En  |  සිං  



ரு. இந்திரஜித் போயகொட

நோக்குநர்

திரு. இந்திரஜித் போயகொட, வங்கி துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட முதிர்ந்த வங்கியாளர் ஆவார். இவர் தற்போது இலங்கை வங்கியாளர்கள் சங்கத்தின் (SLBA) செயலாளர் நாயகமாக பணியாற்றுகிறார்; இந்தப் பொறுப்பின் அடிப்படையில் Lanka Clear நிறுவனத்தின் குழுவில் நோக்குநராக இணைகிறார்.தனது வங்கி வாழ்க்கை முழுவதும், அவர் வங்கி செயல்பாடுகள், பெருநிறுவன மற்றும் நிதி நிறுவன கடன், உறவு முகாமைத்துவம் , திறைசேரி முகாமைத்துவம், மூலதன சந்தைகள், முதலீட்டு வங்கி, போன்ற பிரிவு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் மேலும் இலங்கையும் வெளிநாடுகளும் இணைந்த கணக்காய்வு மற்றும் இடர் மதிப்பாய்வு போன்ற துறைகளில் பணியாற்றியுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் , அவர் 1993 ஆம் ஆண்டு Citibank N.A. கொழும்பு கிளையில் முகாமைத்துவ பயிற்சியாளராக இணைந்தார். 2003 ஆம் ஆண்டில் Citibank N.A. கொழும்பின் வதிவிட பொருளாளர் / உப தலைவர் பதவிக்கு உயர்ந்தார். 2006 ஆம் ஆண்டு அவர் இலங்கையை விட்டு Samba Financial Group (முன்னாள் சவூதி அமெரிக்கன் வங்கி) நிறுவனத்தில் இணைந்து 2012 வரை பணியாற்றினார்; அப்போது அவர் கணக்காய்வு மற்றும் இடர் மதிப்பீட்டுப்பிரிவின் திறைசேரி மற்றும் மூலதனச்சந்தைகள்- நிகழ்ச்சிப்பணிப்பாளராக இருந்தார்.2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு திரும்பிய அவர் கொழும்பு,நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கிப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளராக பொறுப்பேற்று 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின், திரு. இந்திரஜித் ஆலோசனைப் பணிகளில் ஈடுபட்டு, கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப்பிரிவு விரிவுரையாளராக நிதி பொருளாதாரம் கற்பித்ததுடன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பீட குழு உறுப்பினராகவும், மேலும் இலங்கை நிதி நிறுவனத்தின் சுயாதீனப் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

திரு. போயகொட, பேராதனை பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் சிறப்புடன் (B.Sc. Chemistry Special) கௌரவப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி பொருளாதாரத்தில் பட்டபின் படிப்பு டிப்ளோமாவும் பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றுள்ளார்.அவர் 2024 அக்டோபர் 1 ஆம் திகதி SLBA-வின் செயலாளர் நாயகம் (நியமனம்) என்ற தனது தற்போதைய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.





மற்ற இயக்குநர்கள் குழு







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.