En  |  සිං



திரு.சனத் மானத்துங்க

இயக்குநர்

திரு. மானத்துங்க அவர்கள் நிர்வாகக் கணக்கியல் மற்றும் வங்கியியல் ஆகியவற்றில் பல்வேறு அனுபவப் பின்னணியைக் கொண்ட ஒரு வல்லுநராவார். இவர் Chartered Institute of Management Accountants – UK (FCMA – UK) மற்றும் Chartered Global Management Accountant (CGMA) ஆகிய நிறுவனங்களில் அங்கத்துவத்துவம் வகித்தலுற்பட உன்னதமான பல தகைமைகளை தன்னகம் கொண்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக (MBA) பிரிவில் சிறப்பு சித்தியுடன் முதுகலை பட்டம் பெற்றுள்ளதுடன் Institute of Bankers – Sri Lanka (FIB)மற்றும் இலங்கையின் சான்றளிக்கப்பட்ட நிர்வாகக் கணக்காளர்கள் நிறுவனத்திலும் (FCMA) அங்கத்துவம் வகிக்கின்றார்.

இலங்கை வங்கியின் பல்வேறு உயர் பதவிகளை திரு. மானதுங்க அவர்கள் வகித்துள்ளார். குறிப்பாக நிர்வாக இயக்குநர்/தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் தற்போது பணியாற்றுவதற்கு முன்பு, அவர் நிர்வாக இயக்குநர்/தலைமை இயக்க அதிகாரியாக இலங்கை வங்கியில் பணியாற்றினார். அவரது வாழ்க்கை முழுவதும், பெருநிறுவன வங்கி, இடர் முகாமைத்துவம் மற்றும் கடன் ஆபத்து போன்ற துறைகளில் அவர் விதிவிலக்கான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 35 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தினை கையகப்படுத்தியுள்ளார்.

திரு. மனத்துங்க அவர்கள் வங்கிக்குள், வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் புனைதலின் பால் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக பெருநிறுவன வங்கி பிரிவில், சேவைகளின் தரத்தை பராமரிக்கும் போது குறிப்பிடத்தக்கதொரு விரிவாக்கத்திற்கு பேருதவியாற்றினார். தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக, தனியார் வங்கி, பெருநிறுவன வங்கி, தகவல் தொழில்நுட்பம், அட்டைகள் மற்றும் எண்ணிம வங்கி போன்ற மூலோபாய வணிக பிரிவுகளை மேற்பார்வை செய்ததுடன் அவற்றை தொழில்துறையில் தன்னிகரற்றதோர் உன்னதமான உயரத்தில் நிலைநிறுத்தினார்.

மேலும், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான வர்த்தக அபிவிருத்திக் கம்பனி பிஎல்சியின் நிர்வாகப் பணிப்பாளராகவும் மாலைத்தீவில் உள்ள உரிமம் பெற்ற வணிக வங்கியான கொமர்ஷல் பேங்க் ஆஃப் மாலத்தீவு பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

அவர் இலங்கை வங்கிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும், கடன் தகவல் பணியகத்தின் பணிப்பாளர் பதவியையும் பெற்றுள்ளார். மேலும், இலங்கை முதலாளிகள் சம்மேளனத்தின் சபை உறுப்பினர், பிரித்தானியாவுடனான வர்த்தக சபையின் நிறைவேற்று உறுப்பினர் மற்றும் இலங்கை பணிப்பாளர் நிறுவகத்தின் உறுப்பினர் ஆகிய கௌரவமிகு பதவிகளையும் இன்றளவிலும் வகித்து வருகின்றார்.

தகவல் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப இடர் முகாமைத்துவத்திற்கான அவரது பங்களிப்புகளுக்காக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டு 2013 இல் நடைபெற்ற EC-Council Global CISO மாநாட்டில் "ஆண்டின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி" என்ற கிடைத்தற்கரிய பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஒட்டுமொத்தமாக, திரு. மானத்துங்க அவர்களின் கடல்போல் விரிந்த அனுபவம், தலைமைத்துவ குணங்கள் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை அவரை வங்கித் துறையில் மரியாதைக்குரிய நபராகவும், பல்வேறு தொழில் மற்றும் கல்வி முயற்சிகளுக்கான மதிப்பு நிறைந்த கூட்டாளியாகவும் நிலைநிறுத்தி நிற்கின்றன.





மற்ற இயக்குநர்கள் குழு







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

2

Event Calander