En  |  සිං



அரசாங்க கட்டண செலுத்துதல்களை தடையின்றி எளிதாக்குவதனூடாக உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியை பெற்றுக்கொடுங்கள்.

லங்கா பெ அரச கட்டணத்தளம்

இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட லங்கா பெ அரச கட்டணத்தளமானது தன்னோடு இணைக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கு நேர்த்தியான நிகழ்நிலை பரிவர்த்தனைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. LankaPay இன் நிகழ்நேர நிதி பரிவர்த்தனை (CEFTS) இனால் பலப்படுத்தப்பட்டு, நிகழும் பரிவர்த்தனைகள் 24/7 அதே நேரத்தில் வரவு வைக்கப்படுகின்றன. இது வெளிப்படையான கட்டண உறுதிப்படுத்தல்கள் மற்றும் தரப்படுத்தப்பட்ட அறவீடுகளுடன் வினைத்திறனையும் சௌகரியத்தினையும் உறுதிப்படுத்துகின்றது. எம்மோடு இணைந்து அரச கட்டணங்களின் எதிர்காலத்தினை தழுவிடுங்கள்.

நிதி நிறுவனங்களுக்கான் அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • மேம்படுத்தப்பட்ட வினைத்திறன்: கட்டண செயற்பாடுகளை நெறிப்படுத்துதலானது நிதி நிறுவனங்களுக்கு பௌதீக கையாள்தல்களையும் செயலாக்க செலவுகளையும் குறைத்து நேர்த்தியான பரிவர்த்தனைகளை உறுதிபடுத்துகின்றது.
  • நிகழ் நேர பரிவர்த்தனைகள்: பரிவர்த்தனைகள் அதே நேரத்தில் 24/7 வரவு வைக்கப்படுவதால், நிதி நிறுவனங்களுக்கு உடனடியாக கட்டண உறுதிப்படுத்தல்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடிகின்றமை, சேவை வழங்கலின் தரம் மற்றும் விரைவான துலங்கல் திறனை மேம்படுத்துகின்றது.
  • மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் திருப்தி: லங்கா பெ அரச கட்டணத்தளம் பெற்றுக்கொடுக்கும் வசதி மற்றும் பாதுகாப்பு, ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களிடையே நிறைவான திருப்தி மற்றும் விசுவாசத்தை வளர்க்கின்றது.
  • தரப்படுத்தப்பட்ட கட்டணங்கள்: நிலையான பரிவர்த்தனை கட்டணங்கள் நாணயத்தினையும் வெளிப்படைத்தன்மையையும் ஊக்குவிக்கின்றமையால் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு செலவு குறைந்த கட்டண தீர்வுகளை வழங்க இடமமைக்கப்படுகின்றது.
  • போட்டி அனுகூலங்கள்: நிதி நிறுவனங்கள் புத்தாக்கமும் வினைத்திறனும் மிக்க அரச கட்டண தீர்வுகளை வழங்குவதன் மூலம் சந்தையில் தங்களை பிற போட்டியாளார்களிடமிருந்து வேறுபடுத்திக் கொள்ளலாம். இது வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் வழிவகுக்கும்.

லங்கா பெ அரச கட்டணத்தளத்துடன் கைக்கோர்த்துள்ள அரச நிறுவனங்கள்

  • இலங்கை சுங்கம் 
  • உள்நாட்டு இறைவரித்திணக்களம்
  • ஊழியர் சேமலாப நிதியம்
  • முதலீட்டுச் சபை
  • இலங்கை துறைமுக அதிகார சபை (கப்பல்/ சரக்கு & நுழைவு அனுமதி)
  • இலங்கைத் தரநிர்ணய கட்டளைகள் நிறுவனம்
  • இறக்குகுமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம்
  • வணிகத் திணைக்களம்
  • மத்திய வைப்பக சேவைகள் அமைப்பு
  • உள்ளூராட்சி சபைகள் மற்றும் அரசாங்க அமைப்புகள்

மேலதிக தகவல்களுக்கு LankaPay இன் உதவியை நாடுங்கள்


மேம்பட்ட தேடல்

எண் நிதி நிறுவனம் இணைய வங்கிப்பணி மொபைல் வங்கிப்பணி கவுண்டரில் நேரடியாக

தேடல் முடிவு எதுவும் இல்லை

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander