We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
திரு. குணவர்தன சில்லறை வங்கி, வர்த்தக நிதி, தகவல் தொழில்நுட்பம், மூலோபாயத் திட்டமிடல் மற்றும் நிறுவன அபிவிருத்தி உள்ளிட்ட நிதிச் சேவைத் துறையின் முக்கிய துறைகளில் 36 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட சிறந்த வங்கி நிபுணர் ஆவார். பல்வேறு துறைகளில் அவரது பன்முக நிபுணத்துவம் மற்றும் தொலைநோக்கு தலைமைத்துவத்தின் காரணமாக, அவர் இலங்கையின் வங்கித் துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய தலைவராக நிலைநிறுத்தப்பட்டுள்ளார்.
அவர் வங்கித்துறையின் எதிர்காலம் என்பது மேம்பட்ட தொழில்நுட்பம், நம்பகமான உறவுகள் மற்றும் மிகச்சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றின் சங்கமம் என்று நம்பி, ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவ அணுகுமுறையை தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளார்."அவரது தலைமையின் கீழ், சம்பத் வங்கி தனது இரண்டாவது முக்கிய தொழில்நுட்ப மாற்றத்தை அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு [AI] இயங்கும் இயந்திரக் கற்றல் மாதிரிகளை முக்கிய வங்கி செயல்பாடுகளில் வெற்றிகரமாக ஒருங்கிணைப்பதன் மூலம் திறன், இடர் முகாமைத்துவம் மற்றும் தரவுவழி முடிவெடுத்தல் ஆகிய துறைகளில் வங்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
தொழில்நுட்பத்தை ஒரு ஆதரவு செயல்பாடாக மட்டும் அல்லாமல், நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கும் மூலோபாய இயக்கியாகவும் மாற்றத்திற்கான ஊக்கியாகவும் அவர் மனதில் நிலைநிறுத்துகிறார். வாடிக்கையாளர் பெறுமதியை உயர்த்தவும் செயல்திறன் சிறப்பை மேம்படுத்தவும் புதிய வாய்ப்புகளைத் ஏற்படுத்தக்கூடிய சக்தி தொழில்நுட்பத்திலுள்ளது என்ற அவரது நம்பிக்கை, சம்பத் வங்கியை நெகிழ்வான, எதிர்காலத்துக்கு தயாரான நிதி நிறுவனமாக பதியச்செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ளது.
திரு. குணவர்தனவின் தலைமைத்துவ தத்துவம், உலகின் முன்னணி கல்வி மற்றும்முகாமைத்துவ நிறுவனங்களில் பெற்ற மேம்பட்ட நிர்வாகப் பயிற்சி மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டின் அனுபவத்தினாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. Harvard Business School, INSEAD, சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனம் (IFC), மற்றும் McKinsey Center for CEO Excellence போன்ற உயரிய நிறுவனங்களில் பெற்ற பயிற்சி அவரது மூலோபாய சிந்தனையை வளப்படுத்தி, சிக்கல்களையும் மாற்றத்தையும் திறம்பட வழிநடத்தும் திறனை மேம்படுத்தியுள்ளது.
சம்பத் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளர் /பிரதம செயற்பாட்டு அதிகாரியாக பணியாற்றும் தனது முகாமைத்துவப்பொறுப்புடன், அவர் தற்போது இலங்கை வங்கியாளர்கள் சங்கம்,இலங்கை நிதியியல் சேவைகள் பணியக நிறுவனம் மற்றும் Lanka Pay (Pvt) Limited ஆகியவற்றின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.
தொலைநோக்கு எண்ணம் கொண்ட தலைவராகிய திரு. குணவர்தன, புதுமை, பொறுப்புணர்வு மற்றும் மாற்றத்தை மையமாகக் கொண்ட பண்பாட்டை முன்னெடுத்து வருகிறார். அவரது தலைமையின் கீழ் சம்பத் வங்கி இலத்திரனியல் வங்கி சேவைகளில் தனது முன்னணி நிலையை தக்க வைத்து, அனைத்து பங்குதாரர்களுக்கும் நீண்டகால பெறுமதியை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.