En  |  සිං



நிதி நிறுவனங்களுக்கான ஜஸ்ட்பெ

ஜஸ்ட்பெ

ஜஸ்ட்பெ உடன் நிதி நிறுவனங்களால் அனைத்து தரப்பினருக்கும் அனுகூலமளிக்கூடிய வினைத்திறனானதும் நேர்த்தியானதுமான கட்டண அனுபவத்தினை பெற்றுக்கொடுக்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு தமது கணக்குகளை மொபைல் செயலிகள் மற்றும் மின் வணிக தளங்களுடன் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் இணைத்துக்கொள்ள முடிவதுடன் இதனால் இலகுவாக கட்டணங்களை செலுத்த முடியும். இதேவேளையில் குறைக்கப்பட்ட பரிவர்த்தனை செலவுகளுடன் வர்த்தகர்களும் அனுகூலமடைகின்றனர். வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகள் மூலம் நேரடியாக பணம் செலுத்தும்போது வங்கி அறவீடுகள் கணிசமான அளவில் குறைவாக இருப்பதை ஜஸ்ட்பெ உறுதி செய்வதனால் இது சாத்தியப்படுகின்றது.

ஜஸ்ட்பெ உடன் இணைந்து நிதி நிறுவனங்களால் அவர்களது வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு எளிமையையும் விளைத்திறனையும் வழங்கும் ஒர் அதிநவீன கட்டணத் தீர்வை பயன்படுத்த ஆதரிக்க முடியும். இதனால் அவர்களால் டிஜிட்டல் வங்கியியல் துறையில் ஈடிணையற்ற முன்னோடிகளாகத் திகழ முடியும்.

எவ்வாறு ஒரு ஜஸ்ட் பெ வழங்குனராக மாறுவது

  • எம்மை தொடர்பு கொள்ளுங்கள் நாம் உங்களுக்கு ஒருங்கிணைப்பு செயற்பாடுகளில் உதவுவோம்.
  • ஜஸ்ட்பெ இனை ஒரு கட்டண தேர்வாக வழங்க உங்கள் நிதி நிறுவனம் LankaPay நிகழ்நேர நிதி பரிவர்த்தனை (CEFTS) வலையமைப்பின் அங்கத்தவராக இருக்க வேண்டும்.
  • நீங்கள் ஒரு ஜஸ்ட்பெ வழங்குநராக மாறியதும், உங்கள் நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை எந்த ஜஸ்ட்பெ ஒத்தியக்கமுடைய மொபைல் செயலியிலும் இணைத்துப்பணம் செலுத்தலாம்

ஜஸ்ட்பெ பெறுநராக மாறுவது எப்படி?

  • எம்மை தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் உங்களுக்கு ஒருங்கிணைப்பு செயற்பாடுகளில் உதவுவோம்.
  • ஒரு ஜஸ்ட்பெ பெறுநராகுவதற்கு உங்கள் நிதி நிறுவனம் LankaPay நிகழ்நேர நிதி பரிவர்த்தனை (CEFTS) வலையமைப்பின் அங்கத்தவராக இருக்க வேண்டும்.
  • நீங்கள் ஒரு ஜஸ்ட்பெ பெறுநராக மாறியதும், எந்தவொரு மொபைல் செயலி அல்லது மின் வணிக தளத்துடனும் ஒத்தியங்கி ஜஸ்ட் பெ சேவைகளை வழங்கலாம்.

தரவுகள்

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டு புள்ளிவிவரங்கள்

724,836

புதிய கணக்குகள்

21,044,087

பரிவர்த்தனை அளவு

ரூ. 104,892,755,168.88

பரிவர்த்தனை மதிப்பு

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander