En  |  සිං



திரு. E. R. டி சில்வா

மேற்பார்வையாளர்

திரு. டி சில்வா அவர்கள் வங்கியியல், நிதி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் கொண்டிருக்கும் அனுபவச் செல்வத்தைத் துணையாகக்கொண்டு LankaPay நிறுவனத்தின் நிர்வாக குழுவிற்கு மேற்பார்வையாளர் எனும் பதவியினூடாக சேவையாற்றி வருகின்றார். கடன் மற்றும் இடர் முகாமைத்திவத்தில் கவனம் செலுத்தி உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளதுடன் சுமார் 50 வருடங்களுக்கும் மேலான தொழில் துறைசார் அனுபவத்தை தன்னகத்தேக் கொண்டுள்ளார்.

HSBC குழுமத்துடன் இணைந்து பணியாற்றியதன் மூலம், திரு. டி சில்வா அவர்கள் கடன் மற்றும் இடர் முகாமைத்துவத்தில் பெறுமதிமிக்க சர்வதேச அனுபவத்தைப் பெற்றதுடன், அந்நிறுவனத்தின் பிரதான கடன் மற்றும் இடர் முகாமைத்துவ அதிகாரியாக பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டின் இறுதியில் HSBC இலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், 2016 இல் இலங்கைக்கு திரும்புவதற்கு ஆயத்தமாகும் முன்னதாக ஐக்கிய இராச்சியத்தில் ஆலோசனைப் பணியின் மூலம் தொழில்துறைக்கு தொடர்ந்தும் பங்களிப்பை வழங்கினார்.

ஆகஸ்ட் 2017 முதல், திரு. டி சில்வா அவர்கள் இலங்கை வங்கிகள் சங்கத்தில் (SLBA) பொதுச் செயலாளராக பணியாற்றினார். அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றதுடன் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய வங்கியாளர் நிறுவகத்தின் உறுப்பினராவார். இவற்றிற்கு வலுசேர்க்கும் விதமாக டி சில்வா அவர்கள் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணியும் ஆவார்.

டி சில்வாவின் விரிவான நிபுணத்துவம் மற்றும் அறிவு அவரை இலங்கையின் வங்கி மற்றும் நிதித்துறைக்கு பெறுமதிமிக்கதொரு சொத்தாக ஆக்கியுள்ளது.





மற்ற இயக்குநர்கள் குழு







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

2

Event Calander