En  |  සිං



அமெரிக்க டாலர் வரைவு கொடுப்பனவு

காலங்காலமாக அமெரிக்க டாலர் காசோலை அல்லது வரைவு தீர்வுகளுக்கு மூன்று வாரங்களுக்கும் மேலான கால அவகாசத்திற்கான தேவை நிலவியது! எனினும் இனி வரும் காலங்களில் அச்சங்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், அமெரிக்க டாலர் வரைவு கொடுப்பனவு (UITS) எனப்படும் புரட்சிகரமானதொரு தீர்வினை 2002 ஆம் ஆண்டில் LankaPay (Pvt) Ltd அறிமுகப்படுத்தி பாரியதொரு மாற்றத்தினை ஏற்படுத்தியது. பல வாரங்களை எடுத்துக்கொண்ட தீர்வு செயல்முறையை வெறும் நான்கே நாட்களுக்கு மட்டுப்படுத்தி, வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகிய இரு சாராரினதும் காலத்தையும் பணத்தையும் சேமித்து வருகின்றது.

LankaPay 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய அமெரிக்க டாலர் வரைவு கொடுப்பனவு (UITS) எனும் புரட்சிகர சேவையை எண்ணி பெருமிதமடைகின்றது. அமெரிக்க டாலர் வரைவு கொடுப்பனவு (UITS)டன் நாம் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளதுடன், வங்கிகளுக்கிடையில் மாற்றப்படும் பௌதீக காசோலைகளின் தேவையை அகற்றியுள்ளோம். இனி நீண்ட நேர காத்திருப்புகளுக்கு விடை கொடுத்திடுங்கள். அமெரிக்க டாலர் வரைவு கொடுப்பனவின் உதவியுடன் இப்போது உங்களால் ஒரே நாளுக்குள் அமெரிக்க டாலர் காசோலைகளுக்குத் தீர்வு காண முடியும்.இதன் எளிமையுடனும் வினைத்திறனுடனும் கிட்டத்தட்ட 22 அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் செயற்பாடுகளின் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. LankaPay உடன் உள்நாட்டு அமெரிக்க டாலர் தீர்வின் வேகமான செயல்முறையில் இணையுங்கள்!

உங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • தீர்வு செயல்முறைக்கு அமெரிக்க டாலர் காசோலைகளுக்கான பௌதீக தேவை நீக்கபடுதல்.
  • விரைவானதும் பாதுகாப்பானதுமான காசோலை பரிவர்த்தனைகள், குறித்த செயற்பாட்டு தினம் + தொடர்ந்து வரும் வேலை நாளில் (T+1) தீர்க்கப்படுகின்றமை.
  • அமெரிக்க டாலர் வரைவோலை அல்லது காசோலையின் நிலை அடுத்த வேலை நாளுக்குள்ளேயே தெரியவருதல்.
  • உரிய நேரத்தில் நிதி கிடைக்கப்பெறுதல்.
  • அமெரிக்க டாலர் வரைவு கொடுப்பனவு (UITS) ஆனது, தீர்வு செயல்பாடுகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்கிறது.

நீங்கள் விரும்பிய நிதி நிறுவனத்திடமிருந்து அமெரிக்க டாலர் வரைவு கொடுப்பனவினை கண்டறியுங்கள்.

காலாண்டு புள்ளி விவரங்கள்

வருடம் காலாண்டு அமெரிக்க டாலர் காசோலை/ வரைவு அளவு அமெரிக்க டாலர் காசோலை/ வரைவு பெறுமதி
2021 Q1 7.6 68 மில்லியன்
Q2 6.3 51 மில்லியன்
Q3 7.2 64 மில்லியன்
Q4 7.3 70 மில்லியன்
2022 Q1 7.9 75 மில்லியன்
Q2 10.9 101 மில்லியன்
Q3 15.6 138 மில்லியன்
Q4 16.1 119 மில்லியன்
2023 Q1 16.5 99 மில்லியன்
Q2 15.8 94 மில்லியன்
Q3 16.9 95 மில்லியன்
Q4 17.6 104 மில்லியன்
2024 Q1 17.8 108 மில்லியன்
Q2 17 115 மில்லியன்
Q3 8 145 மில்லியன்

வழமையான கேள்வி & பதில்கள்

இது ஒரு வணிக நாளுக்குள் செயல்படுத்தப்படும். பின்னர் அடுத்த வேலை நாளில் காசோலை ரியலைஸ் செய்யப்படும்.

  • இலங்கையில் உள்ள வங்கிகளால் வழங்கப்பட்ட அமெரிக்க டாலர் வரைவோலைகளுக்கு இலங்கையிலுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தப்படும்.
  • அதே போல் வெளிநாடுகளில் உள்ள வங்கிகள் அல்லது பரிமாற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்ட USD வரைவுகளுக்கும் இது பொருந்தும்.

இல்லை, படத்தைத் திரும்பப் பெறுவதற்கான ஆவணத்தை சரிபார்பதற்காக சமர்ப்பிப்பது அனுமதிக்கப்படவில்லை.

ஆம், நீங்கள் USD வரைவோலை அல்லது காசோலையை வழங்கும் வங்கி அல்லது பரிமாற்ற நிறுவனம் கட்டணத்தை நிறுத்த கோரி வலியுறுத்தலாம்.

இலங்கையில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நாணய பரிமாற்ற மனைகள்.

உங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander