En  |  සිං



லங்கா ரெமிட்

உலகத்தின் எந்த திக்கிலுமிருந்து தனி நபர்கள் இலங்கைக்கு பணமனுப்பும் முறையினை மாற்றியமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கை புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை விரிவடைந்து வரும் நிலையில், நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் சௌகரியமும் நிறைந்த பணப் பரிவர்த்தனைத் தளமொன்றிற்கான கேள்வியும் அதிகரித்து வருகின்றது. லங்கா ரெமிட் வளர்ந்து வரும் இந்த தேவைக்கு ஒரு விரைவான, பயனர் தோழமையுடன் குறைந்த செலவுடனான தீர்வை வழங்கி முன்னிலை வகிக்கின்றது. சிரமமில்லாத பணப் பரிமாற்றங்களை இனி வரவேற்றிடுங்கள். இப்போது லங்கா ரெமிட் உங்கள் தோளுக்குத் தோளாக நிட்கும் போது, உங்கள் அருகில் இல்லாத அன்புக்குரியவர்களுடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் இணைந்திருங்கள்.

உங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • பணமனுப்புவதற்காக தரப்பட்டுள்ள சௌகரியமான பல்வேறு தெரிவுகள்.
  • சிறந்த மாற்று விகிதங்கள் மற்றும் குறைந்த கட்டணங்களை பெற்றுக்கொள்ள முடிதல்.
  • நிகழ் நேர மாற்று விகிதங்கள் மற்றும் அறவீடுகள் தொடர்பான உடனுக்குடனான தகவல்களை பெற்றுக்கொடுப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மைக்கு உத்தரவாதமளித்தல்.
  • வாடிக்கையாளர் தகவல்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு மேம்பட்ட குறியாக்க தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பை முன்னிலைப்படுத்துதல்.
  • அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் சேவை குழுவினூடாக சிறந்த வாடிக்கையாளர் ஆதரவை வழங்குதல்.

லங்கா ரெமிட் இன் சிறப்பம்சங்கள்

  • பணம் அனுப்புதல் - சிறந்த மாற்று விகிதங்கள் மற்றும் குறைந்த கட்டணங்களுடன் இலங்கையில் உள்ள உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பணம் அனுப்புங்கள்.
  • பட்டியல்களை செலுத்துதல் - உங்கள் பயன்பாட்டு பட்டியல்கள், காப்புறுதி தவணைகள் மற்றும் பிற பட்டியல்களை நேரடியாக செயலி மூலம் செலுத்துங்கள்.
  • E-Channelling - இலங்கையின் முன்னணி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடனான நியமனங்களை முன்பதிவு செய்யுங்கள்.
  • பரிசு - தியாகா (Thyaga) எனும் நம்பகமான பரிசு சேவை மூலம் இலங்கையில் உள்ள உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பரிசுகளை அனுப்புங்கள்.
  • பணப் பரிமாற்றத்தைக் கண்காணித்தல் - உங்கள் ரெமிட் இன் நிலையை உடனுக்குடன் கண்காணியுங்கள்.
  • நாணய மாற்று மனைகளை தேடுதல் - உங்கள் பணப் பரிமாற்றங்களுக்கு சிறந்த மாற்று விகிதங்களைக் கண்டறியுங்கள்.
  • கட்டண ஊடகங்கள் (அட்டை முகாமைத்துவம்) - கட்டண அட்டைகளைச் சேர்த்தல், திருத்துதல் மற்றும் நீக்குதல்.
  • நிகழ்ந்த பரிவர்த்தனைகளை பார்வையிட முடிதல் - உங்கள் நிகழ்ந்தேறிய பரிவர்த்தனை வரலாற்றை பார்வையிடுங்கள்; உங்கள் நிதிகளை நிர்வகியுங்கள்.
  • பயனாளிகளை நிர்வகித்தல் - பயனாளிகளை எளிதாகச் சேர்க்கவும், திருத்தவும் நீக்கவும் முடிதல்.
  • விளம்பர தோரணங்கள்/ பதாகைகளை சேர்த்தல்.
  • வரிச் சலுகை கோரிக்கை - வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூடுதல் சுங்கத்தீர்வையற்ற வரி சலுகை வசதியைக் கோருங்கள்.
  • பரிச்சயமான வடிவமைப்பு - லங்கா ரெமிட் செயலி வாடிக்கையாளர்களுகேற்ற சௌகரியமான முறையில் செயற்படுவதால், இடையூறுகளற்றதும் சிரமமில்லாததுமான அனுபவத்தை உறுதி செய்கிறது.
  • நிகழ் நேர நாணய மாற்று விகிதங்கள் - உங்கள் பணப் பரிமாற்றங்கள் குறித்து தெளிவான முடிவுகளை எடுப்பதற்காக நிகழ் நேர நாணய மாற்று விகிதங்கள் வழங்கும் அனுகூலங்களை அனுபவித்திடுங்கள்.
  • பல்வேறு கட்டணத் தெரிவுகள் - இது பயனர்கள் பணத்தை வசதியாக அனுப்ப உதவும் பல்வேறு கட்டணத் தெரிவுகளை லங்கா ரெமிட் பெற்றுக்கொடுக்கின்றது.
  • பாதுகாப்புக்கான உடன்பாடு - லங்கா ரெமிட், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உடன்படுதலின் முக்கியத்துவத்தை உணர்வதால், வாடிக்கையாளர் தகவல்களைப் பாதுகாக்க அதிநவீன குறியாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

லங்கா ரெமிட் உடன் இணைந்து செயற்படும் நிதி நிறுவனங்கள்

தற்போதைய IPG வழங்குநர்கள்

மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களுக்கு பணப் பரிமாற்ற சேவைகளைப் பெற்றுக்கொடுத்தல்.

வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள், அவர்களின் பயனாளிகள், மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கும் பகுதி நேர பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோர் இந்த செயலியை எளிதாகப் பயன்படுத்தலாம். இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் கூடிய இந்த செயலியை பயன்படுத்தி நம்பகத்தன்மையுடன் கூடிய பணப் பரிமாற்ற சேவையைப் பெறலாம்.

உங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander