En  |  සිං



திரு. W. P. R. H. ஃபொன்சேக்கா

இயக்குநர்

திரு. பொன்சேகா அவர்கள் 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை வங்கியில் இணைந்தது தொட்டு 33 வருடங்களுக்கும் மேலாக வங்கியோடு இயைந்து பணியாற்றியதனூடாக, வங்கியியலில் துறையில் தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய அனுபவத்தினை பெற்றுள்ளார். திரு. பொன்சேகா அவர்கள் 2012 ஆம் ஆண்டு முதல் வங்கியின் கூட்டாண்மை முகாமைத்துவத்தில் உறுப்பினராக சேவையாற்றியுள்ளார், மேலும் அவர் ஜனவரி 2023 இல் பொது முகாமையாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி எனும் பதிவி உயர்வினை பெற்றுக்கொண்டார்.

கூட்டாண்மை முகாமைத்துவத்தில் மூத்த உறுப்பினராக திகழும் திரு. பொன்சேகா அவர்கள், வங்கியில் பல மாறுபட்ட பாத்திரங்களில் தனது நிபுணத்துவத்தை வெளிக்காட்டியதன் மூலம் தவிர்க்க முடியாதவொரு முக்கியமான பங்கை செலுத்தி வருகின்றார். இவர் தலைமை நிதி அதிகாரி, மூத்த துணை பொது முகாமையாளர் (Corporate & Offshore Banking), துணை பொது முகாமையாளர் (சர்வதேச, கருவூலம் மற்றும் முதலீடு), துணை பொது முகாமையாளர் (சில்லறை வங்கி) மற்றும் துணை பொது முகாமையாளர் (நிதி மற்றும் திட்டமிடல்) ஆகிய பதவிகளில் வங்கியில் சிறப்புர விளங்கி வருகின்றார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டமும் University of Southern Queensland பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் (MBA) பெற்றதுடன் Postgraduate Institute of Management (PIM) Sri Lanka பல்கலை கழகத்தில் முகாமைத்துவத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.

திரு. பொன்சேகா அவர்கள் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் மூத்த சக உறுப்பினரும், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் சக உறுப்பினரும் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் வணிகப் பள்ளியின் பழைய மாணவருமாவார். இவர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம், லங்காபே (பிரைவேட்) லிமிடெட், இலங்கை கடன் தகவல் பணியகம் மற்றும் இலங்கை வங்கியின் பல துணை நிறுவனங்களில் பணிப்பாளராக பணியாற்றுகிறார். மேலும் LankaPay (Private) Limited நிறுவனத்தின் பட்டய சங்கத்தின் Property Development PLC பிரிவின் தலைவராக தனது பொறுப்புக்களை தோள் மேல் சுமந்து வருகின்றார்.





மற்ற இயக்குநர்கள் குழு







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

2

Event Calander