We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
மொபைல் மற்றும் இணையம் ஆகிய இருத் தளங்களிலும் சீரான மற்றும் நம்பகமான கட்டணம் செலுத்துதலைச் செயல்படுத்தும் ஜஸ்ட்பெ மூலம் உங்கள் ஃபின்டெக் செயலிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்
ஜஸ்ட்பெ உடன் ஃபின்டெக் நிறுவனங்களால் இப்போது தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு பயன்படுத்த எளிதானதும் செயற்பாட்டுச் செலவுகள் குறைந்ததுமான சிறந்ததொரு கட்டணத்தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்.
நவீன நிதிப் பரிவர்த்தனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதிநவீன தீர்வை வழங்குவதன் மூலம் டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் துறையில் முன்னணியில் திகழ்பவராக உங்கள் நிலையை வலுப்படுத்துங்கள்.
உங்கள் நிதித்தொழில்நுட்ப செயலிகளை மேம்படுத்தவும் சிறந்த பணம் செலுத்துதல் அனுபவத்தை வழங்கவும் இன்றே ஜஸ்ட்பெ உடன் ஒருங்கிணையுங்கள். ஜஸ்ட்பெ எவ்வாறு உங்கள் டிஜிட்டல் கட்டணம் செலுத்துதல் சேவைகளை மேம்படுத்துகின்றது என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
2017 ஆம் ஆண்டு LankaPay இனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜஸ்ட்பெ என்பது, வாடிக்கையாளர்கள் தங்கள் நடைமுறை கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கிலிருந்து வணிகரின் கணக்கிற்கு நேரடியாக நிதியை மாற்றுவதற்கும் அவர்களின் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்தி சில்லறை பணம் செலுத்துதலை மேற்கொள்ளவும் அனுமதிக்கும் ஒரு புரட்சிகரமான கட்டண செலுத்தல் தளமாகும்.
பௌதீக பணப்புழக்க்மற்ற சமூகத்தை நோக்கி இலங்கையை கட்டியெழுப்புவதில் இது ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகின்றது. இந்த தனித்துவமான அமைப்பானது, நுகர்வோர், வணிகர்கள், வங்கிகள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஏராளமான நன்மைகளை வழங்கி கையடக்கத் தொலைப்பேசிகளின் பல்துறைத்தன்மைக்கு வழிவகுக்கின்றது.
ஜஸ்ட்பெ உடன் உங்கள் மொபைல் செயலியை ஒருங்கிணைக்க உங்கள் விருப்பமான நிதி நிறுவனத்துடன் இணையுங்கள்.
LankaPay SDK உடன் ஒருங்கிணைத்து சான்றளிப்பைப் பெறுங்கள்.
ஒருங்கிணைப்புக்கான உறுப்பினர் இடைமுக ஆவணத்தில் (MID) உள்ள படிகளைப் பின்பற்றுங்கள்.
மத்திய வங்கியால் வரையறுக்கப்பட்ட அடிப்படை பாதுகாப்புத் தரநிலைகளை மொபைல் செயலி பூர்த்தி செய்கிறது என்பதை உறுதிப்படுத்த, பெறுநர் வங்கியிடமிருந்து இணக்க அனுமதியைப் பெறுங்கள்.
ஜஸ்ட் பெ Web என்பது 2023-ல் தொடங்கப்பட்ட IPG-க்கு மாற்றாக செயல்படுகின்ற JustPay இன் விரிவாக்கம் ஆகும். இது வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து நேரடியாக ப்ரவுஸர் அடிப்படையிலான செயலிகளின் மூலம் பணம் செலுத்த அனுமதிக்கிறது.
அதன் எளிமையான வடிவமைப்பு, சுலபமான அணுகல் மற்றும் சிறந்த பாதுகாப்புடன், ஜஸ்ட் பெ Web இணையவழி பரிவர்த்தனைகளுக்குத் தடையற்ற மற்றும் வசதியான கட்டண விருப்பத்தை வழங்குகிறது. வணிகர்களுக்கு, குறைந்த ஆரம்ப செலவுகளுடனும் குறைந்த வணிகர் தள்ளுபடி விகிதத்தினையும் (MDR) பெற்றுக்கொடுப்பதனால் இணையற்றத் தீர்வாக இருக்கிறது. ஜஸ்ட் பெ Web டெஸ்க்டாப், மடிக்கணினி, டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு சாதனங்களுடன் இணங்கி செயற்படக்கூடியது. இனி ஜஸ்ட் பெ Web உடன் தொந்தரவு இல்லாத கட்டணங்களை அனுபவியுங்கள்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டு புள்ளிவிவரங்கள்
புதிய கணக்கு
பரிவர்த்தனை அளவு
பரிவர்த்தனை மதிப்பு
LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.