En  |  සිං



LankaPay நிகழ்நேர நிதி பரிவர்த்தனைகளுடன் உங்கள் சேவைகளை மேம்படுத்திடுங்கள்

நிகழ்நேர நிதி பரிவர்த்தனை

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவானதும் சௌகரியானதுமான நிதி பரிவர்த்தனை தீர்வுகளை வழங்க விரும்புகிறீர்களா? LankaPay நிகழ்நேர நிதி பரிவர்த்தனைகளை விட சிறப்பானதொரு தீர்வு வேறெங்கிலும் இல்லை. எமது நிகழ்நேர நிதி பரிவர்த்தனை (CEFTS) அதே நேரத்தில் வங்கிகளுக்கு இடையேயான நிதி பரிமாற்றங்களுக்கு வழிவகுக்கின்றது. இது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு முழுவதும் 24/7, 365 நாட்களும் உடனடியாக நிதியை அனுப்பவும் பெறவும் வழி வகுக்கின்றது.

உங்கள் வங்கிச் சேவைகளில் நிகழ்நேர நிதி பரிவர்த்தனையினை ஒருங்கிணைப்பதன் மூலம், வேகம், நம்பகத்தன்மை மற்றும் சௌகரியத்துடன் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஓர் அதிநவீன கட்டணத் தீர்வை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கலாம். அவர்கள் இணைய வங்கி, மொபைல் வங்கி, ATMகள் அல்லது கருமபீட சேவைகள் என எந்தவொரு கட்டண உத்தியை பயன்படுத்துகின்ற போதிலும் நிகழ்நேர நிதி பரிவர்த்தனை குறைந்தபட்ச தொந்தரவுடன் தடையற்ற பரிவர்த்தனைகளை உறுதி செய்கிறது.

ஒரு நிதி நிறுவனமெனும் வகையில், நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது. நிகழ்நேர பரிவர்த்தனையின் மூலம், PCI-DSS version 3.2 உட்பட மிக உயர்ந்த பாதுகாப்புத் தரநிலைகளுக்கு இணங்க உங்கள் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன என்பதை உறுதியாக நம்ப முடியும். மேலும், மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படும் அதிகபட்ச வாடிக்கையாளர் கட்டணங்களுடன், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவானதும் வெளிப்படையுமான விலையில் சேவையை வழங்கலாம்.

நிகழ்நேர பரிவர்த்தனையின் எதிர்காலமான LankaPay நிகழ்நேர நிதி பரிவர்த்தனைகளுடன் (CEFTS) மூலம் உங்கள் வங்கிச் சேவைகளை மேம்படுத்துங்கள்.

நிதி நிறுவனங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளுக்கிடையிலான பரிவர்த்தனைகளை அதே நேரத்தில் செய்ய முடியும்.
  • வாடிக்கையாளர்களுக்கு உங்கள் நிதி நிறுவனத்தினூடாக புத்தாக்கம் நிறைந்தவொரு கட்டணத்தீர்வு.
  • நிர்வாக தொந்தரவு மற்றும் அலுவலக கையேடு வேலைகளைக் குறைத்தல்
  • அதே நேரத்தில் கட்டணங்களை நெறிப்படுத்துவதற்கான வாய்ப்புச் சாரளம்.

சிறப்பம்சங்கள்

  • பரிவர்த்தனைகளை அதே நேரத்தில் கண்காணிப்பதற்கும் தயாரான அறிக்கைகளை (இணக்க அறிக்கைகள் போன்றவை) பதிவிறக்கம் செய்வதற்குமான இணைய அடிப்படையிலான ஒரு செயலி.
  • வங்கிக்கிடையிலான நிகர நிலை மற்றும் தீர்வு ஆகியவற்றை அதே நேரத்தில் கண்காணிப்பதற்கான இணைய அடிப்படையிலான ஒரு செயலி.
  • வங்கி காரியால தீர்வுடன் இணைக்கப்பட்ட, தானியக்கப்பட்ட விதி அடிப்படையிலான முரண்பாடு முகாமைத்துவம்.
  • கணினி முறைமை அணுகலுக்கான வேறுபட்ட பயனாளர் நிலைகள்.
  • 24*365 வாடிக்கையாளார் உதவி மைய சேவை.

தற்போது நிகழ்நேர நிதி பரிவர்த்தனையுடன் கைகோர்த்துள்ள நிதி நிறுவனங்கள்

புள்ளிவிரங்கள்

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதியின் முடிவடைந்த நிதியாண்டிற்கான புள்ளிவிரங்கள்

47

பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை

164.3 மில்லியன்

பரிவர்த்தனை அளவு

13.5 டிரில்லியன்

பரிவர்த்தனை மதிப்பு

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander