En  |  සිං



சிரமமின்றி பணம் செலுத்துவதற்கான உங்கள் நம்பகமான துணை!

ஜஸ்ட்பே

JustPay மூலம், நீங்கள் விரும்பும் மொபைல் ஆப்ஸ் அல்லது ஈ-கொமர்ஸ் தளத்துடன் உங்கள் கணக்கை எளிதாக இணைக்கலாம் மற்றும் பாதுகாப்பாக பணம் செலுத்தலாம். நீங்கள் ஒன்லைனில் ஷொப்பிங் செய்தாலும் அல்லது ஸ்டோரில் LankaQR குறியீட்டை ஸ்கேன் செய்தாலும்> JustPay உங்கள் பரிவர்த்தனைகள் சீராகவும்> மன அழுத்தமின்றியும் இருப்பதை உறுதி செய்கின்றது. சிக்கலான கட்டண முறைகளுக்கு குட்பை சொல்லுங்கள் மற்றும் துரளவீயல மூலம் எளிமைக்கு வணக்கம் - பணம் செலுத்துவது எப்போதும் எளிதாக இருந்ததில்லை.

JustPay பற்றி நான் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்

  • ஒரு பரிவர்த்தனைக்கு எனது வங்கிக் கணக்கில் டெபிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ. 50>000.00 ஆனால் நான் LankaQR குறியீட்டை ஸ்கேன் செய்கிறேன் என்றால், நான் ரூ. 200,000 வரை செல்ல முடியும்.
  • JustPay மூலம் எனது மொபைல் பயன்பாட்டில் எனது வங்கிக் கணக்கைச் சேர்ப்பதற்கு SMS எச்சரிக்கை வசதி செயல்படுத்தப்பட வேண்டும்.

01

படிமுறை 1

விருப்பமான மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

படிமுறை 2

உங்கள் சுயவிபரத்தை உருவாக்கவும்

படிமுறை 3

கட்டணத் தெரிவின் கீழ் "உங்கள் வங்கிக் கணக்கைச் சேர்" விருப்பத்தைத் தெரிவுசெய்யவும்

படிமுறை 4

உங்கள் கணக்கு வைத்திருக்கும் உங்கள் நிதி நிறுவனத்தைத் தெரிவு செய்யவும்

படிமுறை 5

உங்கள் கணக்கு இலக்கத்தை உள்ளிடவும்

படிமுறை 6

உங்கள் நிதி நிறுவனத்திடம் இருந்து OTP இலக்கம் அடங்கிய SMS வரும் வரைக் காத்திருக்கவும்

படிமுறை 7

மொபைல் பயன்பாட்டில் OTP ஐ சரியாக உள்ளிடவும்

குறிப்பு: OTP உட்பட உங்களின் வங்கி அல்லது தனிப்பட்ட விபரங்கள் எதையும் தெரியாத தரப்பினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

படிமுறை 8

உங்கள் மொபைல் பயன்பாட்டில் காட்டப்பட்டுள்ள "விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை" ஏற்கவும்

படிமுறை 9

உங்கள் மொபைல் பயன்பாட்டில் உங்கள் கணக்கு வெற்றிகரமாக சேர்க்கப்பட்டுள்ளது

எனது மொபைல் பயன்பாட்டில் எனது வங்கிக் கணக்கை எவ்வாறு சேர்ப்பது?

02

படிமுறை 1

கட்டண தெரிவின் கீழ் "உங்கள் வங்கிக் கணக்கைச் சேர்" விருப்பத்தைத் தெரிவுசெய்யவும்

படிமுறை 2

உங்கள் கணக்கு வைத்திருக்கும் உங்கள் நிதி நிறுவனத்தைத் தெரிவுசெய்யவும்

படிமுறை 3

உங்கள் கணக்கு இலக்கத்தை உள்ளிடவும்

படிமுறை 4

உங்கள் நிதி நிறுவனத்திடம் இருந்து OTP இலக்கம் அடங்கிய SMS வரும் வரைக் காத்திருக்கவும்

படிமுறை 5

மொபைல் பயன்பாட்டில் OTP ஐ சரியாக உள்ளிடவும்

குறிப்பு: OTP உட்பட உங்களின் வங்கி அல்லது தனிப்பட்ட விபரங்கள் எதையும் முன்பின் தெரியாத தரப்பினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

படிமுறை 6

உங்கள் மொபைல் பயன்பாட்டில் காட்டப்பட்டுள்ள "விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை" ஏற்கவும்

படிமுறை 7

உங்கள் மொபைல் பயன்பாட்டில் உங்கள் கணக்கு வெற்றிகரமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இ-கொமர்ஸ் தளத்தில் எனது வங்கிக் கணக்கை எவ்வாறு சேர்ப்பது

JustPay இயக்கப்பட்ட மொபைல் பயன்பாடுகள்

JustPay- இயக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷன்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துகிறீர்களா எனச் சரிபார்க்கவும்

JustPay- இ-கொமர்ஸ் தளங்களை செயல்படுத்துகின்றது

JustPay- இயக்கப்பட்ட இ-கொமர்ஸ் தளங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துகின்றீர்களா எனச் சரிபார்க்கவும்.

புள்ளி விபரங்கள்

2024 செப்டம்பர் 30 நிலவரப்படி காலாண்டு புள்ளிவிவரங்கள்

724,836

புதிய கணக்குகள்

21,044,087

பரிவர்த்தனை அளவு

ரூ. 104,892,755,168.88

பரிவர்த்தனை மதிப்பு

உங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander