En  |  සිං  



JustPay மூலம் உங்கள் ஃபின்டெக் தீர்வுகளை மேம்படுத்துங்கள்

ஜஸ்ட்பெ

ஜஸ்ட்பெ உடன் நிதி நிறுவனங்களால் அனைத்து தரப்பினருக்கும் அனுகூலமளிக்கூடிய வினைத்திறனானதும் நேர்த்தியானதுமான கட்டண அனுபவத்தினை பெற்றுக்கொடுக்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு தமது கணக்குகளை மொபைல் செயலிகள் மற்றும் மின் வணிக தளங்களுடன் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் இணைத்துக்கொள்ள முடிவதுடன் இதனால் இலகுவாக கட்டணங்களை செலுத்த முடியும். இதேவேளையில் குறைக்கப்பட்ட பரிவர்த்தனை செலவுகளுடன் வர்த்தகர்களும் அனுகூலமடைகின்றனர். வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகள் மூலம் நேரடியாக பணம் செலுத்தும்போது வங்கி அறவீடுகள் கணிசமான அளவில் குறைவாக இருப்பதை ஜஸ்ட்பெ உறுதி செய்வதனால் இது சாத்தியப்படுகின்றது.

ஜஸ்ட்பெ உடன் இணைந்து நிதி நிறுவனங்களால் அவர்களது வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு எளிமையையும் விளைத்திறனையும் வழங்கும் ஒர் அதிநவீன கட்டணத் தீர்வை பயன்படுத்த ஆதரிக்க முடியும். இதனால் அவர்களால் டிஜிட்டல் வங்கியியல் துறையில் ஈடிணையற்ற முன்னோடிகளாகத் திகழ முடியும்.

JustPay இன் முக்கிய செயல்பாடுகள்

  • பல்துறை ஒருங்கிணைப்பு: ஒருங்கிணைந்த பணம் செலுத்துதல் அனுபவத்திற்காக மொபைல் மற்றும் இணைய செயலிகள் இரண்டிலும் ஜஸ்ட்பெ இனை செயல்படுத்துதல்.
  • கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தல்: வாடிக்கையாளர்கள் தங்கள் நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகளிலிருந்து நேரடியாக பணம் செலுத்துவதைச் செயற்படுத்தி பரிவர்த்தனைகளை எளிதாக்குதல்.
  • வலுவான பாதுகாப்பு: வாடிக்கையாளர் தரவைப் பாதுகாத்து பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு உயர் மட்டப் பாதுகாப்பை பெற்றுக்கொடுத்தல்.
  • சிரமமற்ற பயனர் அனுபவம்: வாடிக்கையாளர் திருப்தி மற்றும் நம்பிக்கையை அதிகரிப்பதற்காக விரைவானதும் திறமையானதுமானப் பணம் செலுத்துதல் செயல்முறையை வழங்குதல்.
  • குறைந்த பரிவர்த்தனைச் செலவு: வணிகர்களுக்கான குறைந்த சலுகை விகிதத்திலிருந்து பயனடைந்து, அதிக வணிகர்களைச் சேர ஊக்குவித்தல்.

உங்கள் ஃபின்டெக் தீர்வுகளுக்கான அனுகூலங்களை ஆராயுங்கள்

  • வாடிக்கையாளர் சௌகரியத்தை அதிகரித்தல்: எளிமை மற்றும் நேரடி பணம் செலுத்துதல் முறையை வழங்கி இடைநிலை செயல்முறைகளுக்கான தேவையைக் குறைத்தல் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல்.
  • கட்டணம் செலுத்தும் விருப்பங்களை விரிவுபடுத்துதல்: பல்வேறு கணக்குகளை இணைக்கவும், செயலிகளை பயனர்களுக்கு பரிச்சயமாக மாற்றியமைத்து, வாடிக்கையாளர்கள் எவ்வாறு பணம் செலுத்துகிறார்கள் என்பதை அடிப்படையக கொண்டு அதிக விருப்பங்களை வழங்குதல்.
  • வணிகர் கூட்டாண்மைகளை அதிகரித்தல்: வணிகர்களுக்கு எளிதான பரிவர்த்தனைகளை வழங்குவதனூடாக உங்கள் தீர்வை, வணிக கூட்டாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுதல்.

மொபைலுக்கான JustPay என்றால் என்ன?

2017 ஆம் ஆண்டு LankaPay இனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜஸ்ட்பெ என்பது, வாடிக்கையாளர்கள் தங்கள் நடைமுறை கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கிலிருந்து வணிகரின் கணக்கிற்கு நேரடியாக நிதியை மாற்றுவதற்கும் அவர்களின் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்தி சில்லறை பணம் செலுத்துதலை மேற்கொள்ளவும் அனுமதிக்கும் ஒரு புரட்சிகரமான கட்டண செலுத்தல் தளமாகும்.

பௌதீக பணப்புழக்க்மற்ற சமூகத்தை நோக்கி இலங்கையை கட்டியெழுப்புவதில் இது ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகின்றது. இந்த தனித்துவமான அமைப்பானது, நுகர்வோர், வணிகர்கள், வங்கிகள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஏராளமான நன்மைகளை வழங்கி கையடக்கத் தொலைப்பேசிகளின் பல்துறைத்தன்மைக்கு வழிவகுக்கின்றது.

01

ஜஸ்ட்பெ உடன் உங்கள் மொபைல் செயலியை ஒருங்கிணைக்க உங்கள் விருப்பமான நிதி நிறுவனத்துடன் இணையுங்கள்.

LankaPay SDK உடன் ஒருங்கிணைத்து சான்றளிப்பைப் பெறுங்கள்.

ஒருங்கிணைப்புக்கான உறுப்பினர் இடைமுக ஆவணத்தில் (MID) உள்ள படிகளைப் பின்பற்றுங்கள்.

மத்திய வங்கியால் வரையறுக்கப்பட்ட அடிப்படை பாதுகாப்புத் தரநிலைகளை மொபைல் செயலி பூர்த்தி செய்கிறது என்பதை உறுதிப்படுத்த, பெறுநர் வங்கியிடமிருந்து இணக்க அனுமதியைப் பெறுங்கள்.

உங்கள் மொபைல் செயலியை ஜஸ்ட்பெ உடன் எவ்வாறு ஒருங்கிணைப்பது?

JustPay - இயக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷன்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துகிறீர்களா எனச் சரிபார்க்கவும்

இணையத்தளத்திற்கான ஜஸ்ட் பெ என்றால் என்ன?

ஜஸ்ட் பெ Web என்பது 2023-ல் தொடங்கப்பட்ட IPG-க்கு மாற்றாக செயல்படுகின்ற JustPay இன் விரிவாக்கம் ஆகும். இது வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து நேரடியாக ப்ரவுஸர் அடிப்படையிலான செயலிகளின் மூலம் பணம் செலுத்த அனுமதிக்கிறது.

அதன் எளிமையான வடிவமைப்பு, சுலபமான அணுகல் மற்றும் சிறந்த பாதுகாப்புடன், ஜஸ்ட் பெ Web இணையவழி பரிவர்த்தனைகளுக்குத் தடையற்ற மற்றும் வசதியான கட்டண விருப்பத்தை வழங்குகிறது. வணிகர்களுக்கு, குறைந்த ஆரம்ப செலவுகளுடனும் குறைந்த வணிகர் தள்ளுபடி விகிதத்தினையும் (MDR) பெற்றுக்கொடுப்பதனால் இணையற்றத் தீர்வாக இருக்கிறது. ஜஸ்ட் பெ Web டெஸ்க்டாப், மடிக்கணினி, டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு சாதனங்களுடன் இணங்கி செயற்படக்கூடியது. இனி ஜஸ்ட் பெ Web உடன் தொந்தரவு இல்லாத கட்டணங்களை அனுபவியுங்கள்.

உங்களது இணையத்தளத்தை JustPay உடன் எவ்வாறு ஒருங்கிணைப்பது

  1. உங்கள் மொபைல் செயலியுடன் ஜஸ்ட் பெ இனை ஒருங்கிணைக்க நீங்கள் விரும்பும் நிதி நிறுவனத்துடன் இணையுங்கள்.
  2. ஒருங்கிணைப்புக்கு, உறுப்பினர் இடைமுக ஆவணத்தில் (MID) உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
  3. கையகப்படுத்தும் வங்கியிடமிருந்து இணக்க அனுமதியைப் பெற்றுக்கொள்ள உங்கள் மொபைல் பயன்பாடு மத்திய வங்கியால் வரையறுக்கப்பட்ட அடிப்படை பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

எவ்வாறு ஒரு ஜஸ்ட் பெ வழங்குனராக மாறுவது ?

  • எம்மை தொடர்பு கொள்ளுங்கள் நாம் உங்களுக்கு ஒருங்கிணைப்பு செயற்பாடுகளில் உதவுவோம்.
  • ஜஸ்ட்பெ இனை ஒரு கட்டண தேர்வாக வழங்க உங்கள் நிதி நிறுவனம் LankaPay நிகழ்நேர நிதி பரிவர்த்தனை (CEFTS) வலையமைப்பின் அங்கத்தவராக இருக்க வேண்டும்.
  • நீங்கள் ஒரு ஜஸ்ட்பெ வழங்குநராக மாறியதும், உங்கள் நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை எந்த ஜஸ்ட்பெ ஒத்தியக்கமுடைய மொபைல் செயலியிலும் இணைத்துப்பணம் செலுத்தலாம்

ஜஸ்ட்பெ பெறுநராக மாறுவது எப்படி?

  • எம்மை தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் உங்களுக்கு ஒருங்கிணைப்பு செயற்பாடுகளில் உதவுவோம்.
  • ஒரு ஜஸ்ட்பெ பெறுநராகுவதற்கு உங்கள் நிதி நிறுவனம் LankaPay நிகழ்நேர நிதி பரிவர்த்தனை (CEFTS) வலையமைப்பின் அங்கத்தவராக இருக்க வேண்டும்.
  • நீங்கள் ஒரு ஜஸ்ட்பெ பெறுநராக மாறியதும், எந்தவொரு மொபைல் செயலி அல்லது மின் வணிக தளத்துடனும் ஒத்தியங்கி ஜஸ்ட் பெ சேவைகளை வழங்கலாம்.

புள்ளிவிவரங்கள்

செப்டம்பர் 30, 2025 இன் நிலவரப்படி காலாண்டு புள்ளிவிபரங்கள்

381,369

புதிய கணக்குகள்

7,106,490

பரிவர்த்தனை அளவு

36.6 பில்லியன்

பரிவர்த்தனை மதிப்பு

220,904

புதிய கணக்கு

7.0 மில்லியன்

பரிவர்த்தனை அளவு

35.7 பில்லியன்

பரிவர்த்தனை மதிப்பு

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

ஃபின்டெக்-க்கு தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.