En  |  සිං



அமெரிக்க டாலர் ஆன்லைன் கொடுப்பனவு

மாற்றத்திற்குற்படும் இந்த வணிக சூழலில் வினைத்திறன் மிக்க நிதி தீர்வுகளே வெற்றிக்குக் காரணமாகும். இதற்காகவே உங்களுடைய வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இலங்கையிலுள்ள வங்கிகளுக்கிடையிலான அமெரிக்க டாலர் ஆன்லைன் கொடுப்பனவு முறைமை அறிமுகமாகிறது. இந்த புத்தாக்கம் நிறைந்த முறைமை, உங்கள் நிறுவனத்திலிருந்து பிற நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு அமெரிக்க டாலரை எளிதாக செலுத்துவதற்கான வசதியை உங்கள் வங்கியினூடாக பெற்றுக்கொடுக்கின்றது.

இந்த கட்டண முறையை ஏற்றுக்கொள்வதன் மூலம், இலங்கையிலிருந்தான அந்நிய செலாவணி வெளியேற்றங்களை குறைப்பதில் உங்கள் நிறுவனமும் முக்கிய பங்களிக்கின்றது. அதே சமயம் குறைந்த பரிவர்த்தனை செயலாக்க அறவீடுகளாலும் பலனடைகின்றது. பாரம்பரிய கட்டண முறைகளில் நிலவுகின்ற சிக்கல்களை நீக்கி, இலங்கையிலுள்ள வங்கிகளுக்கிடையிலான அமெரிக்க டாலர் ஆன்லைன் கொடுப்பனவு முறைமையானது ஒரு நவீனமயப்படுத்தப்பட்ட நேர்த்தியான தீர்வினை வழங்குகின்றது. இது உங்கள் வணிகத்திற்கு அதன் கட்டண செயல்முறைகளை மேம்படுத்தவும் செயல்பாட்டு வினைத்திறனை உயர்த்திக்கொள்வதற்கும் உதவுகிறது.

வணிகங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்.

  • அமெரிக்க டாலர்களை அதே நாளில் ஏனைய வங்கி கணக்குகளுக்கு இலகுவாக அனுப்புங்கள்.
  • வங்கி அறவீடுகளை நீக்கி குறைந்த பரிவர்த்தனை கட்டணங்களை அனுபவித்திடுங்கள்.
  • வங்கிகளுக்கிடையிலான உங்களது டாலர் பரிவர்த்தனைக்கான பாதுகாப்பினை அனுபவித்திடுங்கள்.
  • இலங்கையின் அந்நிய செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது.

நீங்கள் விரும்பிய நிதி நிறுவனங்களுக்கான அமெரிக்க டாலர் ஆன்லைன் கொடுப்பனவு முறைமையை கண்டறியுங்கள்.

காலாண்டு புள்ளிவிவரங்கள்

வருடம் காலாண்டு பரிவர்த்தனை அளவு(‘000’) பரிவர்த்தனை மதிப்பு(‘USD’)
2024 Q1 8.5 155 மில்லியன்
Q2 8.7 182 மில்லியன்
Q3 10.8 136 மில்லியன்

வியாபாரத்துக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander