En  |  සිං



திரு. C. P. S. பண்டார

இயக்குநர்

திரு. பண்டார அவர்கள் இலங்கை மத்திய வங்கியில் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மை, பொருளாதாரம் மற்றும் விலை ஸ்திரத்தன்மை, கூட்டாண்மை சேவைகள், முகவர் செயல்பாடுகள், வணிக தொடர்ச்சி திட்டமிடல், நிறுவன அளவிலான இடர் மற்றும் மேலாண்மை மற்றும் மூலோபாய திட்டமிடல் ஆகிய துறைகளில் 26 ஆண்டுகளுக்கும் மேலான துறைசார் அனுபவம் வாய்ந்த நிபுணராவார்.

தற்போது இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநராகப் பணியாற்றும் திரு. பண்டார அவர்கள் பல்வேறு உள்ளக மற்றும் வெளியக குழுமங்கள் மற்றும் வாரிய செயற்பாடுகளில் தீவிர ஈடுபட்டுடன் செயற்படுவதுடன், தீர்மானங்களை நிறைவேற்றும் செயல்முறைகளில் பங்களிப்பதுடன்; மத்திய வங்கியின் முதலீடுகள், இடர் மேலாண்மை, மூலோபாய திட்டமிடல், தகவல் தொழில்நுட்பம், பணம் செலுத்துதல், கட்டணத்தீர்வுகள் மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகிய முக்கியமான பகுதிகளை மேற்பார்வையிடுகிறார்.

நாட்டின் நிதி அமைப்புகள் தொடர்பாடல் வலையமைப்பை நிறுவுதல், அரசாங்கப் பத்திரங்களுக்கான இலத்திரனியல் ஏல முறைமைகளை நடைமுறைப்படுத்துதல், ஒழுங்குமுறை அறிக்கையிடல் மற்றும் கண்காணிப்பு முறைமைகள், தேசிய கொடுப்பனவுகள் மற்றும் பத்திரங்களுக்கான தீர்வு முறைகளை நடைமுறைப்படுத்துதல் உட்பட பல முக்கிய முயற்சிகளை வெற்றிகரமாக செயலாற்றிக்காட்டுதல் ஆகிய முக்கிய கடமைகளை திரு. பண்டார அவர்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார். மேலும் நாட்டின் நிதிச் சந்தை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை அறிவியல் பட்டம், கணினி அறிவியல் தொழிநுட்பத்தில் இளங்கலை பட்டம் மற்றும் மத்திய வங்கியியல் டிப்ளோமா உள்ளிட்ட வலுவான கல்விப் பின்னணியுடன், திரு. பண்டார அவர்கள் நாட்டின் நிதித் துறையின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதில் அசைக்கமுடியாதவொரு பெருமரமாக வேறூன்றியுள்ளார். மேலும் பண்டார அவர்கள் பல்வேறு தொழில்முறை அமைப்புகளின் புத்தாக்க பிரயத்தனங்களில் தீவிரமாக பங்கேற்றுள்ளார்.

திரு. பண்டார தனது தொழில்சார் பொறுப்புகளுக்கு மேலதிகமாக, சமூகத்தின் நலனுக்காக பங்களிப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன் தேசிய மட்டத்திலான கல்வி மற்றும் தொலிநுட்பம் சார் மேம்பாடு ஆகியவற்றை இலக்காகக் கொண்ட குழுக்கள் மற்றும் அமைப்புகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.





மற்ற இயக்குநர்கள் குழு







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander