண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல் சாதனங்களை ஆதரிக்கிறது
  • குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளமுடிதல்
  • உங்கள் வணிகத்திற்கு அதிக செயல்திறனைக் கொண்டுவருவதனூடாக நேரத்தை சேமிக்கின்றது
  • நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் செலவுகளைச் சிக்கனப்படுத்துகின்றது
  • உங்கள் வேலைகளை இலகுவாக்கி நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது
  • பணிகளை வினைத்திறனுடனும், தடையின்றியும் முகாமைத்துவம் செய்ய உதவுகின்றது.

உங்கள் ஆவணக் கையொப்பத் தீர்வைத் தேர்வு செய்யுங்கள்

தேசிய மற்றும் சர்வதேச அளவில் எமது ஆவணக் கையொப்பச் சான்றிதழ் தீர்வுகள் பரவலாக நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உங்களது தேவைகளுக்கேற்ற உரிய தீர்வைத் தேர்ந்தெடுங்கள்.

ஹார்ட் டோக்கன் (Hard Token)

காண்க

சாஃப்ட் டோக்கன் (Soft Token)

காண்க

மற்றொரு தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander