We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
திரு. தமித் பல்லேவத்த அவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட சிறப்புமிக்க வங்கி மற்றும் இடர் முகாமைத்துவ நிபுணர் ஆவார். அவர் தற்போது இலங்கையின் முன்னணி மற்றும் மதிப்பிற்குரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான அட்டன் நெஷனல் வங்கி (HNB) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.
தற்போதைய பதவிக்கு முன்பு, அவர் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி, மொத்த வங்கி குழுமத்தின் பிரதிப் பொது முகாமையாளர, பிரதம இடர் அதிகாரி (CRO), மற்றும் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி (CISO) உள்ளிட்ட பல முக்கிய தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார். HNB-இல் இணைவதற்கு முன்பாக, அவர் நேஷன் ட்ரஸ்ட் வங்கி நிறுவனத்தின் பிரதம இடர் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
திரு. பல்லேவத்த அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்பட்டப்பின் முகாமைத்துவ கல்வியகத்தில் MBA பட்டம் பெற்றுள்ளார். மேலும், London School of Economics, University of London இல் முகாமைத்துவத்தில் BSc (Hons) பட்டமும் பெற்றுள்ளார்.2013 ஆம் ஆண்டிலிருந்து Global Association of Risk Professionals அமைப்பினால் வழங்கப்படும் நிதியியல் இடர் முகாமையாளர் (FRM) அங்கீகாரத்தைப் பெற்ற இடர் முகாமைத்துவ நிபுணராகவும், அதே நிறுவனத்திலிருந்து நிலைத்தன்மை மற்றும் காலநிலை இடர் முகாமையாளர் சான்றிதழை பெற்றவராகவும் உள்ளார்.HNB நிறுவனத்தில் தனது நிர்வாகப் பொறுப்புகளுக்கு அப்பால், HNB முதலீட்டு வங்கி நிறுவனத்தின் தலைவராகவும், Lanka Ventures PLC மற்றும் LVL Energy Fund PLC ஆகிய CSE-இல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.மேலும், Lanka Pay Pvt Ltd மற்றும் Lanka Financial Services Bureau Ltd நிறுவனங்களின் பணிப்பாளராகவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் (ICCSL) அமைப்பின் துணைத் தலைவராகவும் மற்றும் பணிப்பாளராகவும் செயல்படுகிறார்.
AICPA மற்றும் CIMA அமைப்புகளின் MESANA (Middle East, South Asia and North Africa) பிராந்திய ஆலோசனை மற்றும் ஈடுபாட்டு குழுக்களில் நியமிக்கப்பட்டதன் மூலம், தொழில்துறை பரந்த சூழலை வடிவமைப்பதில் அவர் செயற்பாட்டுமிக்க பங்காற்றியுள்ளார். மேலும், இலங்கைக்கான CIMA Country Network Committee-யின் துணைத் தலைவராகவும், இலங்கை, இந்தியா மற்றும்பங்களாதேஷ் ஆகியவற்றை உள்ளடக்கும் CIMA & AICPA தென் ஆசிய பிராந்தியக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் CRO Forum Sri Lanka அமைப்பின் (இலங்கையில் வங்கி CROகளின் ஒன்றியம்) முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.
திரு. பல்லேவத்தேஅவர்கள் மதிப்பிற்குரிய சிந்தனை முன்னோடி மற்றும் கல்வியாளராகவும் அறியப்படுகிறார். இலங்கை வங்கிகள் நிறுவனம், இலங்கை மத்திய வங்கியின் வங்கிகள் கற்கைகளுக்கான நிலையம், இலங்கை பணிப்பாளர்கள் நிறுவனம் மற்றும் Chartered Institute for Securities & Investments (UK) ஆகிய நிறுவனங்களுக்கு வளநபராக பங்களித்துள்ளார்.
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.