We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
நாம் பணப்பரிவர்த்தனைகளோடு மட்டுப்படாமல் உங்களது குறித்த பணப்பரிமாற்றங்களை எளிதானதாகவும்; விரைவானதாகவும்; பாதுகாப்பானதாகவும் வடிவமைக்கும் உன்னதமான பயணத்தில் முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
பௌதீக பணப்புலக்கமற்ற சமூகத்தை நோக்கிய இலங்கையினை வடிவமைக்கும் பயணத்தின் பின்னணியில் மாபெரும் உந்துதலாய் இருந்து வருகின்ற LankaPay ஆனது வலுவான, வினைத்திறனுடன் கூடிய சுயாதீன தேசிய கட்டண உட்கட்டமைப்பை நிறுவுவதனை நோக்காக கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
ஆனால் எமது பயணம் இத்துடன் நின்றுவிடப்போவதில்லை. நாம் தொடர்ந்து எல்லைகளைத் கடந்து பரந்து விரிவடைந்து வருவதுடன் புதிய சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம்> மேலும் நிதி பரிவர்த்தனைகள் அனைவருக்கும் சமமானதாகவும் அணுகக்கூடியதாகவும் இருக்கும் உலகத்தை உருவாக்க அயராது உழைத்து வருகின்றோம்.
ஒன்றாக> ஒவ்வொரு பரிவர்த்தனையும் முன்னெப்போதையும் விட எளிமையாகவும்> துரிதமாகவும்;> பாதுகாப்பானதாகவும் இருக்கும் எதிர்காலத்தை உருவாக்க முனைகின்றோம். LankaPay உலகிற்கு உங்களை பெருமையுடன் வரவேற்கின்றோம்> நிதித்துறையின் எதிர்காலம் இதோ உங்களுக்காக
இலங்கையின் தேசிய கொடுப்பனவு வலையமைப்பான இலங்கையின் தேசிய கொடுப்பனவு வலையமைப்பின் இயங்குதளமாக LankaPay இற்கு சிறந்த தீர்வைக் கொண்டுவருதல்.
LankaPay இல் நாம் புத்தாக்கங்களில் செழித்து வருகின்றோம். நாம் சவால்களை வாய்ப்புகளாகப் பார்க்கின்றோம் மற்றும் யோசனைகளை விரைவாகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் ஆக்கபூர்வமான தீர்வுகளாக மாற்றுகின்றோம்.
எமது வாடிக்கையாளர்கள்> இறுதிப் பயனர்கள்> வணிகர்கள் மற்றும் பரந்த சமூகத்திற்குப் பலனளிக்க பல்வேறு கூட்டாளர்களுடன் கைகோர்த்துச் செயல்படுகின்றோம். ஒருங்கிணைந்த குழு அணுகுமுறையுடன்> நாம் ஒன்றாக வெற்றி ஈட்டுகின்றோம்.
பன்முகத்தன்மையே நமது பலம். சமூக அந்தஸ்து> இனம்> மதம்> புவியியல் அல்லது நோக்குநிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் எமது தீர்வு சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குகின்றன. நாம் அனைவரையும் சமமாக மதிக்கின்றோம்.
நாம் செய்யும் அனைத்திற்கும் எளிமையே முக்கியமானது. எமது வாடிக்கையாளர்களுக்கும் இறுதிப் பயனர்களுக்கும் வாழ்க்கையை எளிதாக்கும் வசதியான தீர்வு சேவைகளை வழங்குவதில் நாம் சிறந்து விளங்குகிறோம்.
எமது உதவிச் சேவையானது 24 மணி நேரமும் கிடைப்பதுடன் மேலும் எமது பயனர்கள் எங்கிருந்தாலும் எமது சேவைகளை எளிதாக அணுக முடியும்.
நாம் எமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் எமது வார்த்தைகள் மற்றும் செயல்களின் உரிமையையும் எமது சேவையின் அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதிசெய்கின்றோம். LankaPay இல் நாம் செய்யும் அனைத்திலும் நம்பிக்கையே மையமாக உள்ளது.
2002 ஆம் ஆண்டு வங்கிகளுக்கு இடையேயான காசோலைகளை அகற்றும் செக் கிளியரிங் நிறுவனமாக எளிமையான ஆரம்பத்திலிருந்து LankaPay> இலங்கையின் தேசிய கட்டண வலையமைப்பின் இயங்குதளமாக பரிணமித்து> இலங்கையின் கொடுப்பனவுச் சூழல் அமைப்பின் மையமாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக> நாம் பணம் செலுத்தும் உள்கட்டமைப்பு மேம்பாடு> உள்ளடங்கல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளோம்> இது நாட்டின் நிதி நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு பங்களிக்கின்றது.
கொடுப்பனவு உள்கட்டமைப்பு செயல்திறனை மேம்படுத்துவது முதல் நிதி உள்ளடக்கத்தை வளர்ப்பது வரை> இலங்கையின் நிதிக் கட்டமைப்பில் LankaPay இன் தாக்கம் ஆழமானது மற்றும் தொலைநோக்குடையது. டிஜிட்டல் கொடுப்பனவுகளை நெறிப்படுத்துதல் மற்றும் உலகளாவிய பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி> அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் இணைக்கப்பட்ட மற்றும் நிதி ரீதியாக வலுவூட்டப்பட்ட சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு நாம்; அர்ப்பணிப்புடன் திகழ்கின்றோம்.
நாம் முன்னோக்கிப் பார்க்கையில்> எமது பார்வை தெளிவாக உள்ளது. நிதிச் சேவைகள் நிலப்பரப்பில் மற்றும் ஒவ்வொரு இலங்கையர்களின் வாழ்விலும் தொடர்ந்து நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில்> உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தடையற்ற நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் எமது பங்கை மேலும் மேம்படுத்தியுள்ளோம்.
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.