En  |  සිං



எமது அணி

ஆர்வமும் செயற்திறனும் ஒருமிக்க சங்கமிக்கும் கழிமுகத்திடலான LankaPay இல் எமது வாழ்வியல் போக்குகளை கண்டறியுங்கள்

LankaPayஇன் வாழ்வியல் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். அனுதினமும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தவும், திறமையான நபர்களுடன் ஒன்றிணைந்து செயற்படவும், டிஜிட்டல் கட்டண முறைகளின் அடிப்படையில் மாற்றமடையும் உலகில் புத்தாக்கங்களை உருவாக்கவும் ஒரு மாபெரும் வாய்ப்பாக எமது வாழ்வியல் அமைந்துள்ளது. பேரார்வமும் செயற்திறனும் ஒருமிக்க சந்திக்கும் இந்த பயணத்தில் நீங்களும் எம்முடன் சேருங்கள், மேலும் இலங்கையில் எதிர்கால கட்டண முறைமைகளை நாம் வடிவமைப்பதை பரஸ்பரம் கண்டுணருங்கள்.

LankaPay இல், எமக்கு வாய்த்துள்ள மாபெரும் சொத்து எமது கிடைத்தற்கறிய அங்கத்தவர்கள் எனபதனை ஆணித்தனமாக நம்புகின்றோம். புதுமையான, நம்பகமான மற்றும் வசதியான கட்டணத் தீர்வுகள் மூலம் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு உத்வேகமளிக்கும் நிதி தீர்வுகளுக்கான உந்துதல் என்ற பொதுவான பார்வையால் ஒன்றுபட்ட எங்கள் பல்வேறு தொழில் வல்லுநர்களின் அணியானது, துறைசார் அறிவு, திறமைகள் மற்றும் அனுபவங்களோடு எம்மை ஒன்றிணைக்கிறது.

LankaPay இல் வாழ்வியலுடன் கைகோர்ப்பதனூடாக இலங்கையின் எதிர்கால கட்டண தீர்வுகளை வடிவமைக்கும் உறுதியான துடிப்பான மற்றும் ஆற்றல்மிக்க குழுவின் ஓர் அங்கமாக திகழ்ந்திடுங்கள். எம்மிடம் இருக்கும் தொழில் வாய்ப்புகளை ஆராய்ந்து, எமது விவேகமிக்க அங்கத்தவர்களுடன் இணைந்திடுங்கள். மேலும் LankaPay இன் வாழ்வியலானது தொழில்முறை வாய்ப்புகளைக் காட்டிலும் மேலானது என்பதையும் புலன்களறிய கண்டுணருங்கள். இது வெற்றி, வளர்ச்சி மற்றும் நிறைவினை நோக்கிச் செல்லும் ஒரு வெற்றிப் பயணமாகும்.



குழு சந்திப்புகள்

LankaPay இன் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி நடாத்தப்படும் கூட்டங்கள் மற்றும் சமூக ஸ்ந்திப்புகள் ஆகியவற்றின் போது எமது அகத்தவர்கள் தமக்கிடையில் பகிர்ந்துகொண்ட மறக்கமுடியாத நிகழ்வுகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை கண்டுகளியுங்கள்.

எமது கலாச்சாரம்

தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களானவை சொற்களை விட சத்தமாக ஒலிக்கும் என்பதனை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். LankaPay ஊழியர்கள் தங்கள் திறன்களை எவ்வாறு உலகுணர செய்கின்றனர் என்பதைப் பார்வையிடுங்கள்.



தற்போதைய வேலை வாய்ப்புகள்

MANAGER RISK & COMPLIANCE

Closing Date: 22nd of January 2025

...

எதிர்காலத்தில், பொருத்தமான தொழில் வெற்றிடங்களை எனக்குத் தெரிவிக்கவும்.

உங்கள் தொழில் வாய்ப்பைத் தழுவ: LankaPay இல் உள்ள எங்களின் வேலை வாய்ப்புகளை ஆராய்வதன் மூலம் தொழில்முறை பயணத்தில் அடுத்த படியை எடுத்து வைய்யுங்கள். உங்கள் ஆர்வத்தை பகிர்ந்துகொள்ள எம்மைத் தொடர்பு கொள்ளவும்!







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander