En  |  සිං



பேமி

பேமி என்பது இணைப்பினூடாக கட்டணம் செலுத்தும் (pay-by-link) என்ற தடையற்றதும் இலகுவானதுமானஒரு புரட்சிகரமான பரிவர்த்தனை தீர்வாகும். இந்த புரட்சிகர புத்தாக்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் ஒரு பேமி link அனுப்பினால் போதும், பின்னர் உங்கள் வாடிக்கையாளர்களால் ஈடிணையற்ற சௌகரியத்துடன் அவர்கள் விரும்பிய செயலிகளின் மூலம் ஒரே க்ளிக்கில் உடனடியாக கட்டணங்களை செலுத்த முடிவதாகும்.

பாதுகாப்பினை மையமாக கொண்டு பேமி வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்டணத்தளம், முக்கியமான கணக்கு விவரங்களைப் பாதுகாக்கும் உட்பொதிக்கப்பட்டப் பாதுகாப்பு கடமைப்பைக் கொண்டுள்ளது. இது நிதி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வாடிக்கையாளர்கள் ஆகிய இரு சாராரினதும் ரகசியத்தன்மை மற்றும் மன அமைதியை உறுதி செய்கிறது. பேமி தனது ஒவ்வொரு பரிவர்த்தைனையிலும் நம்பகத்தன்மையை உறுதிசெய்கிறது.

மேலும், பேமி end-to-end வணிக செயல்முறை தானியக்கமாக்கலை எளிதாக்குகின்றது. இது நிதி நிறுவனங்களுக்கு பணிகளை தானியக்கமாக்கவும் செயலாக்கங்களை எளிதாக்கவும் உதவுகின்றது. பரிவர்த்தனைகளைத் தொடங்குவதில் இருந்து கட்டணங்களை சரிபார்ப்பது வரையான அனைத்துச் செயன்முறைகளையும் பேமி எளிதாக்குகின்றது. இது நேரத்தையும் வளங்களையும் சேமிக்கும் அதே வேளையில் துல்லியத்தையும் மேம்படுத்துகின்றது.

அதுமட்டுமின்றி, பேமியின் இயங்குதன்மை கொண்ட கட்டண இணைப்புகள் (links)பல்வேறு தளங்களிலும் தடையற்ற பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்கின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு சுமூகமானதும் அசௌகரியமற்றதுமான கட்டண அனுபவத்தை வழங்குகின்றது.

நிதி நிறுவனங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • தனிப்பட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு ஏற்றவாறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர் திருப்தி மற்றும் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள முடிதல்.
  • கடன் அட்டைகள், குத்தகை அல்லது பிற கட்டண நிலுவைகளை வசூலிப்பதை தானியங்குப்படுத்துவதன் மூலம், செயல்முறைகளை எளிதாக்குதல் மற்றும் நிதி நிறுவனங்களின் கைமுறை வேலைப்பளுவைக் குறைத்தல்.
  • ATMகள் மூலம் அட்டை இல்லாத off-us பரிவர்த்தனைகள் போன்ற புத்தாக்கமான தீர்வுகளை கண்டறிந்து, இணக்கத்திறனை நடைமுறைப்படுத்துதல் மற்றும் போட்டிச் சூழலில் முன்னணியில் இருக்க முடிதல்.

தற்போது பேமியுடன் கைக்கோர்த்துள்ள நிறுவனங்கள்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander