En  |  සිං



"டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி"

2022 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட LankaPay இன் தொலைநோக்கானது உலகளாவிய விரிவாக்கத்துடனான தனது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பரிவர்த்தனைகளின் புதிய சகாப்தத்தை பறைசாற்றுகின்றது. அதன் வலுவான உள்கட்டமைப்புடனும் புதுமையான தீர்வுகளுடனும் LankaPay ஆனது இலங்கையின் நிதியியல் சூழலை உலகத்துடன் இணைக்கின்றது. புவியியல் தடைகளைத் தாண்டி. நவீன தொழில்நுட்பம் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளைப் பயன்படுத்தி, LankaPay தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் எல்லைகளைக் கடந்த பரிவர்த்தனைகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் செலவு குறைந்த முறையிலும் வழிநடத்த உதவுகின்றது. மேலும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி சர்வதேச ஒத்துழைப்பை வளப்படுத்துகின்றது. LankaPay தனது செல்வாக்கை விரிவுபடுத்தியவாறு உலகளாவிய நிதி நிலப்பரப்பில் இலங்கையின் நிலையையும் அதன் டிஜிட்டல் கட்டண உள்கட்டமைபையும் மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

JCB சர்வதேச (இன்டர்நேஷனல்) வரையறுக்கப்பட்ட நிறுவனம் (ஜப்பான்/சர்வதேசம்)

LankaPay மற்றும் JCB சர்வதேச வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஆகியவற்றின் கூட்டாண்மையானது LankaPay இன் முதன்மையான தயாரிப்பான லங்கா பெ அட்டைக்கான LankaPay வலையமைப்பின் ஊடான கடல் கடந்த ATM/POS ஏற்புகளுக்கு வழிவகுக்கின்றது.

2017

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) அனுமதியுடன் தேசிய கட்டண அட்டைத் திட்டத்தின் (NCS) கீழ் இலங்கையின் உள்நாட்டு கட்டண அட்டையை வழங்குவதற்காக JCB இன்டர்நேஷனலுடன் கூட்டு சேர்ந்தது.

2019

JCB இன்டர்நேஷனலுடன் இணைந்து இலங்கையின் தேசிய கட்டண அட்டையான லங்கா பெ அட்டையின் வர்த்தக ரீதியிலான அங்குரார்ப்பணம் மேற்கொள்ளப்பட்டது.

2021

JCB இன்டர்நேஷனல் அட்டைதாரர்களுக்கு LankaPay ATM வலையமைப்பு மற்றும் POS முனைய வலையமைப்பு ஏற்பு வசதி.

2023

கொமர்ஷல் வங்கி PLC உடன் இணைந்து முதல் லங்கா பெ கிரெடிட் அட்டையின் வர்த்தக ரீதியிலான அங்குரார்ப்பணம் மேற்கொள்ளப்பட்டது.

UnionPay International (சீனா/சர்வதேசம்)

LankaPay மற்றும் Tenpay Payments கூட்டாண்மையானது LankaPay வலையமைப்பு மூலம் எல்லைகளைக் கடந்த QR ஏற்பினை உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்துகின்றது. LankaPay மற்றும் UnionPay International இன் கூட்டாண்மையானது உலகளாவிய கூட்டுறவுகளை விரிவுபடுத்தி LankaPay வலையமைப்பின் ஊடாக கடல் கடந்த QR/ATM/POS ஏற்பினை பரவலாக்கவும், LankaPayஇன் முதன்மையான தயாரிப்பான லங்கா பெ அட்டையின் மூலோபாய கூட்டாளராக இந்த நிறுவனங்களை அமைத்துக்கொள்ளவும் வழிவகுக்கின்றது.

2022

LANKAQR மூலம் இலங்கையில் QR ஏற்பு வசதியை நடைமுறைப்படுத்துவதற்காக UnionPay உடன் கூட்டிணைந்தது. LANKAQR குறியீடுகளை பயன்படுத்தும் வணிகர்களிடம் UnionPay ஏற்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் 4 வாரங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டது.

2023

உலகளவில் உள்ள UnionPay International அட்டைதாரர்களுக்கு LankaPay ATM வலையமைப்பினூடாக ஏற்பு வசதியை நடைமுறைப்படுத்துவதற்காக UnionPay உடன் கூட்டிணைந்தது.

2024

தேசிய கட்டண அட்டைத் திட்டத்தின் (NCS) கீழ் லங்கா பெ அட்டையை வழங்குவதற்கான 2வது மூலோபாய சர்வதேச கூட்டாளராக UnionPay International உடன் இணைவதற்கான ஒழுங்குமுறை அனுமதி பெறப்பட்டது. LankaPay ATM வலையமைப்பில் UnionPay International அட்டைகளின் ஏற்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

பல்ஸ் வலையமைப்பு LLC (USA/சர்வதேசம்)

LankaPay மற்றும் பல்ஸ் வலையமைப்பு கூட்டாண்மையானது LankaPay வலையமைப்பு மூலம் எல்லைகளைக் கடந்த ATM ஏற்புகளை விரிவுபடுத்துகிறது.

2022

உலகளவில் உள்ள பல்ஸ்/டிஸ்கவர் அட்டைதாரர்களுக்கு LankaPay ATM வலையமைப்புகளில் ஏற்பு வசதியை இயக்குவதற்காக பல்ஸ் வலையமைப்புடன் கூட்டு சேர்ந்தது.

NPCI இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் லிமிடெட் (இந்தியா)

LankaPay மற்றும் NPCI இன்டர்நேஷனல் கூட்டாண்மை, LankaPay வலையமைப்பு மூலம் எல்லைகளைக் கடந்த QR ஏற்பினை விரிவுபடுத்துகிறது.

2023

LANKAQR மூலம் இலங்கையில் QR ஏற்பு வசதியை இயக்குவதற்காக NPCI இன்டர்நேஷனலுடன் கூட்டு சேர்ந்தது.

2024

LANKAQR ஊடாக இலங்கையில் NPCI UPI ஏற்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

AliPay Connect (சர்வதேசம்)

LankaPay மற்றும் AliPay Connect கூட்டாண்மையானது LankaPay வலையமைப்பு மூலம் கடல் கடந்த QR ஏற்பினை விரிவுபடுத்தியது.

2023

AliPay + உலகளாவிய பயனர் வலையமைப்பிற்காக LANKAQR மூலம் இலங்கையில் QR ஏற்பு வசதியை நடைமுறைப்படுத்துவதற்காக AliPay Connect உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டது.

டென்பே பேமென்ட் டெக்னாலஜி கோ லிமிடெட் (சீனா)

LankaPay மற்றும் டென்பே பேமென்ட்ஸ் கூட்டாண்மையானது LankaPay வலையமைப்பு மூலம் எல்லைகளைக் கடந்த QR ஏற்பினை விரிவுபடுத்துகிறது.

2024

WeChat Pay பயனர் வலையமைப்பிற்காக LANKAQR மூலம் இலங்கையில் QR ஏற்பு வசதியை இயக்குவதற்காக டென்பே பேமென்ட்ஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டது.

Fonepay Payment Services Limited (நேபாளம்)

LankaPay மற்றும் Fonepay Payment Services கூட்டாண்மை, LankaPay வலையமைப்பு மூலம் எல்லைகளைக் கடந்த QR ஏற்பினை விரிவுபடுத்துகிறது.

2023

FonePay பயனர் வலையமைப்பிற்காக LANKAQR மூலம் இலங்கையில் QR ஏற்பு வசதியை இயக்குவதற்காக Fonepay Payment Services உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டது.

Nepal Clearing House Limited (நேபாளம்)

LankaPay மற்றும் Nepal Clearing House கூட்டாண்மையானது LankaPay வலையமைப்பு மூலம் கடல் கடந்த QR ஏற்பினை விரிவுபடுத்தியது.

2023

NepalPay பயனர் வலையமைப்பிற்காக LANKAQR மூலம் இலங்கையில் QR ஏற்பு வசதியை நடைமுறைப்படுத்துவதற்காக Nepal Clearing House உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டது.

ஆசிய கட்டண வலையமைப்பு (APN)

2011 ஆம் ஆண்டில் ASEAN Central Banks நிறுவனத்தின் கட்டணம் மற்றும் தீர்வு முறைகள் பற்றிய செயற்குழுவின் (WC PSS) ஆய்வானது, சில நாடுகளில் நிலவுகின்ற தேசிய சில்லறை கட்டண முறைகளில் நிலவுகின்ற ஒருங்கிணைப்பின்மையால் வெவ்வேறு வழங்குநர்களிடையே இயங்கு தன்மை இல்லாதிருப்பதை கண்டறிந்தது. மேலும் கட்டண முறைகளில் நிலவுகின்ற வினைத்திறனின்மை மற்றும் தெளிவற்ற விலை நிர்ணய வழிமுறைகளே விலையுயர்ந்த சர்வதேச பணப்பரிவர்த்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்திருந்ததும் உணரப்பட்டது.

வணிகங்களுக்கும் தனிநபர்களுக்கும் அதிக வசதியுடன் மின்னணு கட்டணங்களைச் செலுத்த அல்லது பெற்றுக்கொள்வதற்கான திறனை வழங்குவதற்காக WC PSS இனால் APN அடையாளம் காணப்பட்டது. இது வினைத்திறன் மிகுந்த, செலவு குறைந்த மற்றும் பாதுகாப்பான கடல் கடந்த சில்லறை கட்டண உள்கட்டமைப்பை நிறுவுவதற்காக WC PSS உடன் நெருக்கமாக இணைந்துள்ளது.

2006 ஆம் ஆண்டில் ALTO, ARTAJASA, ITMX, MEPS, NETS, RINTIS ஆகிய 6 அசிய உள்நாட்டு கட்டண கட்டமைப்புகளால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் வினைத்திறனான செலவு குறைந்த மற்றும் பாதுகாப்பான கடல் கடந்த சில்லறை கட்டண உள்கட்டமைப்பை நிறுவுவதற்காக WC PSS உடன் இணைந்து செயலாற்றுகின்றது.

www.asianpaymentnet.com

2022

LankaPay ஆசிய கட்டண வலையமைப்பின் உறுப்பினரானது.

2023

கொரியாவில் Korea hosted by Korea Financial Telecommunications and Clearings Institute (KFTC) இனால் நடத்தப்பட்ட ஆண்டு பொதுக் கூட்டத்தில் (AGM) 2023-24 ஆம் ஆண்டிற்கான APN இன் துணைத் தலைவர் வலையமைப்பிற்காக LankaPay தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற AGM மன்றத்தில் LankaPay பங்கேற்றது.

2024

ஜப்பானின் டோக்கியோவில் NTT DATA குழும நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆண்டு பொதுக் கூட்டத்தில் (AGM) 2024-25 ஆம் ஆண்டிற்கான ஆசிய கட்டண வலையமைப்பின் வணிக துணைக்குழுவின் துணைத் தலைவராக LankaPay தேர்ந்தெடுக்கப்பட்டது.

பெருநிறுவன கூட்டுறவு







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander