We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
திரு. வை. ஏ .ஜயதிலக்க, 2025 ஆகஸ்ட் 6 ஆம் திகதி இலங்கை வங்கியின் பதில் பொது முகாமையாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரியாக பொறுப்பேற்றார். அவர் 2020 பெப்ரவரி மாதத்தில் வங்கியின் பெருநிறுவன முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்டு, அதன் பின்னர் பிரதிப்பொது முகாமையாளர்(ஆதரவு சேவைகள்), பிரதிப்பொது முகாமையாளர் [மீட்பு – மாகாணங்கள்), பிரதிப்பொது முகாமையாளர் (அபிவிருத்தி வங்கியியல் மற்றும் கிளைக் கடன் செயல்பாடுகள்), மற்றும் பிரதிப்பொது முகாமையாளர் (தயாரிப்புகள் மற்றும் வங்கி அபிவிருத்தி) உள்ளிட்ட பல முக்கியத் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
நிறுவன முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு, திரு. ஜயதிலக்க 2015 ஏப்ரல் மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் நிறைவேற்று முகாமைத்துவக் குழுவில் குழுவில் ( பணியாற்றினார். அக்காலத்தில் அவர் உற்பத்தி அபிவிருத்தி மற்றும் வர்த்தக செயல்முறை மறுவமைப்பு உதவி பொது முகாமையாளர், மத்திய மாகாண உதவி பொது முகாமையாளர் மாகாண விற்பனை முகாமைத்துவ உதவி பொது முகாமையாளர் போன்ற பொறுப்புகளை வகித்தார்.
திரு. ஜயதிலக்க 28 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வங்கித் துறையில் பணியாற்றிய அனுபவத்துடன், பல்வேறு வங்கி செயல்பாடுகளில் விரிவான அறிவும் அனுபவமும் பெற்றுள்ளார். கிளை கடன், அபிவிருத்தி வங்கியியல் மற்றும் மீட்பு போன்ற முக்கிய வங்கி செயல்பாடுகள்; வெளிநாட்டு பணப்பரிமாற்று வர்த்தகம், பணச் சந்தைகள், மூலதன சந்தைகள் மற்றும் முதலீட்டுமுகாமைத்துவம் போன்ற திறைசேரி செயல்பாடுகள்; மேலும் Bank of Ceylon (UK) Limited நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தின் மூலம் வெளிநாட்டு வங்கி நடவடிக்கைகள் எனப் பல துறைகளில் அவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.அதேபோல், முக்கிய வங்கி முறைமைகள்,வர்த்தக நிதித் தளங்கள், பணிப்பாய்வு தானியங்குபடுத்தல் மற்றும் மொபைல் வங்கிச்செயலிகள் போன்ற பல பெரிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார். மேலும், புதிய தயாரிப்பு அபிவிருத்தி, டிஜிட்டல் உருமாற்றம் மற்றும் புத்தாக்கங்கள் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
திரு. ஜயதிலக்க, இலங்கையின் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து வர்த்தக நிர்வாகத்தில் விஞ்ஞானஇளமானிப் பட்டம் (சிறப்பு) மற்றும் களனி பல்கலைக்கழகத்தில் இருந்து வர்த்தகத்தில் முதுநிலைப் பட்டம் (நிதி) ஆகியவற்றைப் பெற்றுள்ளார். மேலும் அவர் வங்கி மற்றும் நிதியில் டிப்ளோமாவையும் பெற்றுள்ளதுடன் மற்றும் இலங்கை வங்கியாளர்கள் நிறுவத்தின் இணை உறுப்பினராகவும் உள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின் பட்டதாரி நிறுவனத்தில் மூலோபாய முகாமைத்துவத்தில் உயர் நிலைக் கற்கை நெறியையும் , பிரான்ஸ் நாட்டின் INSEAD பல்கலைக்கழகத்தில் Advanced Management Program (AMP) எனும் மேம்பட்டமுகாமைத்துவ பயிற்சியையும் பூர்த்தி செய்துள்ளார்.
இலங்கை வங்கியில் , அவரது நிறைவேற்றதிகாரி பதவிக்கு மேலதிகமாக திரு. ஜயதிலக்க Property Development PLC, இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம், இலங்கை கடன் தகவல் பணியகம், BoC Property Development & Management (Pvt) Limited, BoC Travels (Pvt) Limited, Hotels Colombo (1963) Limited, Ceybank Holiday Homes (Pvt) Limited மற்றும் BoC IT Solutions (Pvt) Limited போன்ற நிறுவனங்களின் சபைப் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.