We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
வியாபார உலகில் நேரம் என்பது பணமாகும், குறிப்பாக அமெரிக்க டொலர் வரைவு மற்றும் செக் கிளியரிங்கிற்கு வரும்போது வரலாற்று ரீதியாக> இந்த செயல்முறை நீண்டது> சர்வதேச பரிவர்த்தனைகளின் தேவை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க மூன்று வாரங்களுக்கு மேல் ஆகின்றது. இந்த சவாலை உணர்ந்து, LankaPay (Pvt) Ltd> USD Draft Clearing System ஐ 2002 இல் அறிமுகப்படுத்தியது, செயலாக்க நேரத்தை வெறும் நான்கு நாட்களாகக் குறைத்துள்ளது.
புதுமைக்கான எமது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து> லங்காபே 2019 இல் அமெரிக்க டொலர் வரைவு ஒன்லைன் படப் பரிமாற்ற அமைப்பை (UITS) அறிமுகப்படுத்தியது. வங்கிகளுக்கு இடையேயான வரைவுப் படங்களின் பரிமாற்றத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், மனித உடல் இயக்கத்தின் தேவையை நீக்கி, தாமதங்களைக் கணிசமாகக் குறைப்பதன் மூலம் UITS வரைவு செயலாக்கத்தில் புரட்சியை ஏற்படுத்துகின்றது. UITS உடன், அனுமதியானது ஒரு வேலை நாளுக்கு நெறிப்படுத்தப்பட்டுள்ளதுடன் வணிகங்களுக்கு விரைவான நிதி அணுகலை வழங்குகின்றது மற்றும் பணப்புழக்கத்தை மேம்படுத்துகின்றது.
தற்போது, 22 உரிமம் பெற்ற வணிக வங்கிகள் உள்நாட்டு USD வரைவோலை அல்லது செக் கிளியர் வலையமைப்பின் ஒரு பகுதியாக உள்ளன> வணிகங்களுக்கு துரிதமான, நம்பகமான கட்டண தீர்வை வழங்குகின்றன. உங்கள் வணிகத் தேவைகளுக்காக திறமையான USD வரைவு செயலாக்கத்திற்கான எதிர்காலத்தைத் கையாள லங்காபேவுடன் இணையுங்கள்.
ஒரு USD வரைவோலை அல்லது செக் திரும்பப் பெறப்பட்டால் அல்லது செலுத்தப்படாமல் இருப்பின் அதனை சேகரிக்கும் வங்கியால் உங்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும். திரும்பப் பெறுதல் அல்லது பணம் செலுத்தாததற்கான காரணத்தைக் கண்டறியவும்> அடுத்த படிகளுக்கான வழிமுறைகளைப் பெறவும் சேகரிக்கும் வங்கியிடம் பேசவும்.
ஆண்டு | காலாண்டு | அமெரிக்க டொலர் காசோலைகள்/வரைவுகள் தொகுதி ('000) | அமெரிக்க டொலர் காசோலைகள்ஃவரைவு மதிப்பு (USD) |
---|---|---|---|
2021 | Q1 | 7.6 | 68 Million |
Q2 | 6.3 | 51 Million | |
Q3 | 7.2 | 64 Million | |
Q4 | 7.3 | 70 Million | |
2022 | Q1 | 7.9 | 75 Million |
Q2 | 10.9 | 101 Million | |
Q3 | 15.6 | 138 Million | |
Q4 | 16.1 | 119 Million | |
2023 | Q1 | 16.5 | 99 Million |
Q2 | 15.8 | 94 Million | |
Q3 | 16.9 | 95 Million | |
Q4 | 17.6 | 104 Million | |
2024 | Q1 | 17.8 | 108 Million |
Q2 | 17 | 115 Million | |
Q3 | 18 | 145 Million |
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்