En  |  සිං  



திரு. கிளைவ் ஃபொன்சேகா

பணிப்பாளர்

திரு. ஃபொன்சேகா, இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் (IBSL) சக உறுப்பினராக திகழ்வதுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டபின் பட்டதாரி நிறுவனத்தில் (PIM) வர்த்தக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ACI Dealing சான்றிதழுக்கானவிசேட தகுதியும் பெற்றுள்ளார் மற்றும் 29 ஆண்டுகளுக்கு மேற்பட்டதிறைசேரி முகாமைத்துவ அனுபவத்தையும் பெற்றுள்ளார். மேலும் அவர் அவுஸ்திரேலியாவிலுள்ள Institute of Certified Management Accountants அமைப்பின் சான்றளிக்கப்பட்ட உறுப்பினராக (CMA) உள்ளார்.

அவர் 2018 முதல் 2020 வரை Association of Primary Dealers அமைப்பின் தலைவராக பணியாற்றியதுடன், National Payment Council, Financial System Stability Consultative Committee, புதிய மாற்று அடிப்படை வட்டி விகிதங்களை ஆய்வு செய்து வடிவமைக்கும் பணிக்குழு, மற்றும் இலங்கை மத்திய வங்கியின் உள்ளூர் நிதி சந்தை உள்ளகக் கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்திற்கான Market Working Group ஆகியவற்றின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். தற்போது, அவர் People’s Leasing & Finance PLC, People’s Leasing Property Development Limited, Lankan Alliance Finance Limited மற்றும் LankaPay (Pvt) Limited ஆகியவற்றில் சுயாதீனமற்ற நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராக பணியாற்றுகிறார். மேலும், முன்பாக அவர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் IABF/DABF பரீட்சைகளுக்கான பிரதம தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.

திரு. ஃபொன்சேகா 2002 ஆம் ஆண்டு மக்கள் வங்கியில் இணைந்து 2011 நவம்பர் மாதம் முதல் சிரேஷ்ட பெருநிறுவன முகாமைத்துவக்குழுவில் உறுப்பினராக பிரதிப்பொது முகாமையாளராக பணியாற்றி வருகிறார். இந்தப் பொறுப்பில் அவர் வெளிநாட்டு பணப்பரிமாற்ற செயல்பாடுகள், முதன்மை விற்பனைப்பிரிவு , முதலீட்டு வங்கிப் பிரிவு மற்றும் அமெரிக்க டொலர் (USD) மற்றும் இலங்கை ரூபாய் (LKR) பணச் சந்தை செயல்பாடுகளை மேற்பார்வை செய்கிறார். அதோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடனான உறவுகளின் முகாமைத்துவத்திற்கும் அவர் பொறுப்பாக உள்ளார். மக்கள் வங்கியில் இணைவதற்கு முன்பாக அவர் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி [American Express Bank] மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட வங்கி ஆகிய வங்கிகளில் பணியாற்றியுள்ளார்.

2023 ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல், அவர் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.





மற்ற இயக்குநர்கள் குழு







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.