En  |  සිං



LankaPay நேரடி பற்றினூடாக உங்களது கட்டண சேகரிப்பினை சீரமைத்துக்கொள்ளுங்கள்.

நேரடி பற்று

தொடர்ந்தும் உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து நிலுவையிலிருக்கும் கட்டணங்களை காலத்தாமதம் இன்றி வசூலிக்கும் முயற்சியில் சோர்வடைந்து விட்டீர்களா? LankaPay நேரடி பற்றானது உங்களது வாடிக்கையாளகளிடமிருந்து கட்டணங்களை வசூலிக்க நேர்த்தியானதொரு தீர்வினை பெற்றுக்கொடுக்கின்றது.

உங்கள் வாடிக்கையாளர்களை அவர்களது வங்கிகளுடன் நேரடி பற்றினை செயற்படுத்திக் கொள்ள பணிப்பதனூடாக, எளிதான முறையில் கட்டண கோரிக்கைகளை மேற்கொள்ளலாம். விலைபட்டியல் தீர்வுகள், பட்டியல் கொடுப்பனவுகள் அல்லது காப்புறுதி கட்டணங்கள் ஆகிய செயற்பாடுகளின் போது நேரடி பற்றானது கட்டணங்களை தானியங்கியாக செயற்படுத்த வழி வகுக்கின்றது.

உங்கள் கட்டண வசூல் செயற்பாட்டை மேம்படுத்த நாம் நேரடி பற்று வசதியினையுடைய வங்கிகளுடன் கைக்கோர்த்துள்ளோம். வாடிக்கையாளருக்கான அதிகபட்ச கட்டணமாக ரூ. 50/- அறவிடப்படுவதானது உங்கள் வணிக செலவுகளை சிக்கனப்படுத்த உதவிக்கரம் நீட்டுகின்றது.

வணிகங்களுக்கன அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • மேம்பட்ட பணப்புழக்கம்: நேரடி பற்றினூடாக உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து குறிப்பிட்ட ஒரு திகதியில் குறித்த நிதி, தானியங்கி முறையில் அவரது கணக்கிலிருந்து கழிக்கப்படும். இது காலத்தாமதமான கட்டணங்களை குறைத்துக்கொள்ள வழிவகுப்பதுடன் பயன்பாட்டு ரீதியில் சாத்தியமான மற்றும் நிலையான பணப்புழக்கத்திற்கு அடித்தளமிடுகின்றது.
  • குறைந்த நிர்வாக தலையீடு : நேரடி பற்றினூடாக சுழற்சி கட்டணங்களுக்கு விலைப்பட்டியலிடல் மற்றும் பௌதீக தலையீடுகளுக்கான தேவைகள் இல்லை. இது உங்கள் நேரத்தை சிக்கனப்படுத்த உதவுவதுடன் கட்டணங்களை வசூலிப்பது தொடர்பில் உங்களுக்கிருக்கும் சுமையை அகற்றி வணிகத்தின் மீது அக்கறை செலுத்த உதவுகின்றது.
  • மேம்படுத்தப்பட்ட வினைத்திறன்: நேரடி பற்றினை பயன்படுத்துவதன் மூலம் கட்டண வசூலிப்பு முறையினை உங்களால் தானியங்கி முறைமையின் கீழ் நிர்வகிக்க முடியும். இதனால் சிறந்த வினைத்திறனுடனான துல்லியம் மிக்க வசூலிப்பு நடவடிக்கையினை செயற்படுத்த முடியும். மேலும் இந்த செயன்முறையானது மனித தவறுகளை நீக்குகின்றது.
  • வாடிக்கையாளர் சௌகரியம்: நேரடி பற்றினை ஒரு கட்டண விருப்பமாக அனுமதிக்கும் போது அது உங்கள் வாடிக்கையாளரின் வசதியை கருத்திற்கொள்வதுடன் உங்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான பரிவர்த்தனை அனுபவத்தினையும் சுமூகமாக்குகின்றது. இது வாடிக்கையாளர் திருப்தியையும் நம்பத்தன்மையையும் கட்டியமைக்க உதவுகின்றது.
  • குறைந்த செலவு: அதிகபட்ச வாடிக்கையாளர் கட்டணமாக 50/- ரூபா எனும் குறைந்த தொகையினை அறவிடுவதன் மூலம் LankaPay நேரடி பற்றானது குறைந்த செலவில் சிறந்ததொரு தீர்வினை எல்லா அளவிலான வணிகங்களுக்கும் பெற்றுக்கொடுக்கின்றது. இது உங்களது கட்டண வசூலிப்பு செயன்முறையின் போது ஏற்படும் குறிப்பிடத்தக்க செலவுகளை குறைகின்றது.
  • நிதி நிறுவனங்களுடனான மேம்படுத்தப்பட்ட உறவு: நேரடி பற்றுடன் செயற்படும் நிதி நிறுவனங்களுடன் இணைவதனூடாக அவற்றுடனான உறவினை மேம்படுத்தி உங்கள் கட்டண வசூலிப்பு செயன்முறைகளை விரிவு படுத்தலாம். இந்த ஒத்துழைத்த நடவடிக்கையானது சுமூகமான பரிவர்த்தனைகளை உறுதிபடுத்துவதுடன் உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் பெற்றுக்கொள்ளும் செயல்பாட்டை நம்பகத்தன்மையுடையதாக்குகின்றது.

நீங்கள் விரும்பிய நிதி நிறுவனத்திலிருந்து நேரடி பற்றினை கண்டறியுங்கள்

வியாபாரத்திற்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander