En  |  සිං



திரு. க்ளைவ் ஃபொன்சேக்கா

இயக்குநர்

திரு. ஃபொன்சேக்கா அவர்கள் இலங்கையின் வங்கியாளர்கள் நிறுவகத்தின் முக்கிய உறுப்பினராவதுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றப் பட்டதாரியாவார். கருவூல நிர்வாகத்தில் 29 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைத் தாங்கி நிற்பதற்காக தனித்துவமிக்க சன்மானமான ACI டீலிங் கௌரவிப்பைப் பெற்றுள்ளதுடன், ஃபொன்சேக்கா அவர்கள் ஆஸ்திரேலியாவின் Institute of Certified Management Accountants of Australia நிறுவனத்தின் சான்றளிக்கப்பட்ட உறுப்பினராகவும் (CMA) உள்ளார்.

இவர் 2018 முதல் 2020 வரையிலான காலப்பகுதியில் Association of Primary Dealers இன் தலைவராகவும், தேசிய கொடுப்பனவு கவுன்சிலின் அங்கத்தவராகவும் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், இலங்கை மத்திய வங்கியின் புதிய மாற்று அளவுகோல் வட்டி விகிதங்களை ஆய்வு செய்து வடிவமைக்கும் பணிக்குழுலும் செயலாற்றியுள்ளதுடன், உள்நாட்டு நிதிச் சந்தை உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டம் தொடர்பான சந்தை செயற்குழு உறுப்பினராகும் இருந்தார். தற்போது People’s Leasing & Finance PLC, People’s Leasing Property Development Limited நிறுவனத்திலும் Lankan Alliance Finance Limited மற்றும் LankaPay (Pvt) Limited நிறுவனங்களிலும் நிர்வாகமற்ற சுயாதீன இயக்குனராகவும் செயல்படுகிறார். மேலும், கடந்தகாலங்களில் இலங்கையின் வங்கியாளர்கள் நிறுவகத்தின் IABF/DABF பரீட்சைகளுக்கான பிரதான பரீட்சையாளராகவும் செயற்பட்டுள்ளார்.

2002 ஆம் ஆண்டு மக்கள் வங்கியில் இணைந்த திரு. ஃபொன்சேகா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மக்கள் வங்கியின் மூத்த நிறுவன முகாமைத்துவக் குழுவில் பிரதிப் பொது முகாமையாளராகவும்; வெளிநாட்டுச் செலாவணி நடவடிக்கைகள், முதன்மை வியாபாரி பிரிவு, முதலீட்டு வங்கிப் பிரிவு மற்றும் USD மற்றும் LKR பணச் சந்தை செயற்பாடுகள் ஆகியவற்றின் முக்கியமான உறுப்பினராகவும் இருந்துள்ளார். மேலும், தேசிய மற்றும் வெளிநாட்டு வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உறவுகளை நிர்வகிப்பதற்கு பொறுப்பேற்ற அவர் செவ்வனே சிறப்புற செயலாற்றியிருந்தார். மக்கள் வங்கியில் சேர்வதற்கு முன்பு அவர் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியிகளிலும் பணியாற்றியுள்ளார். திரு. ஃபொன்சேகா அவர்கள் ஆகஸ்ட் 1, 2023 முதல் மக்கள் வங்கியின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி/பொது மேலாளராக நியமிக்கப்பட்டதும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.





மற்ற இயக்குநர்கள் குழு







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander