En  |  සිං



சர்வதேச தரத்திலான இலங்கையின் தேசிய கட்டண உட்கட்டமைப்பை வடிவமைக்கும் பயணத்தில்.

வணிகத்திற்காக LankaPay

துரிதமான வணிகப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுதல் அல்லது மொத்தமாக பணம் செலுத்துதலினை ஒழுங்கு படுத்தல் போன்ற நடவடிக்கைகளின் மீதான உங்கள் நிறுவனத்தின் எந்தவொரு தனித்துவமான அபிலாஷையினையும் LankaPay நாம் புரிந்து கொள்வதுடன் உங்கள் வணிக நடவடிக்கைகள் செவ்வனே நிகழ்ந்தேற உறுதுணையாய் உள்ளோம்.

எமது வரம்புகளேதுமற்ற பாதுகாப்பான நிதித் தீர்வுகளானவை உங்களது காலத்தினையும் வளத்தினையும் சேம்ப்பதற்காகவென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது உங்களுக்கு வணிகத்தின் மீதில் கவனத்தை செலுத்துவதற்கு வழிவகுப்பதுடன், வணிகத்தின் வளர்ச்சியினை முன்னிலைப்படுத்தவும் உதவுகின்றது.

உங்கள் வணிகத்திற்காக LankaPay இனை தேர்ந்தெடுத்து வித்தியாசத்தினை புலனுணர அனுபவியுங்கள். உங்கள் நிறுவனத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக, நிதி சார் பாகங்களை நிர்வகிப்பதற்குத் தேவையான திறமையான மற்றும் நம்பகமான தீர்வுகளை பெற்றுத்தரல் நிமித்தம் எமது அத்தனை தீர்வுகளும் நேர்த்தியாக வேயப்பட்டுள்ளன. எமது பாதுகாப்பான மேடையினூடாக, நிகழ்ந்தேறும் உங்கள் பரிவர்த்தனைகள் அனைத்தும் கண்ணிமை போல் பாதுகாக்கப்படும் என்பதனை உங்களால் உறுதியாக நம்ப முடியும். அத்துடன் உங்கள் வணிக விரிவாக்கத்தின் போது உங்களுக்கான மனவமைதியை பெற்றுத்தரவும் நாம் வழி சமைக்கின்றோம். நீங்கள் உங்கள் வணிகத்தின் மீது கவனம் செலுத்துங்கள், நாங்கள் உங்களது நிதி இலக்குகளையும் கொடுப்பனவுகள் சார் சிக்கல்களையும் கவணித்துக் கொள்கின்றோம். LankaPay உடன் இன்றே உங்கள் வணிக செயற்பாடுகளை மேம்படுத்திடுங்கள்.

சேவைகள்

எமது சேவைகளானவை செயற்திறன், பாதுகாப்பு மற்றும் சௌகரியங்களுக்கு முன்னுரிமையளிக்கும் அதே வேளையில் நவீன வங்கியியல் துறையின் வளர்ந்து வரும் தேவைகளப் பூர்த்தி செய்யும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.


சர்வதேச கூட்டுறவு

பெருநிறுவன கூட்டுறவு

எமக்கான அங்கீகாரங்கள் மற்றும் சான்றிதழ்கள்

பணப் பரிவர்த்தனைகள், நிதி செயற்பாடுகள், நிதி அறிக்கையிடல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் பாதுகாப்பு மற்றும் செயற்திறன் போன்றவற்றில் சிறந்து விளங்குவதற்கான எமது தளர்ச்சியுறாத உறுதிப்பாட்டினை நாம் பெற்றுக்கொண்ட சான்றிதழ்கள் பரைசாற்றுகின்றன.







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander