We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
இல்லை. இலங்கையின் தேசிய பரிவர்த்தனை வலையமைப்பாக, LankaPay ஆனது தனது அங்கத்தவ வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அனைத்து ATM களையும் ஒன்றிணைக்கிறது. தற்போது நாடளாவிய ரீதியில் காணப்படும் 99.5% இற்கும் அதிகமான ATM களை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கின்றது.
பணத்தினை பெற்றுக்கொள்வதற்கான கட்டணமாக ரூ. 30/- அறவிடப்படுகின்ற அதே வேளையில், நீங்கள் LankaPay அட்டைகளைப் பயன்படுத்தும் போது ரூ.15/- அறவிடப்படும்.
தயவு செய்து உங்களுடைய வங்கியின் வாடிக்கையாளர் நிலையத்தைத் தொடர்பு கொண்டு சிக்கலை புகாரளியுங்கள். பின்னர் உங்களுக்கான புதிய அட்டையினை பெற்றுக்கொடுக்கவோ அல்லது சிக்கிய அட்டையினை திரும்பப் பெற்றுத்தருவதற்கான பிரயத்தனங்களையோ வங்கி மேற்கொள்ளும்.
தயவுசெய்து உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் நிலையத்தை உடனடியாக தொடர்பு கொண்டு குறித்த அட்டையைச் செயலிழக்கச் செய்வதன் மூலம் உங்கள் கணக்கிலிருந்து பரிவர்த்தனை செயற்பாடுகளை நிறுத்துங்கள்.
CEFT என்பது வங்கிகளுக்கிடையில் நிகழ் நேரத்தில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள உதவும் ஒரு பரிமாற்றத் தளமாகும். இதனூடாக ரூபா 5 மில்லியன் வரையிலான பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.
ஆம், CEFTS பணம் பரிமாற்றத்திற்கு பாதுகாப்பானது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டு, PCI-DSS பதிப்பு 3.2 எனும் பாதுகாப்புத் தரத்துடன் செயற்படுகிறது, இது உங்கள் பரிவர்த்தனைகளுக்கு மிக உயர்ந்த நிலையான பாதுகாப்பை உறுதிசெய்கிறது. LankaPay வலையமைப்பில் இணைந்துள்ள அனைத்து அங்கத்தவ வங்கிகளும் இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்டவையாகும்.
ஆம், இது ஆண்டு முழுவதும் 24/7 முறையில் இயங்குவதுடன் பரிவர்த்தனைகளை நிகழ்நிலையில் செயற்படுத்துகின்றது
CEFTS இனூடாக ரூ 5,000,000 வரையிலான பணப்பரிமாற்றத்தினை மேற்கொள்ள முடியும். எனினும் வங்கிக்கு வங்கி இத்தொகை வேறுபடலாம். ஆகையினால் மேலதிக தகவல்களுக்காக உங்களுடைய வங்கியினை தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் வங்கியினை அணுகி விண்ணப்பத்தினை முன்வைய்யுங்கள். அவர்கள் LankaPay இற்கு உங்களது சார்பில் சான்றளிக்கப்பட்ட ஒரு காசோலைக்கான கோரிக்கையை முன்வைப்பார்கள்.
ஜஸ்ட்பெ என்பது உங்கள் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி நேரடியாக சில்லறைப் பணம் செலுத்துவதற்கான ஒரு பரிவர்த்தனைத் தேர்வாகும்.
எந்தவொரு ஜஸ்ட்பெ அங்கீகாரமுடைய மொபைல் கட்டண செயலியையும் பதிவிறக்கம் செய்து உங்கள் வங்கி தரவுகளுடன் பதிவு செய்யுங்கள். பின்னர், ஜஸ்ட்பெ ஊடாக உங்கள் வங்கி கணக்கிலிருந்து நேரடியாக பணமனுப்புவதற்கு குறித்த கட்டண செயலியைப் பயன்படுத்துங்கள்.
ஜஸ்ட்பெ உடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து மொபைல் கட்டண செயலிகளும் நிதி நிறுவனங்களும் இலங்கை மத்திய வங்கியினால் நிர்வகிக்கப்படுகின்றன. எந்தவொரு செயலியினையும் பயன்படுத்தி நீங்கள் ஜஸ்ட்பெ உடன் பதிவு செய்யும் போது உங்கள் தரவுகள் வணிகரின் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களால் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகின்றன. மேலும் உங்கள் தனிப்பட்ட வங்கி தரவுகளைப் பாதுகாக்கத் தொடர்ந்தும் ஏராளமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உங்கள் கையடக்கப் பேசியின் ரகசிய இலக்கத்தினை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
எப்பொழுதும் சிக்கலான ரகசிய இலக்கத்தைப் பேணுங்கள்
உங்கள் ஜஸ்ட்பெ ரகசிய இலக்கத்தை யாருடனும் பகிராதீர்கள்
உங்கள் கைப்பேசியினை மாற்றும் போதும் வங்கி கணக்கை மாற்றும் போதும் ஜஸ்ட்பெ உடன் மீள்பதிவு செய்யுங்கள்.
உங்களது வங்கியினூடாக SMS சேவையை செயற்படுத்திக் கொள்ளுங்கள் இதனூடாக, இடம்பெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான தகவல்கள் SMS ஊடாக உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
உடனடியாக உங்களது வங்கியினை தொடர்பு கொண்டு சிக்கலினை புகாரளிப்பதுடன் குறித்த சிக்கலுக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் வரையில் உங்களது கணக்கிலிருந்து செய்யப்படும் சகல பரிவர்த்தனைகளையும் முடக்கி வைக்குமாறு கோரவேண்டும்..
ஜஸ்ட்பெ மூலம் பணம் செலுத்தும் போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் வங்கியையோ அல்லது நீங்கள் பயன்படுத்தும் மொபைல் கட்டண செயலியின் வாடிக்கையாளர் மையத்தினையோ தொடர்பு கொண்டு உதவியினை பெற்றுக்கொள்ள வேண்டும். சிக்கலைத் தீர்க்க அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
SLIPS ஆனது வங்கிகளுக்கிடையில் 5 மில்லியன் ரூபா வரையில் பரிமாற்றிக்கொள்ளக்கூடிய நிகழ்நிலையல்லாத ஒரு முறையாகும்.
ஆம். மதியம் 1.30க்கு முன்னதாக பணம் சமர்ப்பிக்கப்பட்டால், அதே நாளில் பெறுநரின் கணக்கில் வரவுவைக்கப்படும். இருந்த போதிலும் உங்கள் வங்கியின் தனிப்பட்ட SLIPS காலவரம்புகளை அவர்களுடன் கலந்தாலோசியுங்கள்.
ஆம், SLIPSஐப் பயன்படுத்தி 14 நாட்களுக்கு முன்னதாகவே மதிப்பு-தேதியிடப்பட்ட பரிவர்த்தனையைத் திட்டமிடலாம்.
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.