En  |  සිං



லங்கா பெ அட்டை

லங்கா பெ அட்டை என்பது இலங்கையின் தனித்துவமான உள்நாட்டு கட்டண அட்டையாகும். சர்வதேச அட்டை வலையமைப்புகளுடன் இணைக்கப்பட்ட கூட்டிணைவு கட்டண அட்டைகளை வழங்குவதன் மூலம், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நம்பகத்தன்மைக்கான சர்வதேச ரீதியில் ஏற்கப்பட்ட விதிமுறைகளுடன் இணங்கி, உறுப்பினர்களுக்கான சிறந்த தயாரிப்பாக அமைகின்றது.

லங்கா பெ அட்டையின் சாராம்சமாக அமைவது தேசிய நிதி நிறுவனங்களின் அட்டை சலுகைகளின் செயல்பாடு மற்றும் ஏற்றுக்கொள்ளலை உலகளவில் விரிவுபடுத்துவதில் உள்ளது. இது எண்ணற்ற ATMகள் மற்றும் வணிக விற்பனை நிலையங்களை சர்வதேச அளவில் உள்ளடக்கிய வலையமைப்புகளுடன் பயன்படுத்துகிறது. இந்த பிரயத்தனம் லங்கா பெ அட்டையின் உலகளாவிய பயன்பாட்டை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பௌதீக பணப்புழக்கமற்ற சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கான பரந்த கண்ணோட்டத்தில் நோக்கும் போது லங்கா பெ அட்டை நிதி நிறுவனங்களுக்கு ஒரு தன்னிகரற்ற கருவியாகத் திகழ்கின்றது. இது இலங்கை, டிஜிட்டல் கட்டண உலகின் எதிர்காலத்திற்குள் தன் காட்தடத்தினை பதிக்கத் தகுந்ததொரு சிறந்த சூழலை உருவாக்கித் தருகின்றது.

நிதி நிறுவனங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • உலகளாவிய ஏற்பு : தற்போது, லங்கா பெ அட்டை உலகளவில் JCB வலையமைப்பின் கீழ் இயங்குகின்ற ATMகள் மற்றும் வணிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்த உலகளாவிய ஏற்பு, JCB அட்டைகள் பரவலாக உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்களுடன் எமது வணிகங்களால் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடிகின்றமையை உறுதி செய்கின்றது.
  • EMV செயல்படுத்தப்பட்டது : EMVCo நிறுவனத்தால் அமைக்கப்பட்ட மிக உயர்ந்த சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளைப் பின்பற்றி, லங்கா பெ அட்டையில் EMV செயல்படுத்தப்பட்டுள்ளது. இது வணிகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகிய இருதரப்பினருக்கும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதி செய்வதனூடாக மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டின் அபாயத்தைக் குறைக்கிறது.
  • மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவம்: JCB International Co., Ltd உடனான கூட்டாண்மை, அட்டைதாரர்களுக்கு பல்வேறு சர்வதேச சேவைகள் மற்றும் சலுகைகளை அணுகுவதற்கு வாசல் திறக்கின்றது. இது வாடிக்கையாளர்களுக்கு கட்டண அனுபவத்தை வளப்படுத்துவது மட்டுமல்லாமல், குறிப்பாக சுற்றுலாத் துறையை சார்ந்திருக்கும் வணிகர்களுக்கு அதிக வாடிக்கையாளர்களையும் பெற்றுக்கொடுக்கின்றது.
  • தேசிய கட்டண வலையமைப்பிற்கான பங்களிப்பு : லங்கா பெ அட்டையை ஏற்றுக்கொள்வதன் மூலம், வணிகங்கள் இலங்கையின் தேசிய கட்டண வலையமைப்பின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. இது பௌதீக பணப்புலக்கமற்ற சமூகத்தை நோக்கி நகர நாட்டின் தற்போதைய முயற்சிகளில் ஓர் உன்னதமான முயற்சியாக ஆவதுடன் டிஜிட்டல் கட்டண தீர்வுகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதை ஊக்குவிக்கிறது.

இன்றளவில் லங்கா பெ அட்டையுடன் கைகோர்த்துள்ள நிதி நிறுவனங்கள்

லங்கா பெ அட்டையுடனான கூட்டிணைவு கூட்டாண்மைகள்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander