En  |  සිං  



டிஜிட்டல் கட்டணங்களை பேய்மி இனூடாக புரட்சிகரமானதாக்கிடுங்கள்.

பேமி

பேமி ஆனது தனது மேம்பட்ட செய்தியிடல் சேவையை செயற்படுத்துவதனூடாக கட்டண சேகரிப்பில் ஒரு புரட்சிகரமான தளமாக அமைகின்றது. பேமி ஒத்தியக்கமுடைய எந்த மொபைல் அல்லது இணைய செயலி மூலமும் வாடிக்கையாளர்களுக்கு உடனடி பணம் செலுத்துதலை மேற்கொள்ள அனுமதிக்கும், உலகளாவிய பணம் செலுத்துதல் இணைப்புகளை உருவாக்குங்கள். நிறுவன பரிவர்த்தனைகள் மற்றும் peer-to-peer பணம் செலுத்துதல்கள் ஆகிய இரண்டிற்கும் ஏற்றதாக, பேமி ஆனது உங்கள் அனைத்து பணம் செலுத்துதல் தேவைகளுக்கும் தொந்தரவற்ற, திறமையான தீர்வை வழங்குகிறது.

பேமி ஆனது மென்பொருள் வடிவமைப்பாளர்களை கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நிதி தொழில்நுட்ப செயலிகளுக்கான எளிமையான மற்றும் நேரடியான ஒருங்கிணைப்பு செயல்முறையை வழங்குகிறது. உங்கள் தீர்வுகளில் பேமியைச் சேர்த்து, வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை நிறைந்த, அதிநவீன பணம் செலுத்துதல் சேவையை பெற்றுக்கொடுங்கள். எங்கள் விரிவான API ஆவணப்படுத்தல் மற்றும் அர்ப்பணிப்புள்ள முகவர் குழுவானது இந்தச் செயல்முறையை எளிதாக செயற்படுத்த உங்களுக்கு பெரிதும் உதவுகின்றன. எனவே, குறைந்தபட்ச முயற்சியுடன் உங்கள் செயலிகளை மேம்படுத்தலாம்.

நிதி தொழில்நுட்பங்களின் அனுகூலங்களை அறிந்து கொள்ளுங்கள்

  • கட்டணம் செலுத்தப் பல்வேறு தேர்வுகள்: உங்கள் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் செலுத்துதலுக்கான பல்வேறு வழிமுறைகளை பெற்றுக்கொடுங்கள். இது சௌகரியத்தை மேம்படுத்தி, பல்வேறு தேர்வுகளை பெற்றுக்கொடுக்க உதவுகின்றது.
  • பல்துறை ஒருங்கிணைப்பு: பேமியானது C2C (வாடிக்கையாளரிடமிருந்து வாடிக்கையாளருக்கு), B2C (வணிகத்திலிருந்து வணிகத்திற்கு), C2B (வாடிக்கையாளரிடமிருந்து வணிகத்திற்கு) மற்றும் B2B (வணிகத்திலிருந்து வணிகருக்கு) உள்ளிட்ட பல்வேறு பணம் செலுத்துதல் சூழ்நிலைகளுக்கு எளிதில் பொருந்தக்கூடியது.
  • வசதியான மற்றும் பாதுகாப்பான பணம் செலுத்துதல்கள்: உங்கள் வாடிக்கையாளர்கள் வங்கிச் சான்றுகளை மூன்றாம் தரப்பினருடன் பகிர வேண்டிய அவசியமின்றி, தடையற்ற பணம் செலுத்துதல் அனுபவத்தை அனுபவிக்கலாம்.
  • எளிதான இணக்கப்பாட்டுச் செயல்முறை: முழுமையான வணிகச் செயல்முறை தானியக்கமாக்கலை வழங்குதல், பணிகளை எளிதாக்குதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்காக எளிதான இணக்கப்பாட்டை செயல்படுத்துதல்.

01

LankaPay உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள்

LankaPay உடன் API இணைப்பை உருவாக்குங்கள்

சான்றளிப்பு செயல்முறையை நிறைவு செய்யுங்கள்

நேரடி இயக்கம்

பேமியை மொபைல் செயலியுடன் எவ்வாறு ஒருங்கிணைப்பது?

பேமியுடன் இணைந்துள்ள நிதி தொழில்நுட்பங்கள்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

ஃபின்டெக்-க்கு தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.