En  |  සිං



அமெரிக்க டாலர் ஆன்லைன் கொடுப்பனவு

நிதியியல் உலகில், தடையற்ற செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வினைத்திறன் மிக்க கட்டண முறைகள் மிகவும் அவசியம். இலங்கை வங்கிகளுக்கிடையிலான அமெரிக்க டாலர் ஆன்லைன் கொடுப்பனவு முறை (Sri Lanka Interbank US Dollar On-line Payment System) இத்தகைய தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு புரட்சிகரமான தளமாகும்.

இந்த முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக அனைத்து உள்நாட்டு அமெரிக்க டாலர் பரிமாற்றங்களும், அமெரிக்காவில் செயற்படும் வங்கிகளில் பராமரிக்கப்படும் NOSTRO கணக்குகள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இந்த செயல்முறையின் போது விரையமாகும் நேரமும் குறிப்பிட்டளவிலான பொருட்செலவும் உள்நாட்டு அமெரிக்க டாலர் பரிமாற்றங்களுக்கு நம்பகமான, திறமையான மற்றும் செலவு குறைந்த வழிமுறைகளின் தேவையை உணர்த்திக்காட்டின.

இப்போது, அமெரிக்க டாலர் ஆன்லைன் கொடுப்பனவுடன் நிதி நிறுவனங்களுக்கு உள்நாட்டு அமெரிக்க டாலர் பரிமாற்றங்களை எளிதாக நிர்வாகிக்க முடியும். இலங்கையில் செயல்படும் அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகள் (LCB) மற்றும் நிதி நிறுவனங்களும் இந்த முறையில் பங்கேற்கத் தகுதியுடையவையாகும். இது பரவலான அணுகல் மற்றும் பங்கேற்பை உறுதி செய்கிறது.

அமெரிக்க டாலர் காசோலைகள் மற்றும் வரைவு போன்ற பாரம்பரிய முறைகளுக்கு பதிலாக இந்த புத்தாக்கம் சௌகரியம் மிக்க சிறந்ததொரு மாற்றீடாகும். இது நிதி நிறுவனங்களுக்கு அவற்றின் கட்டண செயல்முறைகளை மேம்படுத்த நவீனமானதும் வினைத்திறனானதுமான தீர்வினை வழங்குகின்றது.

நிதி நிறுவனங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • பொறுப்பேற்கும் வங்கி கட்டணங்களை நீக்குவதன் ஊடாக குறைந்த பரிவர்த்தனை கட்டணங்கள்.
  • உள்நாட்டு வங்கிகளுக்கிடையிலான டாலர் பரிவர்த்தனைகளுக்கு உயர்தர பாதுகாப்பு.
  • இலங்கையின் அந்நியசெலாவணி வெளியேற்றத்தைக் குறைத்தல்.
  • மேம்படுத்தப்பட்ட உடனடி நேர வலையத் தீர்வு.
  • சிறிய மதிப்புள்ள வணிக பரிவர்த்தனைகளில் அதிக செயல்திறன்.
  • வங்கிகளுக்கு குறைந்த நிர்வாகச் சுமை.

அமெரிக்க டாலர் ஆன்லைன் கொடுப்பனவுடன் இணைந்துள்ள நிதி நிறுவனங்கள்

சரிபார்ப்பு வெட்டு நேரங்கள்

கீழ்கண்ட காலவரைகளுக்குள் அமெரிக்க டாலர் ஆன்லைன் கொடுப்பனவு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமர்வு 1 (சமர்ப்பிப்பு வெட்டு நேரம் – பி.ப 3.00 இருந்து பி.ப 6.00 வரை)
முன்னோக்கிய மதிப்பு பரிவர்த்தனை செயன்முறை (T+1 மற்றும் T+2)

 

அமர்வு 2 (சமர்ப்பிப்பு வெட்டு நேரம் – பி.ப 9.00 இருந்து பி.ப 1.00 வரை)
அதே நாளுக்கான மதிப்பு பரிவர்த்தனை செயன்முறை (T+0) முன்னோக்கிய மதிப்பு பரிவர்த்தனை செயன்முறை (T+1 மற்றும் T+2)

 

கலாண்டு புள்ளிவிவரங்கள்

வருடம் காலாண்டு பரிவர்த்தனை அளவு (000) பரிவர்த்த்னை மதிப்பு (USD)
2024 Q1 8.5 155 மில்லியன்
Q2 8.7 182 மில்லியன்
Q3 10.8 136 மில்லியன்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander