En  |  සිං



எளிமைப்படுத்தப்பட்ட அரச கட்டணங்கள் உங்கள் விரல் நுனிகளில்

லங்கா பெ அரச கட்டணத்தளம்

அரசு நிறுவனங்களுக்கான கட்டணங்களைச் செலுத்தும் செயற்பாட்டில் சிறந்த சௌகரியத்தினை பெற்றுக்கொள்ளுங்கள். கட்டணங்களை செலுத்த நீண்ட வரிசைகளில் காத்திருப்பதற்கோ சிக்கலான ஆவணங்களை கையாள்வதற்கோ தேவைகள் இனி இல்லை. உங்களுக்கு பரிட்சயமான முறையில் வீட்டிலிருந்தவாறோ அல்லது பயணங்களை மேற்கொள்ளும் போதோ பல்வேறு அரச நிறுவனங்களுக்கு உடனுக்குடன் கட்டணங்களைச் செலுத்த முடியும்.

சிரமங்களுக்கு விடை கொடுத்து விட்டு தடையற்ற பரிவர்த்தனைகளை வரவேறுங்கள். ஒருசில கிளிக்குகளில் சுதந்திரமாகவும் எளிமையாகவும் உங்கள் நிலுவை கட்டணங்களை செலுத்துங்கள். லங்கா பெ அரச கட்டணத்தளத்துடன் உங்கள் வாழ்க்கையிலும் அரசு சேவைகளுடனான உங்கள் தொடர்புகளிலும் முன்னெப்போதும் இருந்திராத வண்ணம் எளிமையை அனுபவித்திடுங்கள்.

உங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • உங்கள் சேமிப்பு அல்லது நடைமுறை கணக்கினை பயன்படுத்தி பல்வேறு அரச முகவரகங்களுக்கு நிகழ்நேரத்தில் கட்டணங்களை செலுத்திடுங்கள்.
  • உங்கள் சௌகரியத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட மலிவான கட்டணங்களையும் அனுபவித்திடுங்கள்.

லங்கா பெ அரச கட்டணத்தளத்துடன் கைக்கோர்த்துள்ள அரச நிறுவனங்கள்

  • இலங்கை சுங்கம் 
  • உள்நாட்டு இறைவரித்திணக்களம்
  • ஊழியர் சேமலாப நிதியம்
  • முதலீட்டுச் சபை
  • இலங்கை துறைமுக அதிகார சபை (கப்பல்/ சரக்கு & நுழைவு அனுமதி)
  • இலங்கைத் தரநிர்ணய கட்டளைகள் நிறுவனம்
  • இறக்குகுமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம்
  • வணிகத் திணைக்களம்
  • மத்திய வைப்பு சேவைகள் அமைப்பு
  • உள்ளூராட்சி சபைகள் மற்றும் அரசாங்க அமைப்புகள்

மேலதிக தகவல்களுக்கு உங்களது வங்கி அல்லது LankaPay உதவி மையத்தை நாடுங்கள்


மேம்பட்ட தேடல்

எண் நிதி நிறுவனம் இணைய வங்கிப்பணி மொபைல் வங்கிப்பணி கவுண்டரில் நேரடியாக

தேடல் முடிவு எதுவும் இல்லை

உங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander