Departmental
Sagittis, audantium sem eveniet lacus pede porttitor aenean.
We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
எமது நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் எங்களுடைய நீண்டகால இலக்குகளையும், நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களையும் தெளிவுபடுத்தி எமது ஒட்டுமொத்த மூலோபாயத்தைப் பற்றிய புரிதலை பெற்றுகொடுக்கின்றன. இந்த மூலோபாயத்தைப் புரிந்துகொள்வதானது எங்களை முன்னோக்கி நகர்த்துவதற்கும் பரந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கும் உறுதுணையாய் அமைகின்றது.
எமது நிறுவன இலக்குகள் ஒவ்வொரு துறைக்குமான தெள்ளத் தெளிவான நோக்கங்களை நிர்ணயித்துக்கொள்ள எங்களுக்கு வழிகாட்டுகின்றன. இதன் மூலம் நிறுவனத்திற்குள் இயங்கும் அனைவரும் ஒரு பொதுவான குறிக்கோளை நோக்கி ஒன்றிணைக்கப்படுவதை உறுதி செய்கிறோம். இந்த பரந்துபட்ட இலக்குகளை ஒவ்வொரு குழுவிற்குமானதாக குறிப்பிட்ட இலக்குகளாகப் பிரத்தியேகமாக பிரித்துக் கொள்வதன் மூலம், வெற்றியை நோக்கி எம்மை ஆற்றுப்படுத்த முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரயத்தனங்களை நாம் செயல்படுத்துகிறோம். இந்த அணுகுமுறை ஒவ்வொரு துறையிலும் காணப்படுகின்ற சவால்களை இனங்கண்டு அவற்றை வெற்றிகரமாக நிர்வகிக்க உதவுகிறது. இதன் மூலம் எங்களது முதன்மை நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான பாதையை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.
Sagittis, audantium sem eveniet lacus pede porttitor aenean.
Sagittis, audantium sem eveniet lacus pede porttitor aenean.
Sagittis, audantium sem eveniet lacus pede porttitor aenean.
Sagittis, audantium sem eveniet lacus pede porttitor aenean.
Sagittis, audantium sem eveniet lacus pede porttitor aenean.
நியதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்
கொள்கைகள், நடைமுறைகள், வழிகாட்டுதல்கள்
தொழில்துறை சிறந்த நடைமுறைகள்
பாதுகாப்பு தரநிலைகள்
சாத்தியமான இடர்களை அடையாளம் கண்டவுடன், குறிப்பிட்ட இடர்கள் எமது மூலோபாயங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஊகிக்கின்றோம். பின்னர் பொருத்தமான இடர் தணிப்பு முறைகளை பயன்படுத்துகிறோம். மேலும், நன்கு நிறுவப்பட்ட கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுகிறோம். எமது குறிக்கோளானது இடர்களைக் குறைப்பது, வளங்களை மேம்படுத்துவது மற்றும் எங்கள் அமைப்பின் செயல்திறன் மற்றும் நிறுவனத்தின் வினைத்திறன் மிக்க முன்னேற்றத்தை உறுதி செய்வதாகும்.
திணைக்கள முகாமையாளர்கள் மற்றும் செயல்முறை உரிமையாளர்கள் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு பொறுப்பானவர்களாக திகழ்கின்றனர். நிறுவன இடர் முகாமைத்துவ (ERM) குழு, விதிக்கப்பட்டக் கட்டுப்பாடுகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன, அவை எவ்வளவு நேர்த்தியாக பின்பற்றப்படுகின்றன என்பதைச் சரிபார்க்க மதிப்பீடுகளை மேற்கொள்கிறது. இந்த மதிப்பாய்வுகளின் முடிவுகள் இடர் மற்றும் ஆய்வு குழுக்களுடன் பகிரப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகளை எவ்வாறு மேம்படுத்தவும், செம்மைப்படுத்தவும் வேண்டும் என்பது குறித்து இங்கு மூலோபாய விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த தொடர் விவாதங்கள் எமது அபிவிருத்திக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை நிரூபிக்கின்றன. பின்னர் இறுதி முடிவுகள் அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்வதற்காகவும் செயல்படுத்தப்படுவதற்காகவும் நிர்வாக சபைக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன.
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.