En  |  සිං



லங்கா பெ அட்டை

தனிநபர்களுக்கு லங்கா பெ அட்டைகளினூடாக உலகளாவிய ரீதியில் வியாபித்துள்ள வர்த்தகர்கள் மற்றும் ATMகளின் வலையமைப்பிற்கான பரந்த அணுகலை பெற்றுக்கொடுத்தல். இந்த அணுகுமுறை லங்கா பெ அட்டையின் உலகளாவிய பயன்பாட்டை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பயனர்களுக்கு நேரடியாக நன்மைகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்துகிறது. இலங்கையில் பௌதீக பணப்புழக்கமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு முக்கியமான மைல் கல்லாக இது திகழ்கிறது. மேலும் டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவித்து, நுகர்வோருக்கு ஒரு வினைத்திறன் மிக்க டிஜிட்டல் கட்டண சூழலமைப்பை உருவாக்குகிறது.

மேலும், தேசத்தின் அபிமானத்தை வலியுறுத்த லங்கா பெ அட்டையை பரவலாக பயன்படுத்துதல்; குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கப்பட்ட ATM பரிவர்த்தனை கட்டண அறவீடுகளுடனான சிக்கனமானதொரு தயாரிப்பாக லங்கா பெ அட்டையை முன்வைத்தல்; பல்வேறு கூட்டாண்மைகள் மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பரவலான ஏற்புத்தன்மையை உறுதி செய்தல் ஆகிய காரணங்களை செயற்படுத்துவதால் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முழுமையான சமூகப் பங்கேற்பைச் செயல்படுத்துவதற்கான எமது தொலைநோக்குப் பார்வை யதார்த்தமாக மாறி வருகிறது. இது மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் நிதி உள்ளடக்கங்களை கொண்டமைந்த ஓர் எதிர்காலத்தை நோக்கி இலங்கையை முன்னெடுத்துச் செல்கிறது.

உங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • எந்த ATM இலும் லங்கா பெ அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்கும்போது 15 ரூபா மட்டுமே வசூலிக்கப்படுகின்றது.
  • வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போது, JCB Co.Ltd (JCB) லோகோ காட்சிப்படுத்தப்பட்டுள்ள எந்த ATM அல்லது POS முனையத்திலும் லங்கா பெ அட்டையை பயன்படுத்தலாம்.

உங்கள் நிதி நிறுவனத்திற்கான லங்கா பெ அட்டையை கண்டறியுங்கள்

லங்கா பெ அட்டையுடனான கூட்டிணைவு கூட்டாண்மைகள்

உங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander