We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
2013 ஆம் ஆண்டு பொது ஏ.டி.எம். இன் ஆரம்பமானது, லங்காபேயின் சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் ஒரு முக்கிய தருணத்தைக் வழங்குகின்றது. இது பொது அட்டை மற்றும் கொடுப்பனவு மாற்றத்தின் (CCAPS) அடிப்படை அங்கமாகச் செயல்படுகின்றது. ஆரம்பத்திலிருந்து, இந்த வலையமைப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏ.டி.எம். களிலும் 99.95மூ இணைப்பை ஏற்படுத்துகின்றது. இடைவிடாமல் செயல்படும், 24/7 என 365 நாட்களும் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவைகளுக்கான தங்கு தடையின்றி அணுகலை வழங்குகின்றது. இந்த வலுவான உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்களுக்கு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட வசதியை வழங்குவதற்கான வாய்ப்பினை அளிக்கின்றது. இதனால் அவர்கள் எந்த ஏ.டி.எம். இனையும் சிரமமின்றி பயன்படுத்த முடியும், இதனால் தங்கு தடையின்றி பணம் மீளப்பெறவும், கணக்கு விசாரணைகளுக்கும் குறைந்த செலவில் உன்னத சேவையை வழங்குகின்றது.
LankaPay CAS இன் முதன்மை உறுப்பினராகவோ அல்லது இரண்டாம் நிலை உறுப்பினராகவோ திகழ உங்களுக்கு வாய்ப்புள்ளது. தகுதிக்கான நிபந்தனைகளை கீழே பார்க்கவும்.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நிகழ்நேர மொத்தத் தீர்வு (RTGS) அமைப்பில் பங்குபெறும் உரிமம் பெற்ற எந்தவொரு வணிக வங்கியும் அல்லது உரிமம் பெற்ற சிறப்பு வங்கியும் முதன்மை உறுப்பினராக LankaPay - CAS இல் உறுப்பினராகலாம்.
இது> LankaPay - CAS இல் முதன்மை உறுப்பினராக பங்கேற்க CBSL மற்றும் LankaPay இலிருந்து முன் அங்கீகாரத்தைப் பெறுவதற்குட்பட்டு LankaPay - CAS முதன்மை உறுப்பினர் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதை உள்ளடக்குகின்றது.
LankaPay - CAS முதன்மை உறுப்பினர்கள் LankaPay சான்றிதழ் மையத்தால் நடத்தப்படும் சான்றிதழ் செயல்முறைக்கு உட்படுவார்கள்.
இலங்கையில் இயங்கும் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட எதையும், இலங்கை மத்திய வங்கியின் நேரடி மொத்தத் தீர்வுகளில் பங்கேற்காதவற்றை, லங்காபே CAS-இல் இரண்டாம்நிலை உறுப்பினராக சேர தகுதி பெறும்.
இது, CBSL மற்றும் லங்காபேவிலிருந்து முன் அனுமதி பெற்று லங்காபே - CAS இரண்டாம் நிலை உறுப்பினர் உடன்படிக்கையை செயல்படுத்த வேண்டும் என்பதை குறிக்கின்றது.
CAS இரண்டாம் நிலை உறுப்பினர்கள் லங்காபே சான்றிதழ் மையத்தால் நடத்தப்படும் சான்றிதழ் செயல்முறையை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு லங்காபே - CAS இரண்டாம் நிலை உறுப்பினரும், லங்காபே - CAS முதன்மை உறுப்பினருடன் ஒரு உடன்படிக்கையில் சேர்ந்து, CAS அமைப்பில் பங்கேற்பதை வசதியாக்க வேண்டும்.
2024 மார்ச் 31 அன்று முடியும் நிதி ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள்
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை
பரிவர்த்தனை அளவு
பரிவர்த்தனை மதிப்பு
LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்