En  |  සිං



தடைகளின்றி உங்கள் கட்டணங்களை நேரடி பற்றுடன் முகாமை செய்திடுங்கள்

நேரடி பற்று

உங்கள் வழமையான கட்டண நிலுவைகளுக்கான காலக்கெடுவை நினைவில் வைத்துக் கொள்வதில் சோர்வடைந்து விட்டீர்களா? உங்கள் பயன்பாட்டுப் பட்டியல்கள், காப்புறுதி தவணைகள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டணங்களை தானியக்கமாக்குவதற்கான தொந்தரவற்ற தீர்வு நேரடி பற்றாகும்.

நேரடி பற்று மூலம், குறிப்பிட்ட திகதிகளில் உங்கள் கணக்கிலிருந்து பணம் செலுத்துதல்களை தானியக்கப்படுத்த உங்கள் வங்கிக்கு அதிகாரம் அளிக்க முடியும். இதனால் இனி கட்டணங்கள் தாமதப்படுவதற்கோ தவறவிடப்படுவதற்கோ சாத்தியங்கள் இல்லை. ஏனெனில் நேரடிப் பற்றானது உங்கள் பட்டியல்கள் ஒவ்வொரு முறையும் சரியான நேரத்தில் தீர்க்கப்படுவதை உறுதி படுத்துகின்றது.

நேரடிப் பற்றுடன் இணையற்ற சௌகரியத்தினை அனுபவித்திடுங்கள். பௌதீக ரீதியில் பணம் செலுத்தும் தொந்தரவுகளுக்கு விடைகொடுத்து விட்டு, உங்கள் பட்டியல்கள் செம்மையான முறையில் தீர்க்கப்படுவதனை ஒட்டி மன அமைதியை நாடுங்கள். மேலும் அதிகபட்ச வாடிக்கையாளர் கட்டணமாக வெறும் ரூ. 50/- மட்டும் அறவிடப்படுதலானது அனைத்து சாராருக்குமானதொரு மலிவான தீர்வாகும்.

உங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • சௌகரியம்: வழக்கமான உங்களது பட்டியல் கட்டணங்களுக்கான காலக்கெடுவை கைமுறையாக நிர்வகிக்கவோ நினைவில் வைத்துக் கொள்ளவோ தேவையில்லை. தானியக்கமாக்கப்பட்ட நேரடிப் பற்று செயல்முறை உங்கள் நேரத்தையும் உழைப்பையும் சேமிக்கின்றது.
  • உரிய நேரத்தில் பணம் செலுத்தப்படுதல்: குறிப்பிட்ட திகதிகளில் உங்கள் கணக்கிலிருந்து செலுத்த வேண்டிய தொகை கழிக்கப்பட்டு பட்டியல்கள் உரிய நேரத்தில் தீர்க்கப்படுவதை உறுதி செய்வதனூடாக கால தாமதக் கட்டணங்கள் மற்றும் பணம் செலுத்துதல் தவறவிடப்படும் அபாயத்தை நீக்குகின்றது.
  • மன அமைதி: பட்டியல்கள் செலுத்தும் செயன்முறையை நேரடிப் பற்றுக்கு ஒப்படைப்பதன் மூலம், உங்கள் நிதி சார் பொறுப்புகள் தடையின்றியும் நம்பகமான முறையிலும் கவனிக்கப்படுகின்றன என்ற மன அமைதியை உங்களால் அனுபவிக்க முடியும்.
  • குறைந்த நிர்வாக தொந்தரவு: ஒவ்வொரு பட்டியல் கட்டணத்திற்கும் தனித்தனியாக பணம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை நீக்கி, நிர்வாகப் பணிகளைக் குறைத்து நிதி நிர்வாகத்தை எளிதாக்குகின்றது.
  • தாங்குமை: நேரடிப் பற்றினூடாக, அதிகபட்ச கட்டணமாக வெறும் ரூ. 50/- மட்டுமே அறவிடப்படுதலானது பட்டியல் கட்டணங்களை தானியக்கமாக்குவதற்கான மலிவானதொரு தீர்வை வழங்குகின்றது.
  • நெகிழ்வுத்தன்மை: பயன்பாட்டு பட்டியல்கள், காப்புறுதி கட்டணங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டணங்கள் உட்பட பல்வேறு வகையான பட்டியல்களையும் நேரடிப் பற்றினூடாக செலுத்தக்கூடிய நெகிழ்வுத்தன்மை.

நீங்கள் விரும்பிய நிதி நிறுவனத்திலிருந்து நேரடி பற்றினை கண்டறியுங்கள்

உங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander