En  |  සිං



திரு. மார்க் சர்ஜனர்

இயக்குநர்

திரு. சர்ஜனர் அவர்கள் தற்போது HSBC ஸ்ரீலங்காவின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடமை வகித்து வருகின்றார். HSBC ஆனது நாட்டில் 130 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாக திகழ்ந்து வரும் மிகப்பெரிய சர்வதேச வங்கியாகும். மேலும் திரு. சர்ஜனர் அவர்கள் HSBC மாலைத்தீவு தனது 20 வருட வேரூன்றலை கொண்டாடிய போது அதன் தலைமை நிர்வாகியாகவும் இருந்திருந்தார்.

தற்போதைய பதவிக்கு முன்பு, திரு. சர்ஜனர் அவர்கள் ஹாங்காங்கில் HSBC குழுமத்தின் வள முகாமைத்துவத் தலைவராக இருந்தார். உலகெங்கிலும் உள்ள 60 இற்கும் மேற்பட்ட HSBC சந்தைகளில் உள்ள HSBC சில்லறை வாடிக்கையாளர்களின் வள முகாமைத்துவத் தேவைகளுக்கு சேவை செய்தார்.

திரு. சர்ஜெனர் அவர்கள் 2009 இல் HSBC இல் சேர்ந்தது தொட்டு, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா முழுவதிலும் HSBC இன் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

HSBCஇல் இணைவதற்கு முன்னர், திரு. சர்ஜனர் அவர்கள் Lloyds Banking குழுமத்தில் பணியாற்றினார், அந்நிறுவனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய இராச்சியம் மற்றும் மத்திய - கிழக்கு ஆசியாவில் சர்வதேச சில்லறை வணிகம் மற்றும் பெருநிறுவன வங்கியில் பல உயர் பதவிகளை வகித்தார். அவர் வணிகம் மற்றும் நிதித்துறையில் இளங்கலை பட்டம், சர்வதேச சந்தைப்படுத்தலில் முதுகலைப் பட்டம் மற்றும் சி.ஐ.எம் டிப்ளமோ ஆகியவற்றைப் பெற்ற கல்விமானுமாவார்.





மற்ற இயக்குநர்கள் குழு







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander