En  |  සිං



சன்ன டி சில்வா

தலைமை நிர்வாக அதிகாரி

நன்கு அறியப்பட்ட ICT துறையில் மூத்தவரான சன்ன டி சில்வா> லங்காபே (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2015 டிசம்பரில் பதவியேற்றார். அண்மைக் காலத்தில் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதுமையான கட்டணத் தீர்வுகளை முன்னெடுப்பதில் திரு. சன்ன டி சில்வா முக்கிய பங்காற்றினார். டிஜிட்டல் பணம் செலுத்துவதில் நிறுவனம் அடைந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. அவர் மத்திய வங்கியின் தேசிய கொடுப்பனவு கவுன்சிலின் உறுப்பினராகவும் உள்ளார். அவர் சமீபத்தில் எண்டர்பிரைஸ் வேர்ல்ட் இதழால் "2024 இல் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக" அங்கீகரிக்கப்பட்டார். திரு. டி சில்வா பல முன்னணி பன்னாட்டு மற்றும் உள்ளுர் நிறுவனங்களில் பல்வேறு வகையான தொழில்களை உள்ளடக்கிய 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

அவர் தற்போது இலங்கை கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவில் (இலங்கை CERT)> கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் மத்திய வைப்புத்தொகை அமைப்பிலும்> இலங்கை தகவல் தொழில்நுட்பத் தொழில் கூட்டமைப்பு (FITIS) துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

1994 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது வர்த்தக இணையத்தளமான http://www.lanka.net/ ஐ அபிவிருத்தி செய்ததன் மூலம் இலங்கையின் முதல் வெப் மாஸ்டராகவும்> 1995 ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலாக அர்ப்பணிக்கப்பட்ட இணைய இணைப்பை ஏற்படுத்திய பொறியியலாளர் எனவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். அவரது தலைமையின் கீழ் செயல்படுத்தப்பட்ட சில முக்கிய திட்டங்களில் தெற்காசிய பிராந்தியத்தில் முதல் ஒன்லைன் செய்தித்தாள் அடங்கும் (1995 இல் டெய்லி நியூஸ்); முதல் ஒன்லைன் வானொலி நிலையம் (1996 இல் TNL ரேடியோ) மற்றும் நாட்டின் முதல் Wi-Fi நெட்வொர்க் அவர் இலங்கையின் உள்ளூர் மொழிப் பணிக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். மேலும் உள்ளூர் மொழிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு மக்களுக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். 2007 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஒபிஸ{க்கு சிங்களம் மற்றும் தமிழில் மொழி இடைமுகப் பொதி உருவாக்கப்படுவதை உறுதி செய்வதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

LankaPay இல் இணைவதற்கு முன்னர் அவர் சிங்கப்பூர் அடிப்படையிலான ICT நிறுவனமான Thakral One இன் இலங்கை மற்றும் மாலைத்தீவு நடவடிக்கைகளுக்கு மூத்த துணைத் தலைவராக இருந்தார். அவர் IBM இன் மென்பொருள் பிரபஞ்சத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் வழிநடத்துனராகவும் திகழ்ந்துள்ளார். மற்றும் IBM இலங்கையின் DGM - மென்பொருள் குழுமமாக இருந்த காலத்தில் IBM இன் மென்பொருள் வணிகத்தை மேம்படுத்தினார். திரு. சன்ன டி சில்வா மைக்ரோசாஃப்ட் இலங்கையில் நிறுவன மற்றும் பொதுத்துறை வணிகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அங்கு அவர் சிறப்பான செயல்திறனுக்காக மைக்ரோசாஃப்ட் கோல்ட் கிளப் எக்ஸலன்ஸ் விருது மற்றும் போட்டிக்கு எதிராக வென்றதற்காக மைக்ரோசாஃப்ட் ஷேர் ஃபைட்டர் சம்பியனுடன் சிறந்த சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் முன்னாள் மாணவனான திரு. சன்ன டி சில்வா BSc. (Honours) மற்றும் MSc. பட்டம் பெற்றவராவார். அமெரிக்காவின் நியூயார்க் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் இருந்து எலக்ட்ரிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்கில் டேட்டா கம்யூனிகேஷனில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் இலங்கையின் முதுகலைப் பட்டதாரி மேலாண்மை நிறுவனத்தில் (PIM) MBA பட்டத்தையும் பெற்றுள்ளார் மற்றும் கல்விசார் சிறந்து விளங்குவதற்காக IEEE (USA), Tau Beta Pai (USA), Eta Kappa Nu (USA) மற்றும் Golden Key (USA) ஆகியவற்றில் சிறந்த அங்கத்துவத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




மற்ற தலைவர்கள்

தினுக பெரேரா

பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி

திரு. தினுக பெரேரா வங்கியியல், தேசிய கட்டண உள்கட்டமைப்பு> திட்ட மேலாண்மை> வணிக செயல்முறை மறுசீரமைப்பு> மாற்ற மேலாண்மை மற்றும் கொள்முதல் ஆகியவற்றில் உறுதியான பின்னணியைக் கொண்டுள்ளார்....

ரசிக கலப்பத்தி

துணை பொது மேலாளர் - நிதி

திரு. ரசிக கலப்பத்தி லங்காபே (தனியார்) நிதி மூலோபாயம்> திட்டமிடல் மற்றும் வரவு செலவுத் திட்டம்> பகுப்பாய்வு> கட்டுப்பாடு மற்றும் அறிக்கையிடல்> முதலீட்டாளர் உறவுகள்> முதலீடு மற்றும்...

லக்ஷ்மன் பள்ளியகுருகே

தலைமை மக்கள் அதிகாரி

திரு. லக்ஷ்மன் பள்ளியகுருகே ஒரு திறமையான மனிதவள மற்றும் நிறுவன அபிவிருத்தி நிபுணராவார். 28 வருடங்களுக்கும் மேலான விரிவான அனுபவமுள்ளவர்> தற்போது LankaPay (Private) Limited இல்...







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander