We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
சஞ்சீவனி செனவிரத்ன
முகாமையாளர் - சட்டம்
1.தகவலறிவதற்கான கோரிக்கையை வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ முன்வைத்ததன் பின்னர், குறித்த அலுவலரிடம் எழுத்து மூல ஒப்புதல் ஒன்றினை பெற வேண்டும்.
2.விண்ணப்பதாரியின் தகவலறிவதற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா எனும் தீர்மானமானது 14 நாட்களுக்குள் விண்ணப்பதாரிக்கு பெற்றுக்கொடுக்கப்படும்.
3.தகவலை பெற்றுத்தருவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தால், தகவலறியும் உரிமை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டண அட்டவணையின் அடிப்படையில் குறித்தக் கட்டணத்தை செலுத்தியதன் பின்னர் தகவல் பெற்றுக்கொடுக்கப்படும் என, விண்னப்பித்தக் குடிமகனுக்கு தகவல் அலுவலர் ஊடாக அறியத்தரப்படும். குறித்த தகவலானது கட்டணம் செலுத்துதல் செயற்பாட்டிற்கு உற்பட்டாததாக இருந்தால், கட்டணம் செலுத்திய 14 நாட்களுக்குள் தகவல் பெற்றுத்தரப்படும். அல்லது குறித்த தகவலுக்கு கட்டணம் செலுத்தப்பட தேவை இல்லாதிருந்தால், தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட 14 நாட்களுக்குள் அந்த தகவல் பெற்றுத்தரப்படும்.
4.கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்களுக்குள் தகவலை பெற்றுத்தர முடியாது போகும் பட்சத்தில், குறித்த தகவல் அலுவலர் தன்னிடத்தில் கோரிக்கையை முன்வைத்த விண்ணப்பதாரியிடத்தில் அதிகபட்சம் 21 நாட்களுக்கான நீட்டிப்பு அவகாசத்தை கோரவேண்டியதுடன், நீட்டிப்பிற்கான காரணத்துடன் அந்த காலவரையின் முடிவில் தகவலையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
5.முன்வைக்கப்பட்டக் குறித்தக் கோரிக்கையானது விண்ணப்பதாரியின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தால், தகவல் அலுவலர் 48 மணி நேரத்திற்குள் பதிலை பெற்றுத்தர வேண்டும்
6.பின்வரும் சந்தர்ப்பங்களில் குறித்த கோரிக்கையை முன்வைக்கும் குடிமகனால் மேல்முறையீடு செய்ய முடியும்,
லங்காபே ப்ரைவேட் லிமிடெட், ‘The Zenith”, No.161 A, தர்மபால மாவத்தை, கொழும்பு 00700, இலங்கை.
திரு. சன்ன டி சில்வா
தலைமை நிர்வாக அதிகாரி
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்