En  |  සිං



திரு. H. M. P. B. ஹேரத்

இயக்குநர்

திரு. ஹேரத் அவர்கள் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த திறமை மிகு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் தற்போது இலங்கை மத்திய வங்கியின் தகவல் தொழில்நுட்பத் துறையின் பணிப்பாளராக பதவி வகிக்கின்றார்.

திரு. ஹேரத் அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மேலாண்மை நிறுவனத்தில் (PIM) வணிக முதுகலை வணிக மேலாண்மை பட்டம் மற்றும் விஞ்ஞானமாணிப் பட்டங்களுடனான வலுவான கல்வித்தகைமை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல், பொறியியலில் ஆகியத்துறைகளில் பட்டங்கள் ஆகிவற்றுடன் வலுவான தொழில்நுட்ப பின்னனியையும் கொண்டுள்ளார். மேலும் இவர் இலங்கை Institute of Engineers Sri Lanka (IESL)நிறுவனத்தின் தவிர்க்கமுடியாத ஒரு உறுப்பினருமாவார்.

தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் திட்டமிடலில் பரந்துபட்ட அனுபவத்துடன், பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக திட்டமிட்டு, புத்தாக்கம் மற்றும் செயல்திறனுடன் அவற்றினை வழிநடத்தினார். தகவல் தொழில்நுட்பம், பணப் பரிவர்த்தனை சார் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல்வேறு உள்ளக மற்றும் வெளிப்புற மன்றங்கள்/கமிட்டிகளில் போன்றவற்றில் பலதரப்பட்டப் பதவிகளை வகித்துள்ளார். Real Time Gross Management System (RTGS), Securities Settlement System, Reserve Management System, Capital Market Development, SWIFT போன்றவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்ட மேலாளராகவும் அமுலாக்க பிரதிநிதியாகவும் அவர் தன்னிகரற்ற பாத்திரங்களை வகித்துள்ளார்.

திரு. ஹேரத் அவர்கள் தற்போது FINCSIRT இன் (Sri Lanka Financial Sector Computer Security Incident Response Team) வழிநடத்தும் குழுத் தலைவராக உள்ளார், இது இலங்கை நிதித் துறையின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பை உறுதிசெய்ய அயறாது உழைத்துவரும் ஒரு நிறுவனமாகும்.





மற்ற இயக்குநர்கள் குழு







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander