En  |  සිං



நிதி நிறுவனங்களை வலுப்படுத்தியவாறு அரச கட்டணங்களை டிஜிட்டல் மயமாக்குதல்.

அரச டிஜிட்டல் கட்டணத்தளம்

சமகால டிஜிட்டல் சகாப்தத்தில், பாரிய அளவில் அரச அமைப்புகளில் நடைமுறையிலுள்ள பாரம்பரிய பணப் பரிவர்த்தனைகள் மற்றும் எழுத்துருவில் முன்வைக்கப்படும் ரசீதுகள் போன்றவற்றின் வினைத்திறனின்மையை புரிந்து கொண்டு, LankaPay, இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவை ஒன்றிணைந்து தற்போது நிலவி வரும் வெற்றிடத்தினை நிரப்புவதற்காக முன்னோடியாக திகழ்கின்ற அரச டிஜிட்டல் கட்டணத்தளத்தினை செயற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.

2023 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட வரவு செலவு திட்டத்தின் ஆதரவுடன் அனைத்து அரச கட்டணங்கள் மற்றும் சேகரிப்புக்களும் விரைவில் டிஜிட்டல் தளங்களுக்கு மாற்றப்பட வேண்டும். இந்த மூலோபாயமானது தற்போது நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவது மட்டுமல்லாது உலகளாவிய டிஜிட்டல் மயமாக்கப்படுதலின் போக்குடன் ஒத்திசைந்து செயற்படுகின்றது.

இது செயலாக்கங்களை சீரமைப்பதற்கும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் நிதி நிறுவனங்களுக்கானதொரு வாய்ப்பாகும். டிஜிட்டல் அரச கட்டணத் தளத்தை ஆதரிப்பதனூடாக பாதுகாப்பும் வினைத்திறனும் மிக்க ஊடகத்தினூடாக அரச கட்டணங்களை கையாளும் அதிகாரத்தினை நிறுவனங்களால் பெற்றுக்கொள்ள முடியும். இந்த மாற்றம் நிதிச் செயல்முறைகளில் அதிக வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிபடுத்தி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வாடிக்கையாளர்கள் ஆகிய இரு சாராருக்கும் அனுகூலமளிக்கின்றது.

நிதி நிறுவனங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்.

  • மேம்படுத்தப்பட்ட வினைத்திறன்: அரச டிஜிட்டல் கட்டணத் தளமானது வங்கிகளுக்கான பரிவர்த்தனை செயல்முறைகளை நேர்த்தியாக்குகின்றது. இது நிலவுகின்ற பௌதீக கையாள்தல்களையும் எழுத்துருவில் முன்வைக்கப்படும் ரசீதுகளின் பாவனையையும் மட்டுப்படுத்துகின்றது.
  • செலவு சேமிப்பு: இலத்திரனியல் கட்டணங்களுக்கு மாறுவதன் ஊடாக காசு கையாள்தல், சேமிப்பு மற்றும் செயலாக்கங்களின் போது ஏற்படும் செலவுகளை குறைத்துக்கொள்ள முடியும். இது காலப்போக்கில் பாரியதொரு சேமிப்புக்கு வழிவகுக்கும்.
  • மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு: பணப்பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும் போது டிஜிட்டல் கட்டணமானது உயர்ந்த பாதுகாப்பினை வழங்குவதுடன் திருட்டு, மோசடிகள் மற்றும் இழைக்கப்படக்கூடிய தவறுகள் ஆகிய அனர்த்தங்களை குறைக்கின்றது.
  • மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவம்: டிஜிட்டல் கட்டணத் தேர்வானது வாடிக்கையாளார்களுக்குத் தேவையான சௌகரியம், நெழ்வுத் தன்மை மற்றும் அனுகூலங்களை பெற்றுக்கொடுப்பதன் மூலம் அதிக திருப்தியையும் விசுவாசத்தையும் பெற்றுத்தருகின்றது.

தற்போது கைக்கோர்த்துள்ள அரச நிறுவனங்கள்

  • ஆயுர்வேதத் திணைக்களம்
  • யாழ் பிரதேச செயலகம்
  • கேகாலை பிரதேச செயலகம்
  • மஹர பிரதேச செயலகம்
  • இரத்மலானை பிரதேச செயலகம்
  • திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகம்
  • கம்பஹா மாநகர சபை
  • ரம்புக்கன்னை பிரதேச சபை
  • இலங்கை அணுசக்தி சபை
  • இலங்கை துறைமுக அதிகாரசபை – தீர்வு அனுமதி முகாமைத்துவ அமைப்பு
  • இலங்கை நில அளவைத் திணைக்களம்
  • இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு
  • மொறட்டுவை பல்கலைக்கழகம்
  • தொழில் பயிற்சி அதிகாரசபை
  • எதிர்கால நிறுவனங்கள் (அனைத்து உள்ளூர் அதிகாரசபைகள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்கள்)

மேம்பட்ட தேடல்

எண் நிதி நிறுவனம் இணைய வங்கிப்பணி மொபைல் வங்கிப்பணி கவுண்டரில் நேரடியாக

தேடல் முடிவு எதுவும் இல்லை

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander