En  |  සිං



லங்கா ரெமிட்

உலகளாவிய ரீதியில் இலங்கைப் புலம்பெயர்ந்தோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நிதி நிறுவனங்கள் நம்பகமான, பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான பணம் அனுப்பும் தளத்தினை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகின்றது. இதற்கான சிறந்ததொரு தீர்வாக அமையும் லங்கா ரெமிட், புலம்பெயர்ந்தோர் இலங்கையில் வசிக்கும் தங்கள் பயனாளிகளுக்கு விரைவாகவும் மலிவாகவும் பணத்தை அனுப்ப ஒரு தடையற்ற தளத்தை முன்வைக்கின்றது. நவீன உயர்தர தொழில்நுட்பம் மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளால் பலப்படுத்தப்பட்டுள்ள லங்காரெமிட், பயனர்களுக்கு தன்னிகரற்ற வசதியை வழங்கும் அதே வேளையில் ஒழுங்குமுறை தரநிலைகளுடன் இணங்குவதை உறுதி செய்கிறது.

நிதி நிறுவனங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • அதிகரித்த வாடிக்கையாளர் அடித்தளம்: பணப் பரிமாற்றங்கள் மற்றும் பல்வேறு நிதிப் பரிவர்த்தனைகளுக்குத் தடையற்ற மற்றும் பயனர் தோழமையான இடைமுகத்தை வழங்குவதன் மூலம், நிதி நிறுவனங்களால் அதிக வாடிக்கையாளர்களை, குறிப்பாக வளர்ந்து வரும் புலம்பெயர்ந்த இலங்கையர்களை ஈர்க்க முடியும்.
  • உலகளாவிய பரிவர்த்தனைகள் மற்றும் நிகழ்நேர மாற்று விகிதங்கள்: நிதி நிறுவனங்களால் நிகழ்நேர மாற்று விகிதங்களுடனான உலகளாவிய பரிவர்த்தனைகளை நடத்தும் திறனுக்காக தமது இணைய கட்டண நுழைவாயில்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதனூடாக அவர்களுக்கு போட்டி அனுகூலங்களை ஏற்படுத்திக்கொடுத்து நாணய மாற்றங்களில் வெளிப்படைத்தன்மையைத் எதிர்பார்க்கும் பயனர்களை ஈர்க்க முடியும்.
  • சந்தைப்படுத்தல் வாய்ப்புகள்: செயலிக்குள் விளம்பரப் பதாகைகளைச் சேர்க்கும் திறன் நிதி நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை உருவாக்குகின்றது. அவர்கள் தங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சிறப்பு சலுகைகளை லங்காரெமிட் அமைப்பின் பயனர்களுக்கு நேரடியாக விளம்பரப்படுத்தலாம்.
  • சுங்கத்தீர்வையற்றக் கோரிக்கைகளை எளிதாக்குதல்: வெளிநாட்டு ஊழியர்களுக்கு, நிதி நிறுவனங்கள் சுங்கத்தீர்வையற்றக் கோரிக்கைகளை எளிதாக்கலாம். இது புலம்பெயர்ந்தோருக்காக நிதி நிறுவங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் சேவைகளை மேம்படுத்தி, எல்லை கடந்த நிதி அனுபவத்தைச் சுமூகமாக்கும்.

தற்போது லங்கா ரெமிட் உடன் கைக்கோர்த்துள்ள நிதி நிறுவனங்கள்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net







Event Calander