En  |  සිං



உங்களுக்கான LankaSign ஆவணம் ஒப்பமிடல் சான்றிதழ்கள்

LankaSign உடன் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மையினை அனுபவித்திடுங்கள். நாம் வழங்கும் நம்பகமான டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ்கள், உறுதிபடுத்தப்பட்ட அடையாளங்கள் மற்றும் வலுவான டிஜிட்டல் கையொப்பங்களுடன் ஆவணங்களை உருவாக்க உங்களுக்கு உதவுகின்றன. உங்கள் அனைத்து டிஜிட்டல் கையொப்பத் தேவைகளுக்கும் LankaSign வழங்கும் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

டிஜிட்டல் கையொப்பம் என்றால் என்ன?

டிஜிட்டல் கையொப்பம் என்பது டிஜிட்டல் சான்றிதழால் பலப்படுத்தப்பட்டுள்ள ஒரு மின்-கையொப்பம் ஆகும். இது பொது விசை குறியாக்கத்தால் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனித்துவமான டிஜிட்டல் குறியீடாகும். மின்னணு முறையில் அனுப்பப்படும் ஆவணத்துடன் இணைக்கப்படும் இந்தக் குறியீடு, கையொப்பமிடுபவரையும் ஆவணத்தின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்க உதவுகின்றது.

LankaSign டிஜிட்டல் கையொப்பங்களுடன் ஒரு தகவல்தொடர்பின் ரகசியத்தன்மை, நாணயம் மற்றும் துல்லியத்தைப் பராமரிக்க முடிவதுடன் உங்களது பரிவர்த்தனைகளும் தரவுகளும் பாதுகாக்கப்படுவதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

டிஜிட்டல் கையொப்பங்களிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் அனுகூலங்கள்

நம்பிக்கையானது மற்றும் தரநிலைகளுக்குட்பட்டது

உயர்தர பாதுகாப்பு தரநிலைகளை பேணுவதனூடாக உங்களது ஒவ்வொறு பரிவர்த்தனையும் பாதுகாப்பாகவும் தரநிலைகளுக்குட்பட்டு இணக்கப்பாட்டுடனும் நிகழ்வது உறுதி செய்யப்படுகின்றது.

பாதுகாக்கப்பட்டது

அதி நவீன குறிமுறையாக்க நுட்பங்களுடன் டிஜிட்டல் கையொப்பமானது உங்களது ஆவணங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்கின்றது.

பயனருக்குப் பிரத்தியேகமானது

டிஜிட்டல் கையொப்பத்தினூடாக உங்களது ஆதாரசான்றுகளை உறுதிபடுத்தவும் உங்கள் கையொப்பத்தைச் சரிபார்க்கவும் உங்களுக்கானதொரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தைப் பயன்படுத்த உதவுகின்றது.

உங்கள் வணிகம் LankaSign டிஜிட்டல் கைய்யொப்பங்களை ஏற்க வேண்டியதன் தேவைகள்

  • சட்டப்பூர்வமான அங்கீகாரம்
    • இது இலங்கையில் தேசிய சான்றளிப்பு அதிகாரசபை பணிக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட முதலாவதும் ஒரே அங்கீகரிக்கப்பட்ட சான்றளிப்பு சேவை வழங்குநர் (CPS) ஆகும்.
  • மின்னணு பரிவர்த்தனைகள் சட்டத்துடன் இணங்குகிறமையால் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
  • இணையற்ற பாதிக்க முடியாத தொழில்நுட்பங்களுடன் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களைப் பின்பற்றுகிறது.
    • ISO 27001:2013 சான்றளிக்கப்பட்டது.
    • வெப் டிரஸ்ட் சான்றளிக்கப்பட்டது.
  • இராணுவ தர பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தி 24x7 கண்காணிக்கப்பட்ட தரவு மையங்கள்.
  • பயனருக்கு பரிச்சயமானது
  • கணினிகள், மடிக்கணினிகள், ஆண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல் சாதனங்களை ஆதரிக்கிறது
  • குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளமுடிதல்
  • உங்கள் வணிகத்திற்கு அதிக செயல்திறனைக் கொண்டுவருவதனூடாக நேரத்தை சேமிக்கின்றது
  • நிர்வாகச் கிரயங்களைக் குறைப்பதன் மூலம் செலவுகளைச் சிக்கனப்படுத்துகின்றது
  • உங்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது

உங்கள் ஆவணக் கையொப்பத் தீர்வைத் தேர்வு செய்யுங்கள்

தேசிய மற்றும் சர்வதேச அளவில் எமது ஆவணக் கையொப்பச் சான்றிதழ் தீர்வுகள் பரவலாக நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உங்களது தேவைகளுக்கேற்ற உரிய தீர்வைத் தேர்ந்தெடுங்கள்.

ஹார்ட் டோக்கன் (Hard Token)

காண்க

மற்றொரு தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander