En  |  සිං



சிலிப்ஸ் நிதி பரிவர்த்தனை உடன் உங்கள் கட்டண சேவையை மேம்படுத்திடுங்கள்

சிலிப்ஸ் நிதி பரிவர்த்தனை

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவானதும் சௌகரியமானதுமான ஒரு கட்டணத்தீர்வை பெற்றுக்கொடுக்க விரும்புகின்றீர்களா? LankaPay இனால் இயக்கப்படும் சிலிப்ஸ் நிதி பரிவர்த்தனையோடு (SLIPS) இணைந்து உங்கள் கட்டண சேவைகளில் புரட்சியை ஏற்படுத்திடுங்கள்.

சிலிப்ஸ் நிதி பரிவர்த்தனை ஆனது, முக்கியமாக குறைந்த மதிப்புள்ள கட்டண செலுத்தல்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடுதல் பாதுகாப்பை பெற்றுக்கொடுத்து அதே நாளில் மின்னணு நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ள வழிவகுக்கின்றது. சிலிப்ஸ் நிதி பரிவர்த்தனையின் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களின் சம்பளம், பயன்பாட்டு பட்டியல்கள், நிலையாணைகள் போன்ற பல்வேறு கட்டணத் தேவைகளுக்கான தடையற்ற நிதி பரிவர்த்தனைகளை அனுபவிக்க முடியும்.

வளர்ந்து வரும் வலையமைப்பான சிலிப்ஸ் நிதி பரிவர்த்தனை அமைப்பின் பங்காளராக ஆவதுடன் உங்கள் கட்டண சேவைகளை அடுத்தப் பரிமாணத்திற்கு இட்டு செல்லுங்கள். சிலிப்ஸ் நிதி பரிவர்த்தனை மூலம், உங்கள் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சிறந்த சௌகரியத்தையும் பாதுகாப்பையும் வழங்குங்கள்.

சிலிப்ஸ் நிதி பரிவர்த்தனையின் சிறப்பம்சங்கள்

  • மொத்த சில்லறை கட்டணங்களுக்காக அதே நாளில் தீர்வு
  • 14 வணிக நாட்கள் வரை மதிப்பு தேதி பரிவர்த்தனைக்கான செயல்படுத்தல்
  • இலங்கை மத்திய வங்கியின் RTGS அமைப்பின் ஊடாக வங்கிகளுக்கிடையிலான பரிவர்த்தனைகள் தீர்க்கப்படுகின்றமை

பங்கேற்பாளர்களின்

  1. முதன்மை பங்கேற்பாளர்கள் – இலங்கையின் உரிமம் பெற்ற வணிக வங்கிகள்.
  2. இரண்டாம் நிலை பங்கேற்பாளர்கள் – இலங்கையில் தொழிற்படும் வணிக வங்கிகள் அல்லாத ஏனைய நிதி நிறுவனங்கள்

பரிவர்த்தனை வகைகள்

  1. வரவு பரிவர்த்தனைகள்
  2. செலவு பரிவர்த்தனைகள்

தற்போது சிலிப்ஸ் நிதி பரிவர்த்தனையுடன் கைக்கோர்த்துள்ள நிதி நிறுவனங்கள்

புள்ளிவிரங்கள்

2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதியின் முடிவடைந்த நிதியாண்டிற்கான புள்ளிவிரங்கள்

45

பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை

55.1 மில்லியன்

பரிவர்த்தனை அளவு

3.5 டிரில்லியன்

பரிவர்த்தனை மதிப்பு

நிதி நிறுவனங்களுக்கான சிலிப்ஸ் நிதி பரிவர்த்தனையின் சாரள வெட்டு நேரங்கள்

கீழ்க்காணும் காலவரைகளில் சிலிப்ஸ் செயல்பாடுகளை மேற்கொள்வோம்.

தீர்வு அமர்வு தீர்வு சுற்று சாரள திறப்பு நேரம் சாரள மூடு நேரம் செயல்பாடு
அமர்வு 1 வெளிநோக்கியது 15:00 20:00 LankaPay இற்கு நிதி நிறுவனங்கள் வெளிநோக்கியத் தரவை சமர்ப்பிக்கும்
உள்நோக்கியது 21:45 09:00 (அடுத்த வேலை நாள்) LankaPay நிதி நிறுவனங்களுக்கு பதிவிறக்கம் செய்ய உள்நோக்கியத் தரவை சமர்ப்பிக்கும்
அமர்வு 2 வெளிநோக்கியது 9:00 11:00 LankaPay இற்கு நிதி நிறுவனங்கள் வெளிநோக்கியத் தரவை சமர்ப்பிக்கும்
உள்நோக்கியது 12:30 09:00 (அடுத்த வேலை நாள்) LankaPay நிதி நிறுவனங்களுக்கு பதிவிறக்கம் செய்ய உள்நோக்கியத் தரவை சமர்ப்பிக்கும்
அமர்வு 3 வெளிநோக்கியது 12:30 13:30 LankaPay இற்கு நிதி நிறுவனங்கள் வெளிநோக்கியத் தரவை சமர்ப்பிக்கும்
உள்நோக்கியது 15:00 09:00 (அடுத்த வேலை நாள்) LankaPay நிதி நிறுவனங்களுக்கு பதிவிறக்கம் செய்ய உள்நோக்கியத் தரவை சமர்ப்பிக்கும்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander