We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
வாடிக்கையாளார்களின் கணக்குக்கு வரவு வைக்கப்பட மூன்று வாரங்களுக்கும் அதிகமாக காலமெடுக்கும் அமெரிக்க காசோலை/ வரைவு தீர்வு செயல்முறையானது நிதி நிறுவனங்களின் சூழலில் பாரியதொரு சவாலை ஏற்படுத்தியிருந்தது. வெளிநாடுகளில் அமைந்துள்ள 'Nostro' வங்கிகளுக்கு அமெரிக்க டாலர் வரைவுகளை அனுப்ப வேண்டியதன் அவசியமே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த சிக்கலான செயல்முறைக்கு தீர்வாக, 2002 ஆம் ஆண்டு LankaPay (Pvt) Ltd நிறுவனம் அமெரிக்க டாலர் வரைவு தீர்வு முறையை அறிமுகப்படுத்தியது. இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற வணிக வங்கிகளால் பெற்றுக்கொடுக்கப்பட்ட அமெரிக்க டாலர் வரைவுகளை தீர்வு செய்வதில், துவக்கத்தில் பகுதியளவில் கணினிமயமாக்கப்பட்ட இந்த புத்தாக்கம் பாரியதொரு புரட்சியை ஏற்படுத்தியது. இப்புதிய படைப்புடன், அமெரிக்க டாலர் வரைவு தீர்வுக்கு எடுத்த நேரம் மூன்று வாரங்களில் இருந்து வெறும் நான்கு நாட்களுக்குக் குறைக்கப்பட்டதுடன் பங்கேற்கும் வங்கிகளின் கிரயங்களும் கணிசமான அளவில் குறைக்கப்பட்டது.
புத்தாக்கம் மற்றும் வினைதிறனுக்கான எமது உயர்ந்த அர்ப்பணிப்புக்களை பிரதிபலிக்கும் வகையில், 2019 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதியன்று LankaPay நிறுவனம் அமெரிக்க டாலர் வரைவு கொடுப்பனவு (UITS) முறையை அறிமுகப்படுத்தியது. வரைவுகளை கையாளும் இந்த செயல்முறையில் அமெரிக்க டாலர் வரைவு கொடுப்பனவு ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுள்ளதுடன் வங்கிகளுக்கு இடையே டிஜிட்டல் காசோலை படங்களை பரிமாற்றம் செய்வதை இது எளிதாக்கியுள்ளது. காசோலைகளை பௌதீக கையாடல்களுடன் நகர்த்த வேண்டிய அவசியத்தை நீக்குவதன் மூலம், காலத்தாமதங்களையும் செயல்பாட்டு கிரயங்களையும் கணிசமான அளவு குறைக்கின்றது. அமெரிக்க டாலர் வரைவு கொடுப்பனவு நடைமுறைக்கு வந்ததன் பின்னர் சரிபார்ப்பு செயன்முறை வெறும் ஒரே வேலை நாளுக்குத் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இது பரிவர்த்தனைகள் உரிய நேரத்தில் மெற்கொள்ளப்படுவதனை உறுதி செய்கிறது.
அமெரிக்க டாலர் வரைவிற்கான தீர்வு வங்கியாக இலங்கை வங்கி (BOC) நியமிக்கப்பட்டுள்ளது. இது பங்கேற்கும் நிறுவனங்களுக்கு தடையற்ற பரிவர்த்தனை தீர்வுகளை உறுதி செய்கின்றது. தற்போதையளவில், 22 உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உள்நாட்டு அமெரிக்க டாலர் காசோலை/காசோலை வரைவு சரிபார்ப்பு வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வெற்றிகரமான முன்னெடுப்பானது நிதித் துறையில் எமது புதுமைமிக்கத் தீர்வின் பரவலான ஏற்றுக்கொள்ளலை பிரதிபளிக்கின்றது.
பின்வரும் காலகட்டங்களில் UITS தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
தீர்வு அமர்வு | தீர்வு சுற்று | சாரள திறப்பு நேரம் | சாரள மூடு நேரம் | செயல்பாடு |
---|---|---|---|---|
பிரதான சரிபார்ப்பு | வெளிநோக்கியது | 03.00 p.m | 05.30 p.m. | நிதி நிறுவனங்கள் வெளிநோக்கிய தரவை LankaPay இற்கு சமர்ப்பிக்கின்றன |
உள்நோக்கியது | 06.30 p.m. | 09.30 a.m.(அடுத்த வேலை நாள்) | LankaPay உள்நோக்கியத் தரவை நிதி நிறுவனங்களுக்கும் தீர்வு செயற்பாடுகளுக்காக தீர்வு வங்கிக்கும் சமர்ப்பிக்கும். | |
மறுப்பு சரிபார்ப்பு | வெளிநோக்கிய மறுப்பு | 10.00 a.m. | 11.30 a.m. | நிதி நிறுவனங்கள் மறுப்புத் தரவுகளை LankaPay இர்கு சமர்ப்பிக்கின்றன |
உள்நோக்கிய மறுப்பு | 12:30 p.m. | 02:30 p.m. | LankaPay உள்நோக்கிய மறுப்புத் தரவுகளை நிதி நிறுவனங்களுக்கும் தீர்வு செயற்பாடுகளுக்காக தீர்வு வங்கிக்கும் சமர்ப்பிக்கும். |
வருடம் | காலாண்டு | அமெரிக்க டாலர் காசோலை/ வரைவு அளவு | அமெரிக்க டாலர் காசோலை/ வரைவு மதிப்பு (USD) |
---|---|---|---|
2021 | Q1 | 7.6 | 68 மில்லியன் |
Q2 | 6.3 | 51 மில்லியன் | |
Q3 | 7.2 | 64 மில்லியன் | |
Q4 | 7.3 | 70 மில்லியன் | |
2022 | Q1 | 7.9 | 75 மில்லியன் |
Q2 | 10.9 | 101 மில்லியன் | |
Q3 | 15.6 | 138 மில்லியன் | |
Q4 | 16.1 | 119 மில்லியன் | |
2023 | Q1 | 16.5 | 99 மில்லியன் |
Q2 | 15.8 | 94 மில்லியன் | |
Q3 | 16.9 | 95 மில்லியன் | |
Q4 | 17.6 | 104 மில்லியன் |
இலங்கையின் சான்றளிக்கப்பட்ட வணிக வங்கிகள்
இலங்கையின் சான்றளிக்கப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் பரிமாற்ற மனைகள்
USD வரைவு அல்லது காசோலையின் நிலையான அளவு 3.5 அங்குல உயரமும் 7 அங்குல அகலமும் ஆகும்.
இது ஒரு வணிக நாளுக்குள் செயல்படுத்தப்படும். பின்னர் அடுத்த வேலை நாளில் காசோலை ரியலைஸ் செய்யப்படும்.
வங்கிகளால் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க முடியும். CD முறையிலான சமர்ப்பிப்பு அவசரவேளைகளின் போது செயற்படுத்தப்படும்.
LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.