En  |  සිං



காசோலைகளை தடைகளேதுமில்லாமல் அனுமதிப்பதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வினைத்திறனை அனுபவியுங்கள்

காசோலை சரிபார்ப்பு(CITS)

காசோலை வ் சரிபார்ப்பு ர்வு என்பது, காசோலைகளின் பௌதீக சமர்ப்பிப்பை மின்னணு தகவல்களாக மாற்றியமைத்து பட அடிப்படையில் சமர்ப்பிக்கும் ஒரு காசோலை தீர்வு முறையாகும். இதன் ஊடாக காசோலை தீர்வுகளில் காசோலைகளின் பௌதீக கையாடல்கள் நீக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடைய காலத்தாமதங்கள் குறைக்கப்படுகின்றன. மேலும், இது நாடு முழுவதும் காசோலை தீர்வு செயல்முறையை துரிதப்படுத்தி உள்நாட்டில் இயங்குகின்ற வங்கிகளுக்கிடையிலான ரூபாய் காசோலைகள் மற்றும் ரூபாய் வரைவுகளை உடனடியாக தீர்க்க உதவுகின்றது.

காசோலை சரிபார்ப்பு அனைத்து வங்கிகளினதும் செயலாக்க வினைத்திறனை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், பங்கேற்கும் அங்கத்தவ வங்கிகளுக்குப் பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தவும் வழி விடுகின்றது. இது செயல்முறைக்குள்ளாக்கப்பட்ட அல்லது சேமிக்கப்பட்ட காசோலை படங்களுக்கான விரைவான மற்றும் வசதியான அணுகலை பெற கைக்கொடுக்கின்றது.

இத்தகைய மேம்பட்ட பட அடிப்படையிலான தீர்வு முறையை நாடு முழுவதிலும் செயற்படுத்தி வெற்றிகண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை தெற்காசியாவில் முதலாவது நாடாகவும் உலகளவில் இரண்டாவது நாடாகவும் திகழ்கின்றது. காசோலை சரிபார்ப்பு ஆனது 2005 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க கட்டணம் மற்றும் தீர்வு முறைகள் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.

உங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • டிஜிட்டல் படங்கள் பயன்படுத்தப்படுவதனால் விரைவான தீர்வினை அனுபவிக்க முடியும்..
  • பாரம்பரிய காசோலை சரிபார்ப்பு முறைகளின் போது நிகழ்கின்ற மோசடிகள் டிஜிட்டல் பட அமைப்பிலான தீர்வு செயன்முறையின் போது நீக்கப்படுகின்றன.
  • காசோலைகளை வங்கிகளுக்கு இடையே பரிமாற்ற டிஜிட்டல் படங்கள் பயன்படுத்தப்படுவதால், காசோலையை தொலைக்க நேரிடாது.
  • உள்நாட்டு பூசல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது ஏற்படும் சில நிமிடநேர தடைப்பட்ட மின்னியல் தரவு பரிமாற்றங்களால் நேரும் இடர்களுக்கான குறைந்த சாத்தியக்கூறுகள்.
  • காசோலைகளை எளிதாக கண்காணிக்கவும், பதிவு செய்யவும் முடியும்.
  • மின்னணு செயலாக்கம் காரணமாக காசோலை அனுப்பும் நேரம் நீட்டிக்கப்படுவதால், வங்கி சேவை நேரமும் நீட்டிக்கப்படுகிறது. 
  •  எதிர்காலத்தில் காசோலைகள் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், மின்னணு ஆவணங்களில் இருந்து அவற்றை எளிதாக மீட்டெடுக்கலாம்.

காசோலை உங்கள் வங்கியினால் மறுக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?

உங்கள் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட காசோலை செலுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டால்,

  1. காசோலைக்குப் பதிலாக நீங்கள் மறுக்கப்பட்ட காசோலை அறிவிப்பொன்றை (CRN) பெற்றுக்கொள்வீர்கள். மறுக்கப்பட்ட காசோலை அறிவிப்பென்பது முன்வைக்கப்பட்ட காசோலையின் சட்டபூர்வ மாற்றீடாகும்.
  2. அசல் காசோலை வைப்பிலிடப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்கு மறுக்கப்பட்ட காசோலை அறிவிப்பு செல்லுபடியாகும்.
  3. சமர்ப்பிக்கும் வங்கி அச்சிடப்பட்ட மறுக்கப்பட்ட காசோலை அறிவிப்பை உங்களுக்குத் திருப்பித் தர வேண்டும். காசோலை ஏன் திருப்பி அனுப்பப்பட்டது என்பதையும், மறுக்கப்பட்ட காசோலை அறிவிப்பை மீண்டும் வங்கியில் சமர்ப்பிக்க முடியுமா என்பதையும் தீர்மானிக்க மறுக்கப்பட்ட காசோலை அறிவிப்பில் பகுதி C ஐ நீங்கள் பார்க்க வேண்டும்.
  4. மீண்டும் சமர்ப்பிக்க முடியாத மறுக்கப்பட்ட காசோலை அறிவிப்பைப் பெற்றால், காசோலை வழங்கியவரிடமிருந்து புதிய காசோலைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். பணம் செலுத்தப்படாத காசோலைகள் போன்ற எதிர்பாராத சிக்கல்களைத் தடுக்க உங்கள் நிதியின் நிலையை கண்காணிப்பது அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

காசோலையை எப்படி எழுதுவது?

நீங்கள் செய்யவேண்டியவை,

  • திகதி, இலக்கங்களிலும் எழுத்துக்களிலும் எழுதப்பட்டத் தொகை, பெறுநரின் பெயர் மற்றும் தேவையான கையொப்பம் /கையொப்பங்கள் என அனைத்து முக்கியமான தகவல்களையும் உள்ளடக்கிய காசோலையினை வரையுங்கள்.
  • காசோலையினை எழுத கருமையான மையினை பயன்படுத்துங்கள். 
  • காசோலையினை அச்சிடத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் வரை எழுத்துக்கள் நீடிக்குமாறு அச்சிடுங்கள். 
  • திருத்தங்களுடன் கூடிய காசோலைகளை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
  • காசோலையில் காணப்படும் எந்தவொரு தகவலையும் சுற்றி வட்டமிடுதலையோ அல்லது அடிக்கோடு வரைவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள். 
  • காசோலையில் காந்த மையினால் குறியாக்கப்பட்ட எழுத்துக்கள் சேதமடையும் வகையில் காசோலைகள் மடிக்கப்படுவதையோ கசக்கப்படுவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  • காந்த மையினால் குறியாக்கப்பட்ட எழுத்துக்களை சேதப்படுத்தும் வகையில் எழுதுதல் மற்றும் குறியீடுகளை இடுதல் போன்றவற்றைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
  • காசோலையின் முகப்பில் உள்ள உள்ளடக்கத்தை மாற்றவோ அழிக்கவோ செய்யாதீர்கள்.

நிதி நிறுவனங்கள் தற்போது CITS உடன் கைசாத்திட்டுள்ளன.

வழமையான கேள்வி & பதில்கள்

காசோலை என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை பணம் பெறுபவர் அல்லது நிறுவனத்தின் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கு பணம் செலுத்துமாறு வங்கிக்கு வழங்கப்படும் எழுத்துப்பூர்வ உத்தரவு ஆகும். இது உங்கள் கணக்கிலிருந்து வேறொருவரின் கணக்கிற்கு பணத்தை மாற்ற வங்கிக்கு முறையாக அறிவிக்கும் ஒரு வழியாகும்.

காசோலைகள், காசோலை தீர்வு மையத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ளும் LankaPay இற்கு சென்ற பின் ஒரு வேலை நாளில் பொதுவாக தீர்வாகும்.

வங்கிகள் காசோலை தீர்வுக்கு தரகு கட்டணங்கள் மற்றும் பிற செயலாக்க அறவீடுகள் போன்ற கட்டணங்களை வசூலிக்கலாம். இந்த கட்டணங்கள் வங்கிகளுக்கு வங்கி மாறுபடலாம்.

ஒரு காசோலையில் அதை எழுதியவர் (வரைபவர்), எந்த வங்கியில் வரையறுக்கப்பட்டுள்ளது (வரையும் வங்கி), யாருக்காக (பெறுநர்), தொகை, திகதி மற்றும் கையொப்பம் போன்ற அம்சங்கள் அடிப்படையானதாகும்.

ஆம், இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட காசோலைகள் செல்லுபடியாகும்.

உங்கள் காசோலை தொலைந்தால் அல்லது திருடப்பட்டால், அதை வெளியிட்ட வங்கிக்கு உடனடியாக அறிவிக்கவும். அவர்களால் அனுமதியில்லாத பயன்பாட்டைத் தவிர்க்க காசோலையிலிருந்து பணம் செலுத்தப்படுவதை நிறுத்த முடியும்.

'Pay' வரியில் பெறுநரின் முழு பெயரை எழுதவும். காசோலை எழுதப்படுவது அந்த நபருக்கே என்றால், 'Bearer' என்ற வார்த்தையின் மேல் கிறுக்கி, மேல் இடது மூலையில் இரட்டை கோடு வரையவும்.

ஆம், திரும்பிய காசோலைகள், போலி காசோலைகள் அல்லது தொலைந்த/திருடப்பட்ட காசோலைகள் போன்றவை சமர்ப்பிக்கப்படுவதற்கான சில அபாயங்கள் காணப்படுகின்றன.

பணம் அல்லது மின்னணு கட்டணங்களுக்குப் பதிலாக, காசோலை என்பது ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துவதற்காக சமர்ப்பிக்கப்படும் எழுதபட்ட வாக்குறுதியாகும்.

காசோலைகள் பொதுவாக அவை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

தீர்வு முறைமைகள் மின்னணு படங்களைப் பயன்படுத்துகின்றன, எனவே நீங்கள் வழங்கும் வங்கிக்கு காசோலையை கையளித்த பிறகு அது பௌதீக காசோலை தீர்வு செயல்முறையிலிருந்து நீக்கப்படுகிறது.

ஆம், ஒரு காசோலையின் சான்றளிக்கப்பட்ட படம் நீதிமன்றத்தில் ஏற்கப்படும்.

உங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander